Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Thursday, April 11, 2013

சவூதி "ஆஸாத் விசா" விதிமுறை மீறல் மற்றும் அபராதங்களின் பட்டியல்"

சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள "விதிமுறை மீறல் & அபராதங்களின் பட்டியல்" (08.04.2013 தேதிப்படி) வெளியிட்டுள்ளது அதனை
இங்கு பதிவிட்டு உள்ளோம் பார்க்கும் சகோதரர்கள் பிறருக்கும் கொண்டு செல்லுங்கள்....

1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (எக்ஸ்பைரி தேதி) 3 நாட்கள் முன்னதாக, இக்காமாவை புதுப்பிக்க (ரெனிவ் செய்ய) சமர்ப்பிக்க வேண்டும்.

மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்

2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது, தகுந்த காரணங்கள் அன்றியே அல்லாமல், காண்பிக்க வேண்டும்

மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்

Sunday, March 10, 2013

அதிரடி தண்ணீர் கொள்கை..... ‘தண்ணி’ காட்டப்போகும் தண்ணீர்'


கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி டெல்லியில் தேசிய நீர் வளத்துறை கவுன்சிலின் 6வது கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய நீர்க கொள்கை 2012 ஏற்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை வகித்தார். கடந்த 2002ம் ஆண்டில் துவங்கி 10 ஆண்டுகளில் ஒரு வடிவத்தை பெற்றுள்ளது தேசிய நீர் கொள்கை. இதை சற்று ஆழ்ந்து பார்த்தால் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் மாநிலங்களின் மீது அதிகாரத்தை செலுத்தும் போக்கை காணலாம். எப்படி மேலே படியுங்கள்: 

Sunday, February 3, 2013

சிறுமி மலாலாவும், அடாவடி அமெரிக்காவும்...

அக்டோபர் 9/2012 அன்று சிறுமி மலாலா சுடப்பட்டாள் என்ற செய்தி உலகையே உலுக்கியது. யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி செய்த போது கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்கும் மேற்கத்திய அந்நிய கல்வி நிறுவனங்களை மூடுமாறு உத்தரவிட்டனர். ஏராளமான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. உடனே தங்கள் ஊடகங்கள் மூலம் உலகம் முழுவதும் தலிபான்களுக்கு எதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விட்டனர் அடாவடி அமெரிக்காவும், அதன் அல்லக்கைகளும். தாலிபான்கள் பெண் கல்வியைத் தடுத்து விட்டனர், காட்டுமிராண்டி ஆட்சி செய்கின்றனர் என்று அலறினார்கள்.

Sunday, January 27, 2013

குண்டுவெடிப்பை படமாக்க திராணி இல்லாதவர்கள்.....

இந்தியாவில் நடைபெற்ற பலகுண்டு வெடிப்பு சம்பவங்களை வெளிக்கொண்டு வர திராணி இல்லாதவர்கள்…இதணை மையாமாக கொண்டு படம் எடுத்து வெளியிட திராணி இல்லாதவர்கள்…ஆப்கானில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு படம் எடுப்பதன் காரணம் என்னவோ??? 

1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?
2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?
5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?
7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?
8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?
9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?
10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

Friday, January 25, 2013

கமல்ஹாசனின் விஸ்வரூபம் தடை: சில கருத்துக்கள் - கோ.சுகுமாரன்


விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. ஒரு மனித உரிமை ஆர்வலன் என்ற முறையில் எந்த கருத்தையும் தடை செய்வதன் மூலம் எதிர்கொள்ள கூடாது என்ற கருத்துடையவன். ஆனால், முஸ்லிம்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்படத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் கூறும் காரணங்களில் முக்கியமானது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என இப்படத்தில் சித்தரிப்பது.

