Monday, April 11, 2011

49-O என்பது என்ன அதை எப்படி பயன் படுத்துவது?

49-O என்பது சட்டமோ, அரசாங்க வேட்பாளரோ அல்ல. தேர்தலில் கள்ள ஓட்டு போடும் ஏமாற்றுவேலையை தடுப்பதற்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961ல் (The Conduct of Elections Rules, 1961) உள்ள ஒரு விதிமுறை(Rule) தான் இந்த 49-O! ஒரு வாக்காளருக்கு தான் வசிக்கும் தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையென்றால் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருந்துகொள்வார். ஆனால் அவருடைய ஓட்டை வேறு யாரேனும் தங்கள் விருப்ப கட்சியின் வேட்பாளருக்கு போட்டுவிடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடக்கும் நம் தேர்தல் சம்பிரதாயம், கலாச்சாரம்! ஆனால் அதைத் தடுப்பதற்காகத்தான் 49-O என்று ஒன்று உள்ளது.

Sunday, April 10, 2011

வானிலை அறிக்கை (Weather Report).... ஒரு பார்வை!


வானிலையியல் என்பது வளிமண்டலத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களால் உண்டாகும் காற்று, மழை போன்ற இயற்கையின் விளைவுகளை ஆராயும் ஒரு விஞ்ஞான முறையாகும். இயற்பியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய வானிலையியல், சற்றுக் கடினமான ஒரு விஞ்ஞானம் ஆகும். நவீன வானிலையியல், கி.பி. 1709-ம் ஆண்டு காற்றழுத்தமானி, பாதரச வெப்பமானி போன்ற உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தோன்றியதாகக் கூறலாம்.

வயதைக் குறைக்கும் நடைப் பயிற்சி.....!


நடைப்பயிற்சியில் Trekking, Leisure Walking, Race Walking, Power Walking என பலவகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு எந்த வகைப் பயிற்சி ஒத்துவருகிறதோ அதைத் தொடர்ச்சியாகச் செய்து வர வேண்டும். மற்ற வகையான உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக ஒன்றாகும். இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும். இப்பயிற்சியை மேற்கொள்ள ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும்.

இலவச கல்வி, லேப்டாப், வாஷிங் மெஷின்; என்.ஆர்.காங்கிரஸ் அதிரடி

புதுவை: என். ரங்கசாமி தலைமையிலான  என்.ஆர்.காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று புதுவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை புதுவை முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி வெளியிட்டார்.  
அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு...
மத்திய அரசின் புதிய ஜாதி வாரி கணக்கெடுப்பின்படி விகிதாச்சார அடிப்படையில் அந்தந்த ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் `வாஷிங்மெஷின்' இலவசமாக வழங்கப்படும்.

Saturday, April 9, 2011

புதுவை: 183 வேட்பாளர்களில் 24 பேர் கிரிமினல்கள்..


புதுவை: தேர்தலில் போட்டியிடும் 183 வேட்பாளர்களில் 24 பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது என ஜனநாயக சீர்திருத்த சங்க நிறுவனர் ஜெகதீப் சோர்கார் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, நடப்பு தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிடும் 183 வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்தது. ஆய்வு செய்யப்பட்ட 183 பேரில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தண்ணீர்.... தண்ணீர்..!


நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவையற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன. நீரின் மருத்துவ தன்மைகளைப் பார்ப்போம்…..
மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாக்கும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போம். மேற்கூறியது போக மற்ற நீர்கள் அவையிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று ஜலம் திரிதோஷத்தால் ஏறபட்ட நோய்களையும் பித்தகோபத்தையும் தாகத்தையும் தணிக்கும்.

கோடையை இதமாக்க இயற்கை பழச்சாறுகள்...


தர்பூசணிப்பழச் சாறு:
கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

பாலியல் (sex) தளங்களுக்குத் தடா....!



இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வீடுகளிலும் பள்ளிகளிலும், குழந்தைகளை இது போன்ற பாலியல் தளங்களையும், ஏமாற்றும் தளங்களையும் அடையாளம் கண்டு பாதுகாப்பது சிரமமான காரியமாக உள்ளது. இணையத்தில் கே9 வெப் புரடக்ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் இது போன்ற தளங்களை வடிகட்டும் சாப்ட்வேர் ஒன்று தரப்பட்டுள்ளது.

பொதுஅறிவு வினா - விடைகள் பகுதி # 02


1.இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது ?
2.நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?
3.நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார் ?
4.அணுவை பிளந்து காட்டியவர் ?
5.சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை ?
6.யூதர்களின் புனித நூல் எது ?
7.மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?
8.மனித உடலின் மிக கடினமான பகுதி எது ?
9.சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி எது ?
10.கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் ?

முஸ்லிம் கட்சிகள் முன்னுக்கு வருமா?


முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து, தி.மு.க கூட்டணியில் முஸ்​லிம் லீக்கும், அ.தி.மு.க. கூட்ட​​ணியில் மனிதநேய மக்கள் கட்சியும் வரிந்து கட்டிக் களத்தில் நிற்கின்றன. இரண்டு கழகங்களும், இந்தக் கட்சிகளுக்கு தலா மூன்று தொகுதிகளை ஒதுக்கி இருக்கின்றன. இரண்டு முஸ்லிம் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை அறிந்துகொள்ள ஒரு ரவுண்டு வந்தோம்....

தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு! த.த.ஜ அறிவிப்பு


புதுச்சேரி: நடைபெறபோகும் தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தலில் அந்தந்த பகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு கட்சி பாகுபாடின்றி தகுதி அடிப்படையில் ஆதரவு அளிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அத் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த புதுச்சேரி பஹ்ருதீன் நிருபர்களிடம் கூறியதாவது:

Friday, April 8, 2011

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு


 வாக்களிப்பதற்கு முன்பு யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை பகிரங்கமாக சொல்பவர்கள், வாக்கைப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்களிப்பதற்கு முன்பு, குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்குத்தான் ஓட்டுப்போடப் போகிறேன் என்று வாக்காளர்கள் வெளிப்படையாக சொல்லக்கூடாது. அப்படி எந்த வாக்காளராவது வெளியிட்டால்....

அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க 13 ஆவணங்கள்

சென்னை, ஏப்ரல் 08: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட், பான்கார்டு உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,30,86,295, பெண் வாக்காளர்கள் 2,28,63,481, இதர வாக்காளர்கள் 844. பின்னர் ஜனவரி 1-ம் தேதியை அடிப்படை தேதியாக கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டன.

மொபைல் வழி வங்கிச் சேவைகளை அளிக்கும் இந்திய வங்கிகள்......

இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களின் சேவைகளை மொபைல் மூலமாக அளிப்பதில், அதிலும் குறிப்பாக எஸ் எம் எஸ் (குறுஞ்செய்தி) மூலம் கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பணப்பரிமாற்ற விபரங்கள் & அக்கவுண்ட் விபரங்களை அறிதல் போன்றவற்றுக்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இச்சேவையைப் பெறுவதற்கான சேவைக்கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் இச்சேவையை இலவசமாகவும், சில வங்கிகள் வருடாந்திர கட்டணத்தை வசூலித்தும் அளிக்கின்றன.

ஓசோன் படலம் பற்றி ஒரு பார்வை...!


ஓசோன் மண்டலம் என்பது வளிமண்டலத்தில் உள்ள (ஓசோன்-O3 ) ஒருவகை காற்றுப் படலம்தான். சூரியனில் இருந்து உமிழப்படும் ஆபத்தான புறஊதாக்கதிர்களை பூமியில் விழாமல் தடுப்பது ஓசோன் அடுக்குதான். 93 முதல் 99 சதவீத புறஊதாக் கதிர்களை `ஓசோன் படலம்` கிரகித்து விடுவதால்தான் நம்மால் இங்கு நிம்மதியாக வாழ முடிகிறது. இந்தப் படலத்தில் துளை விழுந்திருப்பதால்தான் சமீபகாலமாக வெப்பம் அதிகரித்துள்ளது. காற்று மாசுபடாமல் தடுப்பதன் மூலம் ஓசோன் படலம் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

Thursday, April 7, 2011

புதுவை மக்கள் அனைவருக்கும் பிரஷர் குக்கர்! முதல்வர் அறிவிப்பு


புதுவை: அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக பிரஷர் குக்கர் வழங்கப்படும்', என்று முதல்வர் வைத்திலிங்கம் கூறினார். இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு  பேசிய அவர் புதுச்சேரி காங்., தேர்தல் அறிக்கையில் சில அறிவிப்புகள் விடுபட்டு விட்டது. அந்த அறிவிப்புகளை தற்போது வெளியிடுகிறோம்.

Wednesday, April 6, 2011

மொபைல் தரவிறக்கத் தளங்கள்..!

நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ் வீடியோக்கள் மென்பொருட்கள்,ரிங்டோன்கள், தீம்ஸ்என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியல் உள்ளது, அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Monday, April 4, 2011

பொதுஅறிவு வினா - விடைகள் பகுதி # 01

1.மலையேறுதல் விளையாட்டாக அறிமுகமான ஆண்டு எது ?
2.
பரத நாட்டியம் தொடங்கப்பட்ட இடம் எது ?
3.
இந்தியாவின் நீளமான நதி எது ?
4.
சந்திரனில் மலைகள் இருப்பதை கண்டறிந்தவர் ?
5.
தென்இந்திய நதிகளில் நீளமானது எது ?
6.
ஆந்தையின் கண் பார்வை மனிதனின் கண்பார்வையை விட எத்தனை மடங்கு அதிகம் ?
7.
அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது ?
8.
இந்தியாவில் வெளிவந்த முதல் பேசும் படம் எது ?
9.
இந்தியாவின் தேசிய மலர் எது ?
10.
இந்தியாவின் முதல் பெண் பிரதமமந்திரி யார் ?

இஸ்லாம் இல்லா உலகம்-ஒரு தொலை நோக்குப் பார்வை!

(டாக்டர் எ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

மேற்கத்திய ஏகாதிபத்திய உலகத்தால் இஸ்லாமியரும், இஸ்லாமிய அரசுகளும் சோதனைக்கு ஆளாகி உள்ளனர் என்று இஸ்லாமியர் என்னுவது இயற்கையே! மேலை நாட்டவர் இஸ்லாத்தினை வெறுப்புடனும், விநோதமாகவும், பழைமை வாத கொள்கை கொண்டதாகவும் நோக்குகின்றனர். ஆனால் அந்த இஸ்லாம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்று ஒரு தொலை நோக்குப் பார்வையினை மக்களுக்கு சற்று புரிய வைக்கலாம் என எண்ணுகிறேன்.

முகப்பரு நீங்க......!

உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் தெளிவு முகத்தில் பொலிவாக வெளிப்படும். உடலும் மனமும் சீராக இருந்தால் முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்கும். நாம் உண்ணும் உணவின் மாறுபாட்டால் உடல் சீர்கேடடைகிறது. இதனால் மலச்சிக்கல், சிறுநீர் தொந்தரவு, இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. ஒருவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது என்றால் அதற்கு மேற்கண்ட நோய்கள் காரணமாக கூட இருக்கலாம். இதற்கு சரியான உணவு முறையை பின்பற்றுதலும், சரியான சிகிச்சையுமே சிறந்தது. முகப் பொலிவிற்கான ரசாயன பூச்சுகள் பலன் தராது.