Home

Saturday, March 31, 2012

முகவரி சான்றுக்கு விண்ணப்பம்! How to apply Address proof card?


வங்கி கணக்கு ஆரம்பிக்கவோ, சிம் கார்டு பெறவோ, PAN அட்டை மற்றும் பாஸ்போர்ட் பெறவோ, அல்லது சமையல் எரிவாயு இணைப்பு பெறவோ, நாம் அந்தந்த அதிகாரிகளிடம் தகுந்த முகவரி சான்றை அளிக்கவேண்டியுள்ளது. புதிதாக நகரத்தில் குடிபெயர்ந்தவராக இருந்தாலோ, தனிப்பட்ட முறையில் வணிகம் புரிபவராக இருந்தாலோ அல்லது இதுவரை எந்த முகவரிச் சான்றையும் பெறாதவராக இருந்தாலோ இந்த சேவைகளை பெற இயலாது.

எனவே இந்திய தபால்துறை, குறைந்த செலவில் இந்திய மக்களுக்கு முகவரி சான்றை அளிக்க முன் வந்துள்ளது இந்த அட்டையில் நபரின் கையொப்பம், அலுவலகம் மற்றும் வீட்டு முகவரி, பிறந்த தேதி, இரத்த பிரிவு, அவரின் கையொப்பம் ஆகிய அனைத்தும் இருக்கும்.

Thursday, March 29, 2012

(+2 ) "ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?"

http://www.vikatan.com/aval/2008/apr/25042008/p52a.jpg"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?" என்கிற கேள்வி எழும்போதே "எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'?" என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது. உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது. என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்-து-வத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்-கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி.''

தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க அணு மின்சாரம் அவசியமா?

 முதலில் தமிழகம் மின் பற்றாக்குறை உள்ள மாநிலமே இல்லை. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு போதுமானது மட்டுமின்றி மிகுதியானதாகும். (தமிழ்நாட்டின் மின் தேவை 12,500 மெகாவாட்)  பொதுவாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமது மின் தேவையில் 65 விழுக்காட்டை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும். அத்துடன் மிகச் சிறு அளவை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளும். மீதி 35 விழுக்காட்டை மத்திய அரசு தனது மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும்.

அணு உலைகள் பேராபத்தா அல்லது பாதுகாப்பானதா ?

இந்த அணு உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் அதிலிருந்து தினசரி வரும் கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. ஆனால் கூடங்குளம் அதைப் போன்று இல்லை. அங்கு சுமார் 7 கிலோ மீட்டருக்குள் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். மேலும் 20 கிலோ மீட்டருக்குள் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். கண்டிப்பாக கதிரியக்கத்தால் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

திரு. அப்துல்கலாம் அணு விஞ்ஞானியே அல்ல.

முன்னால் குடியரசுத் தலைவர் , அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் பூகம்பம், சுனாமி ஆகியவை வருவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும், அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்றும் சொல்லியிருக்கிறாரே?
 
ஒரு சிறு திருத்தம். திரு. அப்துல்கலாம் அணு விஞ்ஞானியே அல்ல. அவர் வானூர்திக்கான (auronautical) விஞ்ஞானி. அவருக்கு நிலவியல் (geology), கடலியல் (marine) தொடர்பான ஆராய்ச்சிகளோடு தொடர்பு கிடையாது. மேலும் அவர் அணுகுண்டுத் தொழிற்நுட்பத்திற்கு ஆதரவான கருத்துடையவா. பூகம்பம் வரும் என்றோ, சுனாமி வரும் என்றோ இதுவரை எந்த விஞ்ஞானிகள் முன்னறிவிப்புத் தந்திருக்கிறார்கள். வந்த பின்னர் தான் வந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டி அறிந்து சொல்வதில் நம் அறிவியல் துறை பெரும் தோல்வியையே கண்டுள்ளது.

அணு உலைத் தொழிற்நுட்பத்தின் நன்மை தீமைகள் ..!

கண்டிப்பாகத் தீமைகள் உண்டு. அவை முதன்மையானது கதிரியக்கம் (Radiation). இந்த கதிரியக்கம் மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படும்.
 
இரண்டாவது - கழிவுகள். இந்த பிளக்கப்பட்ட யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியம் என்பது அணுகுண்டு செய்யப் பயன்படும் மூலப்பொருள். அணுகுண்டு ஏற்படுத்திய நாசங்களை நாம் ஏற்கனவே சப்பான் நாட்டின் கிரோசிமா, நாகசாகி நகரங்களில் பார்த்துவிட்டோம். இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது, எப்படிப் பாதுகாப்பது என்பதை உலக விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும்.

அணு உலையின் தொழில் நுட்பம் & அணு மின்சாரம் தயாரிப்பு முறை..!

உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) ‘டைனமோ’வில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். இது போன்ற பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது).

Monday, March 26, 2012

நாம் அறிந்திராத சில புதுமையான விசயங்கள்…..


குரங்குகள் மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் மிக அதிகமான மலைப் பகுதியில் குரங்குகளை பார்க்க முடியுமா?... முடியும். சீனா திபெத்திய பீட பூமியின் தென்பகுதிகளில் காணப்படும் தங்க நிறக் குரங்குகள் 10 ஆயிரம் அடி உயரமான மலையில் அதிகம் வசிக்கின்றன. 
இது அபூர்வ வகை இனக் குரங்காகும். பனி காலத்தில் இவை கடும் குளிரைத் தாங்க முடியாமல் மலையடிவாரத்திற்கு வந்து விடும். இதன் உடல் நீள அளவிற்கு வாலின் நீளமும் இருக்கும். வால் இரண்டரை அடி நீளம் வரை வளரும். அண்மையில் சீனாவின் சான்டோங் நகரில் உள்ள மிருககாட்சி சாலையில் தங்க நிற பெண் குரங்கு ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. அந்தக் குட்டியை முதன் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதித்தார்கள்.

Monday, March 19, 2012

இந்தியா டுடே'யின் பயங்கரவாதம்!

சுதந்திர நாள் என்றாலே காவல் துறை அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி, “சார்! தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?'' என்பதுதான். அதற்கு அவர், மூன்று அல்லது நான்கு முஸ்லிம் பெயர்களைச் சொல்லி, அவர்களை எல்லாம் கைது செய்து பாதுகாப்பை தீவிரப்படுத்தி விட்டோம் என்பார். கைது செய்யப்பட்டவர்களின் உண்மையான பின்னணி குறித்தெல்லாம் கேள்விகள் ஏதும் கேட்காமல், போலிசார் கொடுக்கும் ‘ஒற்றைப் பத்தி' செய்திக்காக காவல் துறை சொன்னதை அப்படியே அடுத்த நாள் பத்திரிகைகளில் வாந்தியெடுத்து, தங்களின் விசுவாசத்தைக் காட்டுபவர்கள்தான் இங்குள்ள பத்திரிகையாளர்கள். 

அளவில் சிறிய.... ஆற்றலில் பெரிய.... அதிசய மூளை!

ஒரு சராசரி மனிதனுடைய மூளையின் எடை 1300g முதல் 1400gவரை ஆகும் .இது யானையின் மூளையின் ஏடையை விட மிக அதிகமானதாகும். யானையின் மூளையின் எடை 800g. நமது உடம்பு முழுவதும் உள்ள மொத்த ஆக்சிஜனில் 20% ஐ மூளை தனது தேவைக்கு எடுத்து கொள்கிறது.

மூளையில் மொத்தம் 100 பில்லியன் நியுரோன்கள் உள்ளன. இது பூமியிலுள்ள மொத்த மக்கள் தொகையைப் போல் 166 மடங்கிலும் அதிகமானது.மூளையின் நான்கில் மூன்று பங்கு முழுவதும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது.

Saturday, March 17, 2012

எக்ஸாம் டிப்ஸ் – பயம் இல்லை.... ஜெயம்!


வருடம் முழுதும் நன்றாகப் படித்தால் மட்டும் போதாது. கடைசி நேரத்தில் பதறிவிட்டால் மொத்த உழைப்பும் வீண். வில்லிலிருந்து கிளம்பும் அம்பாக மனமும் உடலும் இருப்பது தேர்வுக்கு அவசியம். அதற்க நிபுணர்கள் சொல்லும் ஆலேசானைகள் என்ன?
 
“மாணவர்களுக்கு அவங்களோட பெற்றோர்தான் பதற்றத்தை ஏற்படுத்தறாங்க. சில பசங்க எவ்வளவு திட்டினாலும் அலட்டிக்க மாட்டாங்க. சில பசங்க லேசா கோபப்பட்டாலே இடிஞ்சு போய் உட்கார்ந்திடுவாங்க. பசங்களோட மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டு பெற்றோர் செயல்படணும். முதலில் தங்கள் குழந்தைகள் படிப்பில் கெட்டியா, சுமாரா, வெகு சுமாராங்கிறது பெற்றோருக்குத் தெரிஞ்சிருக்கணும்.

கறிவேப்பிலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா...!

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பி லையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. 

Friday, March 16, 2012

உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் (Wall nut)

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். 

உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் !

