Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Friday, December 9, 2011

அயோத்தி ராமன் அழுகிறான் -கவிப் பேரரசு வைரமுத்து

கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

Sunday, March 20, 2011

பெற்றோரின் மகிமை...!


பெற்றோர்களின் பராமரிப்பு.

ஒருவர் திருமனத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியத்தைப் பெறவில்லை என்றால் அவர்படும் வேதனையை வரையருக்க முடியாது. குழந்தையைப் பெறுவதற்காக அவர் எவ்வளவு காசு வேண்டுமானாலும் செலவு செய்வார். காரணம் குழந்தை இருந்தால் பாச மழையைப் பொழிய முடியும் என்பது தான். தனக்கு குழந்தை உருவாகிறது என்ற செய்தி தெரிய வந்தால் அன்றிலிருந்து அந்தக் குழந்தையை சுமக்கும் தாயுடைய தியாகம் ஆரம்பமாகிறது.தன் குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பதற்காக எத்தனையோ உணவு வகைகளைத் தியாகம் செய்கிறாள்.தான் விரும்பிய உணவை சாப்பிட முடியாத நிலை அவளுக்கு ஏற்படுகிறது.

குடும்பத்தில் அனைவரும் மகிழ்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சுற்றுலா சென்றாலும் அந்த பயணத்தில் அவள் இடம் பெற மாட்டாள் இடம் பெறவும் முடியாது. வயிற்றில் இருக்கும் தன் குழந்தைக்கு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தால் அந்தக் குழந்தை மீது அவர்கள் காட்டும் பாசத்தின் அளவைத்தான் நாம் வர்ணிக்க முடியுமா....