அக்டோபர் 9/2012 அன்று சிறுமி மலாலா சுடப்பட்டாள் என்ற செய்தி உலகையே உலுக்கியது. யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி செய்த போது கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்கும் மேற்கத்திய அந்நிய கல்வி நிறுவனங்களை மூடுமாறு உத்தரவிட்டனர். ஏராளமான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. உடனே தங்கள் ஊடகங்கள் மூலம் உலகம் முழுவதும் தலிபான்களுக்கு எதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விட்டனர் அடாவடி அமெரிக்காவும், அதன் அல்லக்கைகளும். தாலிபான்கள் பெண் கல்வியைத் தடுத்து விட்டனர், காட்டுமிராண்டி ஆட்சி செய்கின்றனர் என்று அலறினார்கள்.


















