Tuesday, June 26, 2012

நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?


பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71). சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.
ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).

எல் நீனோ (El Nino) என்றால் என்ன...?


மழை பொழிய வென்டிய பருவத்தில் வறட்சி தாண்டவமாடுவது....... வெயில்கொட்ட வேண்டிய கோடைக் காலத்தில் மழை கொடடோ கொட்டென கொட்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவது...... சுதாரித்து கொள்ளாக் கூட அவகாசம் தராமல் சூறாவளி வீசுவது.... காயும் வெயிலில் காடுகள் தீப்பற்றி எரிந்து சூரிய வெளிச்சத்தையே மறைக்கும் அளவுக்குப் புகைப்படலம் பரவுவது..... குளிர்ப்ரதேச மக்கள் நடுக்கும் குளிரிலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கொடியை எதிர்பார்த்து காத்திருக்கும் போது திடீரென உறைபனி வந்து மூச்சுத்திணற வைப்பது....
இப்படி எல்லாமே தலைகிழாக திகையும் இயற்கையின் சூதத்துக்கு வானிலை நிபுணர்கள் வைத்திருக்கும் பெயர் 'எல் நினோ' . தென் அமெரிக்கா கண்டத்திலிருந்து பேரு, எகவ்டார் போன்ற நாடுகளில் 'எல் நினோ' 'இயேசுவின் ஆசி பெற்ற சிசு' என்று அழைக்க படுகின்றது. ஸ்பானிய மொழியில் 'எல் நினோ' என்றால் புதிய குழந்தை என்று பெயர்.

Monday, June 25, 2012

கைது நடவடிக்கையில் போலிஸ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!

குற்றவாளி ஒருவரை கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். ஆனால், எந்த அதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்வதில்லை. "நேம் பேட்ஜ்' மட்டுமே அணிந்திருக்கின்றனர்.

கைது செய்தவுடன், அங்கேயே கைது குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வதில்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்திலேயே கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.

கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும். சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

எப்படி நடக்கிறது இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல்...?


உலகின் மிகப் பெரிய குடியரசு இந்தியா என்பதும் இந்தியாவின் குடியரசுத்தலைவருக்கான தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும்குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர்கள் திரு.பிரனாப் முகர்ஜியும் திரு.சங்கமாவும் என்பதும் நாம் அனைவரும் அறிவோம். ஆனால், குடியரசுத்தலைவருக்கான தேர்தல் எப்படி நடக்கிறது ? அதற்கான விதிமுறைகள்என்ன? இந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் நோக்கமே இந்த பதிவு….
குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் யார் போட்டியிடலாம் ?
இந்திய அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவருக்கான தேர்தலில்போட்டியிட பின் வரும் அனைத்து தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்:

Friday, June 22, 2012

ஸ்டெம் செல் சிகிச்சை..! இந்தியாவில் களமிறங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்

"ஸ்டெம் செல்" உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சைகளில் நம்பிக்கை தரும் வெற்றிகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. சில நாள்களுக்கு முன்பு, ஸ்வீடன் நாட்டில், பத்து வயது சிறுமியின் ஸ்டெம் செல் உதவியால், ரத்த நாளத்தை வளர்த்தெடுத்துப் பொருத்தியுள்ளனர். இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்திருப்பவர் மருத்துவர் சுசித்ரா ஹோல்கர்சன். உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையில் 25 ஆண்டுகால அனுபவம் உள்ள இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் படித்தவர். பத்து வயது சிறுமியின் கல்லீரலுக்கு ரத்தம் கொண்டு செல்லும் நாளம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதால், அந்தச் சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் நேர்ந்தது. 

28 மாதங்களில் 30 தூக்குதண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு.... பிரதீபாவின் சாதனை

 ஓவ்வொரு குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விடைபெறும்போது, அவர்களது பதவிக்காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் என்று சொல்லிக் கொள்ள ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் இருக்கும். சுதந்திர இந்தியாவின் 12-வது குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு விடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்கிற பெருமைக்குரிய பிரதிபா பாட்டீலின் சாதனை பெருமிதப்படத் தக்கதுதானா என்பதில்தான் நமக்குச் சந்தேகம் எழுகிறது.கொலைக் குற்றவாளி உள்ளிட்ட எந்தக் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. 

