Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Wednesday, April 13, 2011

தமிழகத்தில் 75.2% வாக்குப்பதிவானது! பிரவீன்குமார்


சென்னை: பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. மாலை 5 மணிவரையில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

புதுவையில் 85 % வாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம்


 புதுவை: நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இன்றைய மாலைநேர நிலவரப்படி சுமார் 85.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதுவை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஏப்ரல் 13ம் தேதி புதன்கிழமை காலை 8 மணிக்கு துவங்கியது. இதற்காக அங்கு மொத்தமுள்ள 23 தொகுதிகளில் 638 வாக்குச்சாவடிகள், 13 துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்பட்டன.

Monday, April 11, 2011

49-O என்பது என்ன அதை எப்படி பயன் படுத்துவது?

49-O என்பது சட்டமோ, அரசாங்க வேட்பாளரோ அல்ல. தேர்தலில் கள்ள ஓட்டு போடும் ஏமாற்றுவேலையை தடுப்பதற்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961ல் (The Conduct of Elections Rules, 1961) உள்ள ஒரு விதிமுறை(Rule) தான் இந்த 49-O! ஒரு வாக்காளருக்கு தான் வசிக்கும் தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையென்றால் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருந்துகொள்வார். ஆனால் அவருடைய ஓட்டை வேறு யாரேனும் தங்கள் விருப்ப கட்சியின் வேட்பாளருக்கு போட்டுவிடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடக்கும் நம் தேர்தல் சம்பிரதாயம், கலாச்சாரம்! ஆனால் அதைத் தடுப்பதற்காகத்தான் 49-O என்று ஒன்று உள்ளது.

Sunday, April 10, 2011

இலவச கல்வி, லேப்டாப், வாஷிங் மெஷின்; என்.ஆர்.காங்கிரஸ் அதிரடி

புதுவை: என். ரங்கசாமி தலைமையிலான  என்.ஆர்.காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று புதுவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை புதுவை முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி வெளியிட்டார்.  
அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு...
மத்திய அரசின் புதிய ஜாதி வாரி கணக்கெடுப்பின்படி விகிதாச்சார அடிப்படையில் அந்தந்த ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் `வாஷிங்மெஷின்' இலவசமாக வழங்கப்படும்.

Saturday, April 9, 2011

புதுவை: 183 வேட்பாளர்களில் 24 பேர் கிரிமினல்கள்..


புதுவை: தேர்தலில் போட்டியிடும் 183 வேட்பாளர்களில் 24 பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது என ஜனநாயக சீர்திருத்த சங்க நிறுவனர் ஜெகதீப் சோர்கார் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, நடப்பு தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிடும் 183 வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்தது. ஆய்வு செய்யப்பட்ட 183 பேரில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முஸ்லிம் கட்சிகள் முன்னுக்கு வருமா?


முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து, தி.மு.க கூட்டணியில் முஸ்​லிம் லீக்கும், அ.தி.மு.க. கூட்ட​​ணியில் மனிதநேய மக்கள் கட்சியும் வரிந்து கட்டிக் களத்தில் நிற்கின்றன. இரண்டு கழகங்களும், இந்தக் கட்சிகளுக்கு தலா மூன்று தொகுதிகளை ஒதுக்கி இருக்கின்றன. இரண்டு முஸ்லிம் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை அறிந்துகொள்ள ஒரு ரவுண்டு வந்தோம்....

தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு! த.த.ஜ அறிவிப்பு


புதுச்சேரி: நடைபெறபோகும் தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தலில் அந்தந்த பகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு கட்சி பாகுபாடின்றி தகுதி அடிப்படையில் ஆதரவு அளிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அத் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த புதுச்சேரி பஹ்ருதீன் நிருபர்களிடம் கூறியதாவது:

Friday, April 8, 2011

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு


 வாக்களிப்பதற்கு முன்பு யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை பகிரங்கமாக சொல்பவர்கள், வாக்கைப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்களிப்பதற்கு முன்பு, குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்குத்தான் ஓட்டுப்போடப் போகிறேன் என்று வாக்காளர்கள் வெளிப்படையாக சொல்லக்கூடாது. அப்படி எந்த வாக்காளராவது வெளியிட்டால்....

அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க 13 ஆவணங்கள்

சென்னை, ஏப்ரல் 08: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட், பான்கார்டு உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,30,86,295, பெண் வாக்காளர்கள் 2,28,63,481, இதர வாக்காளர்கள் 844. பின்னர் ஜனவரி 1-ம் தேதியை அடிப்படை தேதியாக கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டன.

Thursday, April 7, 2011

புதுவை மக்கள் அனைவருக்கும் பிரஷர் குக்கர்! முதல்வர் அறிவிப்பு


புதுவை: அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக பிரஷர் குக்கர் வழங்கப்படும்', என்று முதல்வர் வைத்திலிங்கம் கூறினார். இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு  பேசிய அவர் புதுச்சேரி காங்., தேர்தல் அறிக்கையில் சில அறிவிப்புகள் விடுபட்டு விட்டது. அந்த அறிவிப்புகளை தற்போது வெளியிடுகிறோம்.