Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Thursday, April 11, 2013

சவூதி "ஆஸாத் விசா" விதிமுறை மீறல் மற்றும் அபராதங்களின் பட்டியல்"

சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள "விதிமுறை மீறல் & அபராதங்களின் பட்டியல்" (08.04.2013 தேதிப்படி) வெளியிட்டுள்ளது அதனை
இங்கு பதிவிட்டு உள்ளோம் பார்க்கும் சகோதரர்கள் பிறருக்கும் கொண்டு செல்லுங்கள்....

1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (எக்ஸ்பைரி தேதி) 3 நாட்கள் முன்னதாக, இக்காமாவை புதுப்பிக்க (ரெனிவ் செய்ய) சமர்ப்பிக்க வேண்டும்.

மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்

2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது, தகுந்த காரணங்கள் அன்றியே அல்லாமல், காண்பிக்க வேண்டும்

மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்

Wednesday, April 3, 2013

'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்பவர்களே..... உஷார் ... உஷார்!

நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம். நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும், பலர் விசிட் விசா அல்லது ஃப்ரீ விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வருபவர்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை. விசிட் விசா மற்றும் ஃப்ரீ விசாவில் வருபவர்களுக்குத் தான் சிக்கல்கள் அதிகம். விசிட் விசாவில் வருபவர்கள் தொழிலாளர் விசா கிடைக்காமல் தலைமறைவாக ஒளிந்து கொண்டு வேலை செய்து பிழைப்பதும், ஃப்ரீ விசாவில் வருபவர்கள் கிடைக்கும் வேலையை விசாவுக்கு சம்பந்தமில்லாத இடங்களில் செய்து பிழைப்பதும் தான் தற்போதைய சவூதி அரேபியாவின் நிலை.

Tuesday, March 26, 2013

மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா...?

இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது.  ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.

இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின்கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது . அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களை ப் பயன்படுத்துகிறது

Thursday, February 21, 2013

'இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி’ துறையில், கரையக்கூடிய (Bioabsorbable Stent) ஸ்டென்ட்

இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அதைச் சரிப்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்க உருவாக்கப்பட்டதுதான் ஸ்டென்ட். இது உலோகத்தால் ஆன வலை போன்ற அமைப்பைக்கொண்டது. ரத்தக் குழாய் வழியே சிறிய கம்பி போன்ற கருவியைச் செலுத்தி, இதயத்தில் ஏற்படும் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கும் 'இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி’ துறையில், கரையக்கூடிய (Bioabsorbable Stent) ஸ்டென்ட்களின் வருகை ஒரு புதிய புரட்சி. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இந்த ஸ்டென்டைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.

Friday, February 15, 2013

தூக்குத் தண்டனை குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி!

கருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போடுவதால் தண்டனைக் குறைப்பு கோருவது நியாயம்தான்...

2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் ஏ.கே.கங்குலி, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தீர்ப்பளித்தவர். இப்போது மேற்கு வங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவர், ‘பிரண்ட்லைன்’ பத்திரிகைக்கு அவர் தூக்குத் தண்டனை தொடர்பாக அளித்த பேட்டியில் வெளியிட்ட சில முக்கிய கருத்துகள்.

• ‘அரிதிலும் அரிதான’ வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்க முடியும் என்று ‘பச்சன்’ வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் வலியுறுத்தப்பட்ட நெறிமுறை மீறப்பட்டு பல வழக்குகளில் தவறாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது உண்மை. இருந்தவரை நான் ஒப்புக் கொள்கிறேன்.

Thursday, February 14, 2013

ஓட்டுனர்களுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:


* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

Tuesday, February 12, 2013

புற்று நோய் விழிப்புணர்வு (Cancer awareness) பற்றி அறிந்து கொள்ளுங்கள்...



ஆண்களுக்கு, நுரையீரல், வயிறு, கல்லீரல், உணவுக்குழாய், ப்ராஸ்டேட் புற்றுநோயாலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு மற்றும் கர்ப்பப்பைப் புற்றுநோயாலும் அதிக அளவில் உயிர் இழப்பு நேரிடுகிறது. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்து வதால் ஏற்படும் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களுக்கும், 18 சதவிகித பெண்களுக்கும் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

இப்போது எல்லாம் சினிமா பார்க்க தியேட்டருக்குப் போனால், முதல் காட்சியே குலை நடுங்கவைக்கிறது. புகையிலையின் அபாயத்தைப் பொளேரென விளக்கும் வகையில் சிலருடைய புற்றுநோய்ப் பாதிப்புத் துயரங்கள் விளம்பரப் படமாகத் திரையில் விரிகிறது. அதிர்ச்சியில் உறைகிறது நெஞ்சம்.

