Thursday, July 28, 2011

“ராக்கெட் பிளேன்” தொழிற்நுட்பம்! Tokyo to Paris just 2 ½ Hrs.


அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியால் போக்குவரத்து நேரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது. இதில் அடுத்த புரட்சியாக `ராக்கெட் பிளேன்’ உருவாகவிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `ஈ.ஏ.டி.எஸ்.’, ஜப்பான் நாட்டுடன் இணைந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

Wednesday, July 27, 2011

உயிரினங்களுக்கு தூக்கம் ஏன் வருகிறது..?


தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள். நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.

இதய செல்களை உயிர்பிக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை...!


இதயம் தனக்குத் தானே பழுதுநீக்கிக்கொள்ளும் முறையை இங்கிலாந்து ஆய்வாளர் பால் ரைலி கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பாக, எலியின் இதயத்தில் அவர் ஆய்வு செய்துள்ளார். அதில், ஸ்டெம் செல்லை இடம்மாற்றம் செய்வதன் மூலம், சேதம் அடைந்த செல்கள் தாங்களாகவே தங்களைச் சீர்படுத்திக் கொள்ளச் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.

மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம்...

மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம். மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். 

தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே!


சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாது. ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள் எழும்.

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம்! கல்வித்துறை துவக்கியது

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக  இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது. தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து, ஆண்டுதோறும் பெற்றோருக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆய்வகம், விளையாட்டு மைதானம், நூலகம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலேயே, பல இடங்களில் பள்ளிகள் துவக்கப்பட்டன. புற்றீசல் போல் ஏராளமான பிரைமரி, நர்சரி பள்ளிகள் அதிகரித்தன.

அதிக புத்தக சுமையால் மாணவர்களுக்கு தண்டுவடம் பாதிப்பு?


கடந்த தி.மு.க., ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், அ.தி.மு.க., அரசிலும் தொடரும் என முதல்வர் தெரிவித்தார். அதன்படி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கை, கால்களின் நிலையை கண்டறிந்து, முன்கூட்டியே மாற்றுத்திறனாளிகள் உருவாகாமல் தடுக்கும் நோக்கில், "இலவச மருத்துவ முகாம்' நடத்தும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.

Monday, July 25, 2011

சாலை விதிகளைத் தெரிந்துகொள்வோம்....


புவிவெப்பம், பருவநிலை மாற்றம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளால் பல்வேறு அச்சுறுத்தல்களை மனிதர்கள் எதிர்கொண்டு வருவது ஒருபுறம் இருந்தாலும், கவனமின்மையால் வாகன விபத்துகள் ஏற்பட்டு மனிதர்கள் உயிரிழக்கும் போக்கு மறுபுறம் அதிகரித்து வருவதும் கவலையளிக்கச் செய்வதாக உள்ளது.

Friday, July 22, 2011

கட்டி கட்டியாக தங்கம்; கடவுளைக் காட்டி பயமுறுத்தும் மதவாதம்!


உலக பணக்கார கடவுள்[?] என்று சொல்லப்படும் திருப்பதியாரையே திரும்பி பார்க்க வைத்தவர் பத்மநாப சுவாமி. தனது ஸ்தலத்தின் ரகசிய அறைகளில் தனது செலவுக்கு[?]கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை அடுக்கி வைத்தவர். ஒருவர் கோர்ட்டில் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம் தான் பத்மநாப சுவாமி கோயிலில்  பதுக்கி வைக்கப்பட்டுவைகள் பட்டவர்த்தனமாக வெளியானது.   

கழகத்திற்கோர் 'எமெர்ஜென்சி'; கலக்கத்தில் கருணாநிதி..?

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் குறித்து வரும் புகார் குறித்து நடவடிக்கை  மேற்கொள்ள காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அடுத்தடுத்து நில மோசடி வழக்கில் திமுக புள்ளிகள் கைதாவது திமுக தலைவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. 

குடிமக்கள் அரசா? 'குடிமகன்' களின் அரசா?


மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்கள் நலப்பணிகளை மட்டுமே கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த மக்கள் நலப் பணிகளுக்கு தேவையான நிதிகளை உரிய நியாயமான வரிவிதிப்பின் மூலம் பெற்று, அதை சரியான வகையில் செலவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்கள். அஜீம் பிரேம்ஜி



நமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப்பறக்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்களை விளக்கினார். அவை...

