Showing posts with label இணையதளம். Show all posts
Showing posts with label இணையதளம். Show all posts

Friday, March 1, 2013

இணையமும் குழந்தைகளும்....

புத்தாண்டில், வளர்ந்த உங்கள் செல்வத்திற்கு கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி, ஐ பேட், லேப்டாப் என ஏதேனும் டிஜிட்டல் சாதனம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளீர்களா? பாரட்டுக்கள். அத்துடன் அவர்களுக்கு, அவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மை தீமைகளை எடுத்துக் கூறி, என்ன என்ன செய்யக் கூடாது என அறிவுரை என்றில்லாமல், டிப்ஸ் எனப்படும் பயன்குறிப்புகளைத் தரவும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாமா!

1.நேர எல்லைகள்:

டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர், விரைவில் அதற்கு அடிமையாகும் பண்பு சிறுவர்களுக்கு வந்துவிடுகிறது. எனவே, பக்குவமாக, ஒரு நாளில், எந்த எந்த வேலைகளுக்கு அவற்றை, எவ்வளவு நேரம் அதிக பட்சம் பயன்படுத்த வேண்டும் என்பதை, விளக்கமாக எடுத்துரையுங்கள்.

Thursday, February 28, 2013

வேலை தேட கைகொடுக்கும் இணையதள‌ம்.

வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்!அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும். நல்ல பயோடேட்டாவிற்க்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன.இவை மேலும் குழப்பலாம்.

Saturday, July 7, 2012

9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸிடமிருந்து உங்கள் கணினியை காப்பாற்ற...


இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.

DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.

Thursday, December 22, 2011

ஆன்லைனில் - WINDOWS SKY DRIVE - 25GB சேமிப்பகம் இலவசம்!


கணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற Cloud Computing முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும்.

Sunday, December 18, 2011

இணைய இணைப்பு (Internet connection) எப்படி இயங்குகிறது?


எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

Sunday, November 27, 2011

இணையதளத்தில் ரகசியமாக உங்களை கண்காணிக்கும் உளவு நிறுவனங்கள்!

நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன.  இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன.

Saturday, August 27, 2011

பதிவிறக்கம் செய்ய சில ஆலோசனைகள்! Tips for download,,,


நாம் பல பைல்களை இணைய தளங்களிலிருந்து அடிக்கடி டவுண்லோட் செய்கிறோம். இந்த பைல்கள் பி.டி.எப்., ஸிப் ஆர்க்கிவ், வேர்ட் என ஏதோ ஒரு பார்மட்டில் இருக்கலாம். பல வேளைகளில் டவுண்லோட் செய்த பின்னர் தான், இந்த பார்மட் பைல் என்றால், இதனை டவுண்லோட் செய்தி டாமல் இருந்திருக் கலாமே என்று எண்ணு கிறோம். ஏனென்றால், அதனைத் திறந்து பார்ப்பதற்கான புரோகிராம் இல்லாமல் இருக்கலாம். அல்லது நாம் மேற்கொண்டு திட்டமிடும் வேலைக்கு அது உகந்ததாக இருக்கலாம்.

Friday, July 29, 2011

மொபைல் போன், ஐபோன் போன்றவற்றை பயன்படுத்துவதால் ?


மொபைல் போன், ஐபோன் போன்றவற்றை பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படுகின்றன என்ற நிலையில், மொபைல் போனை, உடலில் இருந்து 1.5 முதல் 2.5 செ.மீ., தூரத்தில் வைத்து பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் மொபைல் போன் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதுவரை ஒருவர், மற்றொருவருடன் தொடர்பு கொள்ள வீட்டில் உள்ள போனையோ அல்லது போன் பூத்தையோ பயன்படுத்தவேண்டும் என்று இருந்த நிலையை மொபைல் போன் வரவு தகர்த்தது.

Wednesday, June 29, 2011

கணினி, இணையதள வேகத்தை கூட்ட சில தீர்வுகள்...!


இணைய தளங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களில் வேகமாக இறங்கவில்லையா? கம்ப்யூட்டர் வாங்கிப் பழசாகிவிட்டது என்று மட்டும் எண்ணி, ஒன்றும் செய்திடாமல் இருந்துவிட வேண்டாம். கம்ப்யூட்டரின் வேகம், அதனை நாளுக்கு நாள் பயன்படுத்துகையில் ஏன் குறைகிறது என்றும், அதற்கான தீர்வுகள் என்ன-என்ன? இணைய வேகம் குறைய, கம்ப்யூட்டர் மட்டுமின்றி, வேறு சில விஷயங்களும் காரணமாக இருக்கலாம். அவற்றில் சிலவற்றிற்கான தீர்வுகளை இங்கு காணலாம்.

Wednesday, June 22, 2011

Google introduced Tamil Translation for Major Lanuguages

Google Translate
அன்பின் தமிழ் நெஞ்சங்களே! கணனித் துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இன்று பூர்த்தி செய்துள்ளது.

Tuesday, April 19, 2011

விரல் நுனியில் இணைய நூலகங்கள் (E-Library)...


கல்வி அறிவிற்காக நாம் அன்று நூலகங்களை தேடி ஓடிய நாட்கள் உண்டு இன்று நம்மை தேடி அத்தனை நூலகங்களும் விரல் நுனியில் நம் இல்லம் தேடி வந்து விட்டது . ஆம் இன்று மின் நூலகங்கள் எனும் பெயரில் வகைவகையான ஏராளமான புத்தகங்களை நாம் இணையதளத்தில் பார்க்கலாம் படிக்கலாம். நாம் கல்வி அறிவை உயர்த்த கல்லூரிகள், நூலகங்கள் என தேடிச் செல்ல வேண்டாம். அவையனைத்தும் இன்று நம் இல்லத்திலே பெறமுடியும். அதில் நம் பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும்  பயன்தரும் சில இணைய தளங்களை தங்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன்...

Saturday, April 9, 2011

பாலியல் (sex) தளங்களுக்குத் தடா....!



இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வீடுகளிலும் பள்ளிகளிலும், குழந்தைகளை இது போன்ற பாலியல் தளங்களையும், ஏமாற்றும் தளங்களையும் அடையாளம் கண்டு பாதுகாப்பது சிரமமான காரியமாக உள்ளது. இணையத்தில் கே9 வெப் புரடக்ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் இது போன்ற தளங்களை வடிகட்டும் சாப்ட்வேர் ஒன்று தரப்பட்டுள்ளது.

Tuesday, March 22, 2011

ஹேக்கிங் என்றால் என்ன?

இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் "ஹேக்கிங்" (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும். உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.