Showing posts with label பங்குச்சந்தை. Show all posts
Showing posts with label பங்குச்சந்தை. Show all posts

Saturday, August 13, 2011

அமெரிக்காவுக்கு நேரம் சரியில்லை... உலகத்துக்கும் தான்.!


எது நடக்கக் கூடாது என்று உலகம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததோ அது கடந்த சனிக்கிழமை நடந்தேவிட்டது. அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளாக அமெரி்க்காவின கடன் தர வரிசை 'AAA' என்ற அதி உயர் தரத்தில் இருந்தது. அதாவது, கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் AAA என்ற அதி உச்ச நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

Monday, May 2, 2011

ஆன்லைன் பங்கு வர்த்தகம் செய்வது எப்படி? (Online trading)


பங்கு வர்த்தக கணக்கு `டிமேட்கணக்கு தொடங்க 1. `பான்கார்டு நகல், 2. உங்கள் முகவரியுடன் உங்களை அடையாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின் கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல்), 3. உங்களுடைய புகைப்படம், 4.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல் செய்யப்பட்டது) போன்றவற்றை அளிக்க வேண்டும். ஒரு முதலீட்டாளர், `ஆப்லைன்மற்றும் `ஆன்லைன்என்ற இரு பிரிவுகளின் கீழ் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம்.