Monday, April 18, 2011

ஜீன்ஸ் பேண்ட் (Jeans pant) உருவான விதம்....!


ஆஸ்கார் லெவி ஸ்ட்ராஸ் என்பவர் 1849-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு வந்தார். சுரங்கத்தில் தங்கம் தோண்டும் பணி பரபரப்பாக நடைபெற்ற காலம் அது. சுரங்கத் தொழிலாளர்களின் கால்சட்டைகள் வெகு சீக்கிரமே கிழிந்து விடுவதை அவர் கவனித்தார். உறுதியான ஒரு துணியில் பேன்ட் தைத்துக் கொடுத்தால்தான் இவர்களுக்குச் சரிப்படும் என்று அவர் நினைத்தார்..........

தரமான பெர்ஃப்யூம் வாங்கலாம் வாங்க...!


ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல… ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?

குழந்தைகளின் நுண்ணறிவை அழிக்கும் ஜங்க் ஃபுட்..(Junk food)


குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), “ஜங்க் புட்’ குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.”ஜங்க் புட்’ எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா., ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்.கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது.

கலோரி “எரிக்க…… ட்ரெட்மில் (Treadmill)...!


உடலில் கொழுப்பு சேர்ந்தால், கொலஸ்ட்ரால் அதிகமாகிறது; கொலஸ்ட்ரால் அதிகமானால், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது; அதோடு விடுவதில்லை…சர்க்கரை நோயும் ஆரம்பிக்கிறது. போதாதா…அப்புறம் டாக்டரிடம் அடிக்கடி “விசிட்’ அடிக்க வேண்டும்; தினமும் காலை, இரவில் மாத்திரைகளை பட்டியல் போட்டு விழுங்கத்தான் வேண்டும். இதை அனுபவித்த வருபவர்களுக்கு இதெல்லாம் பழகி விட்டது. என்ன சாப்பிட வேண்டும், எந்த மாத்திரையை விழுங்காவிட்டால் ரத்த அழுத்தம் எகிறும், சர்க்கரை அளவு கூடும் என்பதெல்லாம் அத்துபடி.

கோடையில் உடல் நீரிழப்பை (Dehydration) சமன் செய்ய....


நாம் உஷாராக இருக்கவில்லை எனில், வெயில் நம் உயிரைக் கூட பறித்து விடும். இப்போதே, சன் ஸ்ட்ரோக், அதிக சூடு, உடல் நீர் வற்றிப்போதல் ஆகிய காரணங்களால், ஒரு சில மரணங்கள் சம்பவித்த வண்ணம் இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை எவ்வளவு என தெரியவில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்க, 98.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தேவை. இதற்கென உடல் முழுவதும் 40 லட்சம் வியர்வை நாளங்கள் நம் உடலில் உள்ளன. வெயில் காலத்தில், நம் உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடனே, நம் மூளை, வியர்வை நாளங்களுக்கு, ரசாயன சமிக்ஞை கொடுத்து, அவை செயல்படக் கட்டளையிடுகிறது. இதையடுத்து வியர்வை சுரக்கிறது.

Sunday, April 17, 2011

கடன் அட்டையை (Credit card) தேர்வு செய்வது எப்படி..........


கிரெடிட் கார்டு’ குறித்து பல எதிர்மறைக் கருத்துகள் இருந்தாலும், ஆத்திர அவசரத்துக்கு உதவும் அதன் சிறப்பு மறுக்க முடியாதது. சரியாகப் பயன்படுத்தினால் தக்க பலன் கொடுக்கும் மந்திர அட்டைதான் அது. எனவே, கிரெடிட் கார்டு’ பெறத் தீர்மானிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்…

அழிக்க முடியாத ஃபைல்களை (Files) நீக்க.......


சில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படு கையில், அது அழிய மறுக்கும். கீழ்க்காணும் செய்திகளில் ஒன்று நமக்குக் காட்டப்படும்.
Cannot delete file: Access is denied

There has been a sharing violation.

The source or destination file may be in use.

The file is in use by another program or user.

Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.

இந்திய மக்கள்தொகை (population)121 கோடியாக உயர்வு


சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. உலக மக்கள்தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 18 கோடி அதிகரித்துள்ளது. புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமீபத்தில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டது. இதில், அனைத்துவிதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில், இந்திய சென்சஸ் கமிஷனர் சி.சந்திர மவுலி நேற்று வெளியிட்டார்.

Saturday, April 16, 2011

100 General Knowledge Quiz..!

1 Roger Bannister ran the first sub 4 minute mile who ran 2nd?
John Landie of New Zealand
2 What can be types called chordate, needle and cruciform?
Tree Leaves
3 Musca Domestica can cause disease in man - what is it?
Common Housefly
4 Name the English chemist who first isolated sodium?
 Sir Humphry Davie
5 Who wrote Moon River used in Breakfast at Tiffanies?
Henry Mancini

Friday, April 15, 2011

ஆழிப்பேரலை (Tsunami) எப்படி ஏற்படுகிறது..!