இந்தியாவில் இந்து பாசிசம் தலைத் தூங்கத் துவங்கிய காலத்திலும், அதன் பின்னர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் முஸ்லிம் மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தின. அப்போது இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று போன முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை தேர்வு செய்தனர். இதற்கு சர்வதேச அரசியலும் பின்புலமாக இருந்தது. அப்போதுதான் 'முஸ்லிம் தீவிரவாதம்' என்ற சொல்லாடல் புழகத்திற்கு வந்தது. இவற்றை அரசுகள் எதிர்க்கொண்ட விதமும், அது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.

Wednesday, January 23, 2013

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார்! – திக்விஜய் சிங்

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் நடத்தும் தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வைத்து இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் தீவிரவாத முகாம்களை நடத்திவருவதாகவும், நாட்டில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவற்றை சிறுபான்மையினர் மீது பழிபோடுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியிருந்தார். இதனால் பதட்டமடைந்த சங்க்பரிவாரம் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்களை ஷிண்டே வெளியிடவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Sunday, January 20, 2013

ஆர்.எஸ்.எஸ் ரகசிய தீவிரவாத பயிற்சி முகாம்களை கண்டு பிடிக்க காடுகளில் தேடுதல் வேட்டை..!

இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் இருந்து செயல்பட்டுள்ளன என்கிற உண்மை தேசிய புலனாய்வு துறை கண்டுபிடித்தது.

1). மலேகன் குண்டு வெடிப்பு: மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் முஸ்லிம்கள் தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் பயங்கர குண்டு வெடிப்பில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். மலேகன் நகரமே ரத்தமயமானது பிய்ந்துப்போன சதைகளுடன் மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

பேஸ்புக் : பாலியல் வன்முறையின் புதிய ஆயுதம் !



நண்பர்கள் வட்டத்தை பெருக்குகிறோம், எங்களுடன் எல்.கே.ஜி முதல் கல்லூரியில் படித்த அனைவரையும் இணைக்கிறோம்’ என்று நோக்கத்துடன் பேஸ்புக்கில் சேருபவர்கள் பின்னர் போலியான அடையாளங்களுடன் தமது நோக்கங்களை நிறைவேற்ற முனைகின்றனர். பதின்ம வயதினர் மட்டும் இன்றி, 13 வயதுக்கு குறைவான குழந்தைகள் கூட பெற்றோரின் துணையுடன், பொய்யான வயதைக் குறிப்பிட்டு பேஸ்புக்கில் தங்களை இணைத்துக்கொண்டு வாழ்க்கையில் இதைச்செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் வாழ்கின்றனர்.

Friday, June 22, 2012

28 மாதங்களில் 30 தூக்குதண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு.... பிரதீபாவின் சாதனை

 ஓவ்வொரு குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விடைபெறும்போது, அவர்களது பதவிக்காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் என்று சொல்லிக் கொள்ள ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் இருக்கும். சுதந்திர இந்தியாவின் 12-வது குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு விடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்கிற பெருமைக்குரிய பிரதிபா பாட்டீலின் சாதனை பெருமிதப்படத் தக்கதுதானா என்பதில்தான் நமக்குச் சந்தேகம் எழுகிறது.கொலைக் குற்றவாளி உள்ளிட்ட எந்தக் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. 

Monday, April 2, 2012

அப்பாவி பலஸ்தீனர்களை கொன்று உடல் உறுப்புக்ளை திருடும் யூத இராணுவம் !!!

சில வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீன கைதிகளை கொன்று உடல் உறுப்புகளை திருடுவதாக ஸ்வீடிஷ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அப்போது இஸ்ரேலிய அரசு, அதை "யூத விரோத பிரச்சாரம்" என மறுத்திருந்தது. தற்போது அரச மட்டத்திலேயே குறிப்பிட்ட குற்றச்சாட்டு உண்மை தான் என ஒத்துக் கொண்டுள்ளனர்.இப்படி ஒரு மனித தன்மையே இல்லாமல் அப்பாவி மக்களின் உயிர் களும் உடமைகளையும் நிதம் நிதம் சுராடும் திருடன் இஸ்ரேலுக்கு ஒரு நல்ல பாடம் கூடிய சீக்கிரத்தில் கற்பிக்கத்தான் போகிறார்கள் .