நாகரிகம் வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் மேலை நாடுகளில் கூட சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு உண்டு. உதாரணமாக அமெரிக்காவில் பல ஆண்டுகளாய் அடிமைகளாய் ஒடுக்கப்பட்டு நடத்தப்பட்ட கருப்பினத்தவருக்கு இட ஒதுக்கீடு உண்டு.  நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் மத்திய மாநில அரசுகளில் ‘குரூப் ஒன்று சர்வீசுகள்’ என்ற பகுப்பு கோலோச்சும் அரசுப்பதவிகளாகும். இந்த பதவிகளில் மக்கள்தொகையின் இன சதவீதத்துக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மையாக அமர்ந்து இருப்பவர்கள் யார்? தனியார் மற்றும் அரசுத்துறைகளில் துறைத்தலைவர்கள், இயக்குனர்கள்,முதன்மை செயலாளர்கள், அமைச்சர்களின் செயலாளர்கள் இப்படி அதிகாரத்தை வைத்திருக்கிற பதவிகள் இன்றும் யாரிடம் இருக்கின்றன.

Thursday, March 15, 2012

உடல் வலிகளும் காரணங்களும் - அறிய வேண்டிய மருத்துவம்!

எப்போதாவது கடுமையான வலி ஏற்பட்டு அவசரம், வேலைப்பளு அல்லது மருத்துவச் செலவு காரணம் அதை அலட்சியப் படுத்தியிருக்கிறீகளா? ஜாக்கிரதை! சில வலிகள் பெரும் ஆபத்தின் எச்சரிக்கைகளாக வரும். அப்படிப்பட்ட வலிகளை மருத்துவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள் தொடர்ந்து படியுங்கள்.
1. மிகமோசமான தலைவலி: தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜல தோசத்தாலும் தலவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான் வலிக்கு உட்னே மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

Wednesday, March 14, 2012

சிறுநீரக கற்கள் (கிட்னி ஸ்டோன்) வராமல் தவிர்ப்பது எப்படி..?

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். ‘கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.

ரூ.2.84 லட்சத்தில் கிடைத்த புற்றுநோய்க்கான மாத்திரைகள் இனி ரூ.8,880 மட்டுமே..

ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்குக் காப்புரிமை சட்டத்தின் சிறப்புச் சலுகைக்கான உத்தரவு அளிக்கப்பட்டதன் உடனடிப்பயன், ரூ.2.84 லட்சத்தில் கிடைத்த புற்றுநோய்க்கான நெக்ஸவார் மாத்திரைகள் இனி ரூ.8,880-க்குக் கிடைக்கும். சிறுநீரக மற்றும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இந்த மாத்திரைகள் ஒரு மாதத் தேவைக்கேற்ப 120 மாத்திரைகள் அடங்கிய பெட்டியாகப் பன்னாட்டு மருந்து நிறுவனமாகிய பேயர் விற்பனை செய்துவந்தது. இந்தியாவில் இதன் விலை ரூ.2.84 லட்சம்.இந்த மாத்திரை தயாரிப்புக்கான அடிப்படை மூலக்கூறு கலவைக்குப் பேயர் நிறுவனம் சர்வதேச காப்புரிமை பெற்றுள்ளது. 

Tuesday, March 13, 2012

ஓபன் ஹார்ட் சர்ஜரி, பைபாஸ் சர்ஜரி (Open heart, By pass) எப்படி செய்கிறார்கள்?

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். 1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரிவடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன.

Monday, March 12, 2012

சவூதி: குறுஞ்செய்தி மூலம் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலையை (நிடாகத்) அறிந்து கொள்ளலாம்!


ரியாத்: சவூதி தொழிலாளர் அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கை ஒன்றில் சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது நிறுவனங்கள் பற்றிய (நிடாகத்) நிலை பற்றி அறிவதற்கு புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

Saturday, March 10, 2012

ஒசாமா கடலில் அடக்கம் செய்யப்பட வில்லை-விக்கி லீக்ஸ்

பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா வசித்ததாக கூறப்பட்ட வீட்டில் புகுந்து அமெரிக்காவின் கடற்படையின் ரெட் ஸ்கூவாட்ரன் சீல் பிரிவைச் சேர்ந்த (Red Squadron of navy seals ) கமான்டோக்கள் அவரை 2-6-2011 அன்று சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கொல்லப்பட்டதும் அதிவேகமாக அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டு விட்டதாகவும் அன்றைய அமெரிக்க பத்திரிகைகள் கூறின. முறைப்படி அடக்கம் செய்யாமல் எப்படி கடலில் வீசலாம் என்ற எதிர்ப்பு சில இஸ்லாமிய நாடுகளிலிருந்து கிளம்பியதும் முறைப்படி இஸ்லாமிய சடங்குகள் செய்த பின்னரே கனமான பாலித்தீன் பையிலிட்டு பெட்டியில் வைத்து கடலில் அடக்கம் செய்யப்பட்டது என்று அடுத்த பல்டி அடித்தனர்.