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு.

உயர் இரத்த அழுத்தம்! The silent killer....!

பி.பி.(Blood Pressure – BP) என்ற வார்த்தையைக் கேட்டாலே நமக்கெல்லாம் பி.பி. எகிநுகிறது. அந்த அளவுக்கு நம்மை அச்சுறுத்துகிற பிரச்சனையாக உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதினர்கூட இந்தப் பிரச்சனையால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்த மிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து கோடி பேர் ரத்த மிகு அழுத்தநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிப் பேருக்கு தங்களுககு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பதுதான் மிகப்பெரிய சோகம். உண்மையில் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

கறுக்கும் கவரிங் நகைகளை காப்பாற்ற.......!


 நகை என்றாலே பெண்களில் சிலர் மற்ற எதை பற்றியும் கவலை படமாட்டார்கள் கணவனின் பர்ஸ் உள்பட...  அதுவும் இந்தியா போன்ற ஆசிய நாட்டு மக்கள்  எவ்வளவு தான் தங்க நகை வைத்திருந்தாலும் விதவிதமான கவரிங் நகைக்கு பல நூறுகள் செலவு செய்து வாங்கத்தான் ஆசைப்படுவார்கள். ஆடைக்கு ஏற்ற நிறங்களில் கற்கள் வைத்தும், எனாமல் எனப்படும் நிறச் சேர்ப்பு செய்தும் இவை வருவதால் பெண்களிடையே இதுபோன்ற நகைகளுக்கு அதிக மவுசு உண்டு.

Thursday, April 14, 2011

பிரான்ஸில் தடை புர்காவிற்கா அல்லது முகத்திரைக்கா...?


ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை 11.04.2011 முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இப்போது முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

கண்களை விற்று கணினி (computer) வாங்கலாமா....?


உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது. கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல் மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

அன்னா ஹசாரே! காந்தியவாதியா? காவிவாதியா.....?


 இந்த வாரம் முழுவதும் பத்திரிகையில் நிறைந்து நின்ற நபர் அன்னா ஹசாரே, யார் இவர்? இத்தனை நாள் இவர் எங்கே இருந்தார். இதுபோன்ற ஆயிரமாயிரம் கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. ஊழல் நடப்பது நம் நாட்டில் ஒன்றும் புதிதல்ல. இதற்க்கு முன்பும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு வாங்கிய ஆயுதத்திலும், கார்கில் யூத்தத்திலே கொல்லப்பட்ட வீரர்களுக்கு வாங்கிய சவபெட்டிகளிலும், கொள்ளை அடித்தார்கள். அப்போது இந்த அன்ன ஹசாரே எங்கு இருந்தார்?. இப்போது நடந்த ஜி ஊழலின் தொடக்கமே பாரதிய ஜனதா கட்சிகாரர்கள் ஆட்சியில்தான். அப்போது இந்த காந்தியவாதி எங்கு இருந்தார்?

Wednesday, April 13, 2011

சவூதியில் பயங்கர புழுதிக்காற்று!


ரியாத்: சவூதி தலைநகர் ரியாதில் இன்று மாலை 5 மணி முதல் கடுமையான புழுதிக்காற்று வீசத்தொடங்கியது காற்று வீசிய சற்று நேரத்திற்கெல்லாம் ரியாத் முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளிக்க தொடங்கியது.

தமிழகத்தில் 75.2% வாக்குப்பதிவானது! பிரவீன்குமார்


சென்னை: பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. மாலை 5 மணிவரையில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

புதுவையில் 85 % வாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம்


 புதுவை: நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இன்றைய மாலைநேர நிலவரப்படி சுமார் 85.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதுவை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஏப்ரல் 13ம் தேதி புதன்கிழமை காலை 8 மணிக்கு துவங்கியது. இதற்காக அங்கு மொத்தமுள்ள 23 தொகுதிகளில் 638 வாக்குச்சாவடிகள், 13 துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்பட்டன.

Tuesday, April 12, 2011

It is easy way for applying visit visa....


It is easy way for applying visit visa   go to the site of http://www.mofa.gov.sa.com/ Then u select electronic visa Colum and apply to get your visit visa. The application form is in Arabic. they are approve then u get a confirmation number and   u print a copy of confirmation number and a approval letter, then the letter is signed and stamped by your company and...

மாரடைப்பை தடுக்கும் இஞ்சியின் மருத்துவ பயன்கள்..!


இஞ்சி நம் உடம்பை அனைத்து வகை பிணியில் இருந்து அரணாக கோட்டை மதில் போல் இருந்து காப்பதால் இதற்கு இஞ்சி என பெயர் வந்தது. சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை. இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பலமருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வுச் செய்தியில் ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.