Monday, March 12, 2012

சவூதி: குறுஞ்செய்தி மூலம் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலையை (நிடாகத்) அறிந்து கொள்ளலாம்!


ரியாத்: சவூதி தொழிலாளர் அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கை ஒன்றில் சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது நிறுவனங்கள் பற்றிய (நிடாகத்) நிலை பற்றி அறிவதற்கு புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

Thursday, January 19, 2012

முஸ்லீம் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்ட ஆந்திர முதல்வர்....

ஹைதராபாத் : 2007ல் நடந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் காவல்துறையில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்ட 70 முஸ்லீம் இளைஞர்கள் பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுதலைசெய்யப்பட்டனர். இது போன்று பல வழக்குகளில் குற்றவாளிகள் என கைது செய்யப்படுபவர்கள் பின் அப்பாவி என விடுதலை செய்யப்பட்டாலும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை. 

புயல் நிவாரணம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... நிதி இல்லாமல் நடக்கும் கண் துடைப்பு நாடகம்!

விவசாய நிலங்களை புயல் சூறையாடிச் சென்று 15 தினங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னமும் முழுமையான அடிப் படை வசதிகள் கிடைக்கவே இல்லை. தமிழகத்தில் 5,250 கோடி சேதம் என்றும் புதுவையில் 2,475 கோடி சேதம் என்று கணக்கிட்டு, மத்திய அரசிடம் நிதிஉதவி கேட்கப்பட்டது. பாதிப்புகளைப் பார்வையிட்ட மத்தியக் குழுவும், 'பாதிப்பு அதிகம்தான்...’ என்று ஒப்புக்கொண்டு முதல் கட்ட மாக தமிழகத்துக்கு 500 கோடியும் புதுவைக்கு 125 கோடியும் இடைக்கால நிவாரணம் ஒதுக்கி உள்ளது. அடுத்து ஒதுக்கப்படுவதும் சில நூறு கோடி களைத் தாண்டாது என்பதுதான் நிச்சயமான உண்மை!

Friday, January 13, 2012

தானே புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய புதுவை ,கடலூர் மாவட்டத்தின் நிலை..

புதுச்சேரி-கடலூர் இடையிலான ‘ரெட்டிச்சாவடி’ என்கிற ஊரில் கரையை கடந்த, ‘தானே’ புயல் ஓர் ஊழித் தாண்டவத்தை நடத்தி ஓய்ந்திருக்கிறது. சுனாமியைவிட பயங்கரம் இது என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். கடலூர் மக்களுக்கும் புதுச்சேரி மக்களுக்கும் 2011ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகி விட்டது. ‘புயல் என்றால் அது நானே’ என காட்டிவிட்டுச் சென்றுள்ளது, ‘தானே’ புயல். 2004ம் ஆண்டு சுனாமியைவிட இந்தப்ப புயலின் கோரத் தாண்டவம் அதிகம் என்கிறார்கள் மக்கள்.
"எனக்கு வயது 52 ஆகிறது. கடலூர்தான் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம். எனக்குத் தெரிந்து இதுவரை 5 தடவைக்குமேல் கடலூரை புயல் தாக்கியுள்ளது. ‘தானே’வுக்குகப் பிறகுதான் புரிகிறது... இதற்குமுன் வந்ததெல்லாம் புயல் இல்லை, பலத்த சூறைக்காற்று என்று. 