புற்றுநோய் குறித்து உங்களை மேலும் அச்சப்படுத்துவதற்காக அல்ல இந்தக் கட்டுரை. புற்றுநோய் குறித்த அபாயத்தை முழுக்க உணர்ந்து, நம்மை நாமே நெறிப்படுத்திக்கொள்வதற்கான வழிவகையை உருவாக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

Sunday, January 27, 2013

ஏன் இந்த ‘விஷ்வரூபம்’...? மனம் திறக்கிறார் படத்தை தணிக்கை செய்த ஹசன் ஜின்னா

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றாமல் அதை அணைப்பதற்குத் தண்ணீர் குடம் ஏந்தும் கைகள் தேவைப்படுகின்றன. விஸ்வரூபம் படம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்கள், கண்டனங்கள் அதன் எதிரொலியாக விதிக்கப்பட்டுள்ள தடை இவற்றின் காரணமாக, அந்தப் படத்தைத் தணிக்கை செய்த உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதால் என்னை பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிப்படுகின்றன.

தடையை நீக்கக்கோரும் வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாலும், அதுபோலவே, சென்சார் விதிமுறைகளின்படியும், படத் தணிக்கையில் ஈடுபட்டவர்கள் தணிக்கையின் போது நடந்த விவாதத்தையோ அல்லது படம் குறித்த விமர்சனத்தையோ தெரிவிக்கக்க்கூடாது என்பதாலும் நான் சட்டவிதிகளுக்கும் நீதிமன்ற நடைமுறைகளுக்கும் உட்பட்டே கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.

ஹாலிவுட்டில் பட வாய்ப்பும்,ஆஸ்கர் விருதும்......

இஸ்லாத்தை அவமதித்து படம் எடுத்தால் ஹாலிவுட்டில் பட வாய்ப்பும்,ஆஸ்கர் விருதும் கிடைக்குமா? வழக்கமான கமல் படங்களை போல இதிலும் எங்கெங்கும் எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராமண வாடை.. பேச்சு, பெயர்கள், கலாசாரம் என்று சகலத்திலும் பிராமண நெடி. வெள்ளைக்காரனை வெற்றிகரமாக காப்பியடித்து பெருமைப்படுவது பைத்தியக்காரத்தனம்.

திரைக்கதையிலும் பெரிய சாமர்த்தியம் இல்லை.. பார்த்து பார்த்து புளித்த போன ஹாலிவுட் முறைகள்.. குறிப்பாக நம்மவர்களை ஈர்க்க போவது ஒரு காட்சி.. தொழுகை செய்வதாக சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் அத்துணை பேரையும் துவம்சம் செய்யும் காட்சி.. அதிலும் குறிப்பாக நொடி நேரத்தில் செய்த அசகாய சண்டையை Slow Motion ல் விளக்குவது.. ஆனால் இது Sherlock Holmes (2009) படத்தில் வரும் குத்துசண்டை காட்சியின் அப்பட்டமான காப்பி.. மேலும் அது தேவைப்படும் அளவுக்கு இது ஒன்றும் ஜாக்கிசான், ப்ரூஸ்லீயின் அதிவேக சண்டை இல்லை..

Wednesday, January 23, 2013

காவி தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை -

காவி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே. அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம்; ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!

Tuesday, January 22, 2013

"மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத்" வீர வரலாறு

Freedom Fighter shaukat hayat –
 Indian Army Colonel

நாம் இந்தியர்கள்.... ஆனால் நமது சகோதரர் இவர் வரலாற்றில் இருந்து காவி கயவர்களால் மறைக்க பட்டது.... நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் படைகளை ஓடஓட விரட்டி இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத் பற்றிய வீர வரலாறு இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும்.

இந்திய சுதந்திரப் போரில் செறுகளமாடிய மாவீரர்கள் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் பல இந்த நாடு அறிந்தே உள்ளது. ஆனால் இரண்டாம் உலகப்போர் உலகையே இருகூறாக மாற்றியது. பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் நேசப்படைகளும், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் அச்சு நாடுகள் என்ற பெயரில் ஓர் அணியும் மிகப்பெரிய யுத்தத்தில் இறங்கின.

Monday, November 26, 2012

முக்கிய ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?


எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளை என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

Sunday, November 11, 2012

ஏன் ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர்?

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?  இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்? இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?

இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?ஏன் கஷ்மீரில் தீவிரவாதம் அதிகரிக்கிறது ?மேலும் முஸ்லிம்கள் மீது சுமத்த படும் பல பொய் குற்றசாட்டுகளுக்கும் மிகவும் அற்புதமாகவும்,ஆழமாக சிந்தித்தும் இந்த கட்டுரையில் விளக்கம் அளித்துள்ளார் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள்.....

Tuesday, June 26, 2012

நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?


பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71). சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.
ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).

Monday, June 25, 2012

கைது நடவடிக்கையில் போலிஸ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!

குற்றவாளி ஒருவரை கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். ஆனால், எந்த அதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்வதில்லை. "நேம் பேட்ஜ்' மட்டுமே அணிந்திருக்கின்றனர்.

கைது செய்தவுடன், அங்கேயே கைது குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வதில்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்திலேயே கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.

கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும். சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

எப்படி நடக்கிறது இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல்...?


உலகின் மிகப் பெரிய குடியரசு இந்தியா என்பதும் இந்தியாவின் குடியரசுத்தலைவருக்கான தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும்குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர்கள் திரு.பிரனாப் முகர்ஜியும் திரு.சங்கமாவும் என்பதும் நாம் அனைவரும் அறிவோம். ஆனால், குடியரசுத்தலைவருக்கான தேர்தல் எப்படி நடக்கிறது ? அதற்கான விதிமுறைகள்என்ன? இந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் நோக்கமே இந்த பதிவு….
குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் யார் போட்டியிடலாம் ?
இந்திய அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவருக்கான தேர்தலில்போட்டியிட பின் வரும் அனைத்து தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்:

Saturday, April 14, 2012

ரேஷன் கடைகளில் முறைகேடா..? உடனே பறக்கும் படையை தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும், உணவுப் பொருட்கள் பதுக்கலைக் கண்காணிக்கவும் பறக்கும் படை அமைக்கப்பட்டும், முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதி ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்றால் பறக்கும் படையினருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கலாம்.

Saturday, March 31, 2012

முகவரி சான்றுக்கு விண்ணப்பம்! How to apply Address proof card?


வங்கி கணக்கு ஆரம்பிக்கவோ, சிம் கார்டு பெறவோ, PAN அட்டை மற்றும் பாஸ்போர்ட் பெறவோ, அல்லது சமையல் எரிவாயு இணைப்பு பெறவோ, நாம் அந்தந்த அதிகாரிகளிடம் தகுந்த முகவரி சான்றை அளிக்கவேண்டியுள்ளது. புதிதாக நகரத்தில் குடிபெயர்ந்தவராக இருந்தாலோ, தனிப்பட்ட முறையில் வணிகம் புரிபவராக இருந்தாலோ அல்லது இதுவரை எந்த முகவரிச் சான்றையும் பெறாதவராக இருந்தாலோ இந்த சேவைகளை பெற இயலாது.

எனவே இந்திய தபால்துறை, குறைந்த செலவில் இந்திய மக்களுக்கு முகவரி சான்றை அளிக்க முன் வந்துள்ளது இந்த அட்டையில் நபரின் கையொப்பம், அலுவலகம் மற்றும் வீட்டு முகவரி, பிறந்த தேதி, இரத்த பிரிவு, அவரின் கையொப்பம் ஆகிய அனைத்தும் இருக்கும்.

Thursday, March 29, 2012

(+2 ) "ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?"

http://www.vikatan.com/aval/2008/apr/25042008/p52a.jpg"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?" என்கிற கேள்வி எழும்போதே "எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'?" என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது. உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது. என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்-து-வத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்-கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி.''

திரு. அப்துல்கலாம் அணு விஞ்ஞானியே அல்ல.

முன்னால் குடியரசுத் தலைவர் , அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் பூகம்பம், சுனாமி ஆகியவை வருவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும், அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்றும் சொல்லியிருக்கிறாரே?
 
ஒரு சிறு திருத்தம். திரு. அப்துல்கலாம் அணு விஞ்ஞானியே அல்ல. அவர் வானூர்திக்கான (auronautical) விஞ்ஞானி. அவருக்கு நிலவியல் (geology), கடலியல் (marine) தொடர்பான ஆராய்ச்சிகளோடு தொடர்பு கிடையாது. மேலும் அவர் அணுகுண்டுத் தொழிற்நுட்பத்திற்கு ஆதரவான கருத்துடையவா. பூகம்பம் வரும் என்றோ, சுனாமி வரும் என்றோ இதுவரை எந்த விஞ்ஞானிகள் முன்னறிவிப்புத் தந்திருக்கிறார்கள். வந்த பின்னர் தான் வந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டி அறிந்து சொல்வதில் நம் அறிவியல் துறை பெரும் தோல்வியையே கண்டுள்ளது.