Monday, March 12, 2012

சவூதி: குறுஞ்செய்தி மூலம் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலையை (நிடாகத்) அறிந்து கொள்ளலாம்!


ரியாத்: சவூதி தொழிலாளர் அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கை ஒன்றில் சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது நிறுவனங்கள் பற்றிய (நிடாகத்) நிலை பற்றி அறிவதற்கு புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் இந்த சேவையின் மூலம் பயனடையலாம். என மனித வளத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஷெரீஃப் ஹுசைன் அல் ஹுபைல் என்ற மனித வளத்துறை நிபுணர் கூறும்போது இந்த நிடாகத் என்பது அவூதியில் உள்ள நிறுவனங்களின் சவூதிமயமாக்கல் இலக்குகளை அளவிடும். இந்த அமைப்பின்படி ஒரு நிறுவனம் சிவப்பு, மஞ்சள், பச்சை அல்லது பிரீமியம் பிரிவுகளில் எந்த பிரிவில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள உதவும் என்றார்.


இந்த புதிய சேவையின் மூலம் ஒரு நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை பற்றி பிழையான அனுமானங்களயும் ஒருவர் தொழிலாளர் அமைச்க அலுவலகத்திற்கு செல்ல ஆகும் கால விரயத்தையும் தவிர்க்கிறது," என்று அவர் விளக்கினார்.

"மேலும், இதன் மூலம் சவூதி நிறுவனங்களால் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதிலிருந்து அவர்களை காப்பாற்றவும் அதிகாரிகள் அவர்களை அங்கும் இங்குமாக அலைகழிப்பதையும் தவிர்க்கவும் முடியும் என்றார்.

வெளிநாட்டவர்கள் தங்கள் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை அறிய 44* இகாமா எண் இவற்றை டைப் செய்து STC, எண் 888996, Mobily 626666, அல்லது Zain 709446 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தகவல் தெரிந்து கொள்ளலாம். மேலும் . www.mol.gov.sa. என்ற அமைச்சக இணையதளத்திலும் இத்தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்

No comments:

Post a Comment