Friday, September 30, 2011

முஸ்லீம்கள் ஏமாற மாட்டார்கள்...!


குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைத் தூக்கி நிறுத்தும் ஒரு சூழ்ச்சி நாட்டில் அரங்கேறி வருகிறது. பா.ஜ.க., சங்பரிவார் வட்டாரத்தில் நரேந்திரமோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று கருதுவது அந்த வட்டாரம், எந்தத் தகுதியில் இருக்கிறது என்பதற்கான அடையாளம். என் வீட்டில் 
இருப்பவர்களிலேயே மகா மகா யோக்கியன் அதோ கூரைமீது ஏறி நின்று கொள்ளி வைக்கின்றானே அவன்தான்! என்றானாம் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுண்டு. பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி தான் என்று பா.ஜ.க., வட்டாரம் கூறுவது இதனைத்தான் நினைவூட்டுகிறது. 

தோண்டத் தோண்டப் பிணங்கள் ஜம்முகாஷ்மீரின் கண்ணீர் கதை!


சில நாட்களுக்கு முன்னால் காஷ்மீரில் அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் தோண்டி எடுக்கப்பட்டன உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தை மத்திய அரசும் ஊடகங்களும் அப்படியே மூடி மறைத்தது ஞாபகமிருக்கலாம் அதைத்தொடர்ந்து இப்பொழுது ஜம்முவிலும் ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத இளைஞர்களிண் சடலங்கள் அங்குள்ள சவக்குழிகளில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பட்டுப் புடவைகளை பாதுகாக்க இதோ சில ஆலோசனைகள்…


 பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது. துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும்படி போடுவது நல்லது.

வீட்டுத் தொழில் பெண்களுக்கு லாபமா? பிரச்சனையா?


குடும்ப நிர்வாகத்தில் பெரும்பங்கு பெண்ணைச் சேர்ந்தது. குழந்தைகள் பராமரிப்பு, கணவரை கவனிப்பது, விருந்தோம்பல், வீட்டு வேலை, குடும்ப நிர்வாகம் என பல்வேறு பணிகளையும் கவனிக்க வேண்டியதிருக்கிறது. இவ்வளவு பொறுப்புகளுக்கு இடையே சுயதொழில் செய்யும் பெண்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்களா? சுயதொழிலில் சந்திக்கும் இடர்பாடுகள் என்னென்ன? என்பது பற்றி ஒரு பார்வை.

சுறா கல்லீரலில் டெங்கு, கேன்சருக்கு சூப்பர் மருந்து !


வாஷிங்டன் : சுறாக்களின் கல்லீரலில் உள்ள ரசாயன மூலப்பொருளில் இருந்து மனிதனின் பல நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்பட உள்ளது. இந்த ரசாயன பொருள், நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது என்பதால் இதை பயன்படுத்தி ஆன்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சி மருத்துவர்கள்.

ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கு சிறுநீரகம் செயலிழப்பு !


சென்னை: இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கும் சிறுநீரகங்கள் செயலிழக்கிறது. ஆனால், தானமாக 5 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. மனிதன் உயிருடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறுநீரகம் முக்கிய பங்கு வகுக்கிறது. அந்த சிறுநீரகம் செயலிழந்து விட்டால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும்.

Tuesday, September 27, 2011

ஏர்-கண்டிஷன் அறையில் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் உருவாகும்!


உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மனித குலத்துக்கு பல்வேறு நோய்களை பரிசாக தந்து கொண்டு இருக்கின்றன. மனநிலை பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. முன்பு 40 வயதுக்கு மேல் ஏற்பட்ட சர்க்கரை நோய் இப்போது குழந்தை பருவத்திலேயே வந்த விடுகிறது. மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

மனிதர்களின் வாழ்நாளைக் குறைக்கும் தொலைக்காட்சி!


தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, "டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ஆண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொலைக்காட்சி மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகள் மூலம் புரிந்து கொள்ள இயலும்.

Saturday, August 27, 2011

தேநீர் பற்றிய சில உண்மைகள்..!


 டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் சொல்வதுண்டு' இவற்றில் எது உண்மை?... 
டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல. 
உண்மை: ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

கூந்தலை அழகாக அலங்கரிப்பது எப்படி?


விருந்து, விசேஷம் என்று எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் பெண்கள் அழகாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. அழகென்றால் அங்கொன்றும், இங்கொன்று மாக இல்லை- உச்சி முதல் பாதம் வரை மொத்தமும் அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக உச்சி அதாவது கூந்தல் அழகு சூப்பரோ சூப்பராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். `ஏய்.. எப்படி இது! அமர்க்களமா இருக்குதே..!' என்று, பார்ப்பவர்களில் பத்து பேராவது சொல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பதிவிறக்கம் செய்ய சில ஆலோசனைகள்! Tips for download,,,


நாம் பல பைல்களை இணைய தளங்களிலிருந்து அடிக்கடி டவுண்லோட் செய்கிறோம். இந்த பைல்கள் பி.டி.எப்., ஸிப் ஆர்க்கிவ், வேர்ட் என ஏதோ ஒரு பார்மட்டில் இருக்கலாம். பல வேளைகளில் டவுண்லோட் செய்த பின்னர் தான், இந்த பார்மட் பைல் என்றால், இதனை டவுண்லோட் செய்தி டாமல் இருந்திருக் கலாமே என்று எண்ணு கிறோம். ஏனென்றால், அதனைத் திறந்து பார்ப்பதற்கான புரோகிராம் இல்லாமல் இருக்கலாம். அல்லது நாம் மேற்கொண்டு திட்டமிடும் வேலைக்கு அது உகந்ததாக இருக்கலாம்.

