Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Tuesday, May 3, 2011

ஒசாமாவும் அமெரிக்காவும்,,,,


வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் வீழ்த்தப்பட்டு விட்டார். ஒரு பயங்கர தீவிரவாதியை அமெரிக்கா வீழ்த்தி விட்டது. ஆனால் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால், ஒரு காலத்தில் இதே பின்லேடன் எந்த அளவுக்கு அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது தெரிய வரும், கூடவே ஆச்சரியமும் சேர்ந்து வரும். உலகிலேயே பெரும் விலை வைக்கப்பட்ட தீவிரவாதி பின்லேடன்தான். அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை வைத்திருந்தது அமெரிக்கா. அப்படிப்பட்ட லேடனை, அப்போத்தாபாத்தில் வைத்து வீழ்த்தி விட்டது அமெரிக்கா.

Friday, April 15, 2011

ஆழிப்பேரலை (Tsunami) எப்படி ஏற்படுகிறது..!

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு.

Thursday, April 14, 2011

பிரான்ஸில் தடை புர்காவிற்கா அல்லது முகத்திரைக்கா...?


ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை 11.04.2011 முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இப்போது முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

Wednesday, April 13, 2011

சவூதியில் பயங்கர புழுதிக்காற்று!


ரியாத்: சவூதி தலைநகர் ரியாதில் இன்று மாலை 5 மணி முதல் கடுமையான புழுதிக்காற்று வீசத்தொடங்கியது காற்று வீசிய சற்று நேரத்திற்கெல்லாம் ரியாத் முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளிக்க தொடங்கியது.