நாம தான் அட்ஜஸ் பண்ணி வாழ கத்துக்கணும்


மவுண்ட் ரோடு, டி.வி.எஸ்., ஸ்டாப்பில் தான், நான் ஏறினேன்.  11 எச் நிறைந்து வழிந்தது; முண்டியடித்து ஏறினேன். இடதுகால் ஸ்லிப் ஆகி விடப் போகிறதோ என்ற பயம் வேறு. பதிமூன்று வருடங்களுக்கு முன், விபத்தாகி, முட்டியில்  பந்து கிண்ண மூட்டில், பந்தில் மெல்லிய விரிசல் பரிசோதித்த டாக்டர், "ப்ளேட் எல்லாம் இந்த வயசில் வைக்க வேண்டாம்... மூணு மாசம், "பிசியோதெரபி'க்கு அப்புறம் பார்த்து நடங்க. ஹீல்ஸ் வெச்ச ஷூ போடாதீங்க... கால் ஸ்லிப் ஆச்சுன்னா, பந்து நகர்ந்து உட்காரும்... உயிர் போற மாதிரி அஞ்சு நிமிஷம் வலிக்கும்; அப்புறம் சரியாகும்...' என்றார்.

படிக்காமலே ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்க!'



"ஸ்மார்ட்' பயிற்சி திட்டத்தின் முதன்மைச் செயல் அலுவலர் செந்தில் குமார்: இந்தியாவில் அதிகளவில், பணிவாய்ப்பை வழங்கும் துறையில் விவசாயத் துறைக்கு அடுத்த இடம் ஜவுளித் துறைக்கு உண்டு. இந்த துறையில், தற்போது 70 லட்சம் பேர் நேரடியாகவும், இரண்டரை லட்சம் பேர் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்.....


பெண்களுக்கு, ஆண்களுக்கு, என அனைத்து பால் இனத்தவர்களும் பொருளாதார ரீதியாக தங்களை உயர்த்திக் கொள்வதற்கு உதவும் எண்ணற்ற தொழிற்பயிற்சிகளை அளித்து வருகின்றது சென்னை, சூளைமேட்டில் இயங்கிவரும் "மக்கள் கல்வி நிறுவனம்'. மத்திய அரசின் ஓர் அங்கம் இது. இம்மையத்தின் தலைவர் கி.கிருஷ்ண மூர்த்தியும், இயக்குனர் தங்கவேலுவும், திட்ட அதிகாரி ராஜாராமனும் நம்மிடம் மையத்தின் பயிற்சி முறைகளைப் பற்றியும் இதனால் பயன் அடைந்தவர்கள் பற்றியும் பேசியதிலிருந்து.

பெண்களின் உயர்கல்விக்கு தனியார் நிறுவனம் உதவி



பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பி.எச்.டி ஆய்வு மேற்கொள்ளும் பெண்கள் ஆகியோருக்கு ஃபேர் அன்ட் லவ்லி நிறுவனம் உதவித் தொகை வழங்க உள்ளது.

Wednesday, July 20, 2011

கழிவுகள் கழிதலும்...


கிகாலி (Kigali) ஆப்பிரிக்காவின் ருவாண்டா (Rwanda) நாட்டிலுள்ள நகரம். இங்கு ஜுலை 19, 2011 செவ்வாயன்று நடைபெற்ற ஆப்பிரிக்காஸான் மாநாட்டில் (AfricaSan Conference) 42 மில்லியன் - அதாவது நாலு கோடி இருபது இலட்சம் - அமெரிக்க டாலர் நன்கொடை அளித்துள்ளது பில் கேட்ஸின் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் (Bill & Melinda Gates Foundation). எதற்கு இவ்வளவு பெரிய நன்கொடை?

Tuesday, July 19, 2011

உண்மையை மறைக்கும் மருத்துவமனைகள்..!


நாள்தோறும் சமையலில் எண்ணெய்க்குப் பதில் தண்ணீரைப் பயன்படுத்தலாம் என இதயநோய் நிபுணரும் சேவோல் சுகாதார ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் பிமல் சாஜ்ஜர் கூறினார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:  1992-ம் ஆண்டில் 1.6 கோடியாக இருந்த இதய நோயாளிகள் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 10 கோடியாக உயர்ந்துள்ளது.

டி.வியில் வரும் விளம்பர மருந்துவர்கள்! உஷார்.....

தங்களிடம் வந்து அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் விளம்பரங்களைச் செய்யக் கூடாது என்று தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் கூறியுள்ளது. இதுபோன்ற விளம்பரங்களை டாக்டர்கள் வெளியிடுவது நியாயமற்ற வணிக நடவடிக்கை என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

பகவத் கீதையை விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் - பா.ஜ.கவின் மதவெறிப் பேச்சு

பெங்களூர்:கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு பசுவதை தடைச்சட்டம், பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை படிப்பதை கட்டாயமாக்குதல் போன்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அஜண்டாக்களை அமுல்படுத்தி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வருகின்றன.