டீசலுக்கு மாற்றாக “புன்னை” மர எண்ணெய்..! விவசாயி சாதனை


அறிவிக்கப்படாத மின் வெட்டு.. தலை விரித்தாடும் டீசல் தட்டுப்பாடு, என்று கடந்த சில மாதங்களாக தமிழகமே திண்டாட்டத்தில் இருக்கிறது. பம்ப்செட்டை நம்பியிருக்கும் பயிர்கள் எல்லாம் தாகத்தில் தவிக்கின்றன. ‘இதே நிலை நீடித்தால் விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லை’ என்றபடி விவசாயிகள் பலரும் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவர விவசாயி ராஜசேகரோ.. மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னை... !” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்குதேவைப்பட்ட போதெல்லாம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.. புன்னை எண்ணெய் புண்ணியத்துல !ஆம்.. பம்ப்செட் மோட்டாருக்காக முழுக்க முழுக்க இவர் பயன்படுத்துவது புன்னை எண்ணெயைத்தான் ! இதைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே..

Friday, March 9, 2012

இயற்கை தந்த பொக்கிஷம்! இளநீர்


*மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். *இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. *இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

Thursday, March 8, 2012

வீட்டு மனை பத்திரம் பதிவு செய்வது எப்படி?


கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை வைத்து விரும்பிய இடத்தில் வீடு, நிலம், காலி மனை போன்ற சொத்தை கிரையமாக வாங்குவோம். அதை நாம் முழுமையாக அனுபவிக்க பதிவு செய்ய வேண்டும். வீடு மற்றும் வீட்டு மனை வாங்கும் போது மூலப்பத்திரத்தை வைத்து கண்டிப்பாக வில்லங்கம் பார்க்க வேண்டும். ஏன் என்றால் வீடு, வீட்டு மனையை வங்கி கடன் அல்லது வேறு ஏதாவதுக்கு அடமானம் வைத்திருக்கலாம். சொத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என பிரித்து சதுர அடிக்கு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாய்வுத்தொல்லையும் அதற்கான தீர்வுகளும்.....

சராசரியாக, ஒரு இந்தியன் ஒரு நாளில் 2-4 தடவை அபான வாயுவை வெளியேற்றுகிறான். இந்த வாயு நாற்றமில்லாமலே இருக்கலாம். இதை அடக்குவது கூடாது என்கிறது மருத்துவ உலகம். அபான வாயு உடலிலி ருந்து பிரிவதை யாருமே விரும்புவதில்லை. பலர் முன்பு இது ஏற்பட்டால், தர்ம சங்கடமாக நாம் நினைக்கிறோம்.

வாயின் வழியே உள் நுழையும் காற்று இரப்பையால், ஏப்பமாக திருப்பி அனுப்பப்படும். வயிற்றிலிருந்து வாய்வும், மலமும் வெளியேறுவது நல்லது. இவை தேங்கிவிட்டால்தான் பிரச்சனை. ஜீரண மண்டலத்தில் அதிக வாயு உணடானால், அதை வெளியேற்ற பல வழிகள் மேற்கொள் ளப்படுகிறது. 

மூலத்தின் (Piles) மூல காரணங்களும் அதன் வகைகளும்....

1. மலக்குடல் இரத்தக்குழாயில் ஏற்படும் மாறுபாடுகளால் உண்டாகும் ஒரு நோய்தான் மூலநோய்.

2. உணவு மற்றும் வேலைச் சூழல் காரணமாக உடலில் ஏற்படும் மாறுபாடு மலத்தை கெட்டியாக்கி விடுகின்றன.

3. நார்ச்சத்துள்ள பொருட்களைச் சாப்பிடாமல் இருப்பது, குறிப்பிட்ட இடைவெளிகளில் தண்ணீர் அருந்தாமல் இருப்பது ஒரே இடத்தி லேயே நீண்ட நேரம் அமர்ந்திருப்பது போன்ற காரணங்களால் இது ஏற்படும்.

Sunday, March 4, 2012

அழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்!

உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கான பணிகளை மட்டும் செய்வதில்லை. அவை மேனி எழிலை பாதுகாக்கவும், செய்கின்றன. நாம் சமையலறையில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக திகழ்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.

நான் போலீஸ் இல்ல பயங்கரவாதி!

இணையதளத்தில் எங்கு திரும்பினாலும் வங்கி கொள்ளையர்களை சுட்டு கொன்ற போலீசாருக்கு பாராட்டு என்று செய்திகள். இது போலீஸ்காரர்களை பாராட்டும் விஷயம் இல்லை. இது போலீசாரின் கையாலாகாத தனத்தை, கோழைத்தனத்தை, பயங்கரவாதத்தையே காட்டுகிறது. வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக அவர்களை சுட்டு கொல்லும் அளவுக்கு போக வேண்டியதன் அவசியம் என்ன?