மழையால் ஏற்படும் தனிமை உணர்வு...!


மழைக்கும், தனிமைக்கும் அப்படி என்னதான் சம்பந்தம் இருக்கிறதோ தெரியவில்லை... மழை என்றாலே நாம் தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்ற ஓர் உணர்வு நம்மை ஆட்கொண்டு விடுகிறது. மழை நம் மனதுக்கு உற்சாகம் அளித்தாலும், தொடர்மழை ஒருவித தடுமாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும். மழை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் யாவும், இன்னொரு மழையில் நினைவுக்கு வரும்.

Power saving options in laptop computers! மடிக்கணினியில் சக்தி சேமிப்பு


பேட்டரி சக்தியில் இயங்கும் லேப்டாப்பில், நாம் எந்த அளவிற்கு அதனைச் சரியாக, செட் செய்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு அதன் திறன் நமக்கு நீண்ட நேரம் கிடைக்கும். லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைத்திடும் விண்டோக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

Sunday, August 21, 2011

கார் குளிரூட்டியை பராமரிப்பது எப்படி? (Air Condition maintenance)


தமிழகத்தைப் பொறுத்தவரை ஏ.ஸி இல்லாத கார்களை வாங்குபவர்கள் வெறும் 10 சதவிகிதத்தினரே! காரில் ஏ.ஸி இருந்தாலும் ஒழுங்காக இயங்கவில்லை என்றால், எந்தப் பயனும் இல்லை. கார் ஏ.ஸியைப் பராமரிப்பது எப்படி? காருக்குள் ஏ.ஸி இயங்கிக்கொண்டு இருக்கும் போது, ஒரு விதமான துர்நாற்றம் வந்தால், அதற்கு கிருமிகள்தான் காரணம். ஏ.ஸி ஃபேன் கேஸிங்கில் இருக்கும் கூலிங் காயில் அல்லது ஃபில்டரில் பாக்டீரியாக்கள் தங்கி, பல்கி பெருகுவதற்கு மூல காரணம்....

தீப்பற்றிக் கொண்டால்.. உடனடியாக செய்ய வேண்டியது என்ன???


 
பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்....
* நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவியுங்கள்.

ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன?


இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம், ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்திதான் என்பது தெரிந்த ஒன்றுதான் என்றாலும், ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன என்பதை அறிந்துகொண்டால், அதற்கான முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

Thursday, August 18, 2011

எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் ரூட்கிட் வைரஸ்..


பாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை மறைத்துக் கொண்டு செயலாற்றுவதில் கில்லாடி களாகும். இவை பரவிக் கைப்பற்றியுள்ள, பெரும்பாலான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்கள் எனக் கண்டறியப் பட்டுள்ளது. எக்ஸ்பி பயன்படுத்தப்படும் நான்கு கம்ப்யூட்டர் களில் நிச்சயம் ஒன்றில் ரூட்கிட் வைரஸ் இருப்பதாகத் தெரிகிறது. ரூட்கிட் பாதித்த கம்ப்யூட்டரை, அதனை அனுப்பியவர், வெகு அழகாக, நேர்த்தியாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விடுகிறார்.

முன்னேறத் தூண்டும் `சுய கவுரவம்'



ஒவ்வொரு மனிதனுக்கும் சுயகவுரவம் உண்டு. அது தான் அவனை தன்னம்பிக்கையோடு வழிநடத்திச் செல்ல உதவுகிறது. ஒரு பழைய கதை உண்டு. அதாவது, ஒரு விளக்கில் அடைபட்டுக் கிடந்த பூதமானது, அந்த விளக்கை துடைத்து. தன்னை விடுதலை செய்பவனின் விருப்பங்களை நிறைவேற்றித் தருவதாக கூறியது. இந்தச்சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால். நீ என்ன கேட்பாய்?

மார்கெட்டில் இருந்து மாயமாகும் CDமற்றும் DVD க்கள்...


கம்ப்யூட்டர் மார்க்கட்டில் இருந்து சிடி மற்றும் டிவிடிக்கள் மறையும் காலம் வந்துவிட்டது. பிளாப்பி டிஸ்க்குகளைப் போல இவையும் காணமால் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஒரு காலத்தில், 1985க்கு முன்னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டிகல் ரெகார்ட் அளவிலான டிஸ்க்குகள் பயன்பாட்டில் இருந்தன. துளையிடப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்த கார்டுகளுக்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தன. இவற்றை ஐந்தே கால் அங்குல அகல அளவிலான டிஸ்க்குகள் வெளியேற்றின. இதன் கொள்ளளவு கேபி அளவிலேயே இருந்தன.

காய்கறி, பழங்களில் ரசாயனம் (Chemicals) ஜாக்கிரதை!


நமது அன்றாட உணவில் காய்கறிகள், பழங்களுக்கு முக்கிய பங்குண்டு. இந்தியர்களின் உணவில் 23 சதவீதம் காய்கறிகள் இடம் பெற்றுள்ளன என, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளிட்டவை, காய்கறி, பழங்களிலிருந்து கிடைக்கின்றன. பல்வேறு நோய்களைத் தடுக்கும் மருந்தாக, பச்சைக் காய்கறிகள், பழங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இயற்கை உரங்களைக் கொண்டு விளைவித்த காய்கறி, பழங்களை தோட்டத்தில் இருந்து நேரடியாகப் பறித்துச் சாப்பிட்டோம். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கலக்காமல் அவை நமக்குக் கிடைத்தன.