Friday, December 30, 2011

இந்திய ராணுவம் காஷ்மீரில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள விவகாரம்! விக்கிலீக்ஸ்

செஞ்சிலுவைச் சங்கத்தினர் 2002ஆம் ஆண்டிலிருந்து 2004 வரையிலான காலத்தில் காஷ்மீரில் 177 முறை கைதிகள் முகாமுக்குச் சென்று 1491 கைதிகளைச் சந்தித்து, தனிப்பட்ட முறையில் 1296 பேரிடம் பேட்டியெடுத்துள்ளனர். இவற்றில் 852 பேர் தாங்கள் கடுமையாக வதைக்கப்படுவதாகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதாகவும், மொத்தத்தில் 171 பேர் தங்கள் மீது ஒன்று முதல் ஆறு வடிவங்களிலான சித்திரவதைகள் ஏவப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் எப்போது எங்கு தொடங்கியது ?

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆஸ்திரேலியா நாட்டவர்கள்தான் முதன் முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர். 1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியது. இதையடுத்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.

Thursday, December 29, 2011

புதுவருட(2012) கொண்டாட்டங்கள் தேவையா?

இந்திய கலாச்சாரம் உலகத்திற்கே முன்னோடி கலாச்சாரம் என்ற பெயர் பெற்றது. தனி மனித ஒழுக்கங்களை வழியுறுத்தும் தத்துவங்கள் மதங்கள் சார்ந்த கொள்கைகள் போன்றவை அப்படிப்பட்ட தோற்றத்தை இந்த உலகிற்கு நமது கலாச்சாரப் பெருமையை எடுத்துச் சென்றது எனலாம். ஆனால் சில வருடங்காக இந்தியா மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. அரசியல், பொருளாதாரம், தொழிற்நுட்பம் போன்றவற்றைத் தாண்டி பல்வேறு சமுக மாற்றங்களைப் பெறத் துவங்கிவிட்டது. மேற்கத்திய நாடுகள் மீது நம் மக்களுக்கு உள்ள மோகம் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை எல்லாம் மறந்து மேலை நாட்டுக் கலாச்சரத்தை நோக்கி பயணித்து அதில் பல சாதனைகளையும்(?) பெற்றுள்ளது. அதில் முக்கியமானதொரு சாதனை(!)யாக சுமார் 24 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகளைப் பெற்று, எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது நாடு என்ற பெருமையை(?) இந்தியா பெற்றுள்ளது.

Friday, December 23, 2011

மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்தும் மீடியாக்கள்! நீதிபதி கட்ஜூ ஆவேசம்


கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டீவி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?

மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.

= உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?

நிச்சயமாக இல்லை.

= உண்மையாகவா சொல்கிறீர்கள்?

பத்திரிகைத்துறையை விமர்சித்து நீதிபதி கட்ஜு கூறியதில் என்ன தவறு?

ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு இந்திய ஊடகத் துறையை அதிலும் குறிப்பாக பத்திரிகைத்துறையை குறித்து வெளியிட்ட கருத்துக்கள் ஊடகத்துறையின் ஒரு சாராரை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்ஜு அரசு ஏஜண்டு என்று கூட விமர்சிக்கும் சில மூத்த பத்திரிகை விமர்சகர்கள் அவர் கூறிய முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை புறக்கணிக்கவோ அல்லது உண்மை தெளிவாக தெரிந்த பிறகும் அதனை கண்டும் காணாதது போல் நடிக்கவோ செய்கின்றனர்.

Thursday, December 22, 2011

புதுவை (அமலோற்பவம்) பள்ளியில் "படம் பார்த்துப் பாடம் படி" !


''ஹோம் வொர்க் செய்யலைனு சார் அடிப்பாரும்மா!''
''கணக்குப் போடலைன்னா மிஸ் திட்டுவாங்கம்மா!''
''நான் இன்னிக்கு ஸ்கூல் போகலைம்மா!''
 
காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்குக் அனுப்பும்போது, பெரும்பாலான வீடுகளில் இப்படியான குரல்களைக் கேட்கலாம். ஆனால், புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்களிடம் இருந்து இப்படியான வார்த்தைகள் வராது. காரணம், பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு என்று பிரத்யேகமாக ஒளிபரப்பாகும் 'அமல் விஷன்’ கேபிள் நெட்வொர்க்தான்!