Wednesday, June 13, 2012

அரசின் இலவச கல்வி உதவி தொகை பெற...


1. பள்ளி படிப்பிற்க்கு தமிழக அரசால் வழக்கப்படும் உதவித்தொகை, சீருடை, நோட்டு புத்தகம், காலனி அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றது (தனியார் பள்ளிகளுக்கு கிடையாது). இதை பெருவதில் சிரமம் இல்லை, இதில் கல்வி கட்டணத்தை தவிர அனைத்தும் தானகவே கிடைக்கின்றது. கல்வி உதவி தொகை விண்ணப்பித்தால் கிடைக்கும்,
அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் மிக மிக குறைவு( சில நூறு ரூபாய்கள்). எனவே (அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும்) பெற்றோர்கள் இதை
பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. .
2. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக மத்திய அரசு ஒரு தகுதி தேர்வுவை (NET/NTSE/NMMS தேர்வுகள்) நடத்துகின்றது, இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் (பாஸ் பன்னினால் ) மட்டுமே உதவி தொகை கிடைக்கும். (8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) மாதம் 500 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள், மேலும் விபரம் அறிய....

Friday, May 4, 2012

ஆஷ் துரையை கொன்றது ஏன்... ? மறைக்கப்படும் வரலாற்று உண்மைகள்......

(Robert W. D. E. Ashe)
அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை ...விலக்கி வருகிறது, 
ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்? இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ” அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” – அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

இந்திய சுதந்திர போராட்டம்: காந்திஜி & முஸ்லிம்கள் & பாசிச ஹிந்துத்துவா...


காந்திஜி நடத்திய இந்திய சுதந்திர போராட்டத்தில் அவருக்கு துணையாக அபுல்கலாம் ஆசாத், முஹம்மது அலி, ஷவுக்கத் அலி,ஹஸ்ரத் மொஹானி, ஸெய்புத்தீன் கிச்லு, டாக்டர்.எம்.எ. அன்ஸாரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அறிஞர்களுடன் ஒன்றிணைந்தார். அதன் பயனாக, 1920 ஆம் ஆண்டு கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கங்கள் உருவாகின.

கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கங்களின் முக்கிய செயல்திட்டமாக ஆங்கிலேய அரசுக்கு வரி செலுத்தமாட்டோம் என பிரகடனப்படுத்தினார் காந்திஜி. இந்திய குடிமக்களை பொருளாதார ரீதியாக சுரண்டும், துயரத்தில் ஆழ்த்தும் அந்நிய ஆக்கிரமிப்பு அரசுக்கு வரி கட்டாதீர்கள் என்ற வேண்டுகோளை பெரும்பாலானோர் நடைமுறைப்படுத்தியது ஆங்கில அரசுக்கு சவாலாக விளங்கியது.

தினசரி ரசம் சாப்பிடலாமா?


சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.
 
புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote)தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்---இய‌ற்கை வைத்தியம்,


சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி,பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
--------------------------------------------------------------------------------
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

Wednesday, May 2, 2012

இதயத்தை உலுக்கும் ஐ.டி. (Info.Tech.) கதைகள் !


ஐ.டி துறையின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அது அமெரிக்க ஏகாதிபத்திய நலனோடு பின்னப்பட்டிருக்கிறது என்பதை விளக்கியும், புரியவைக்கவும் வினவில் பல கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இதை பலர் பொதுவில் புரிந்து கொண்டாலும் ஐ.டி துறையில் இருக்கும் நண்பர்கள் பிரச்சினையின் பாரிய தன்மையை பொதுவில் இல்லையென்றே கருதுகிறார்கள். எமக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து இதை உணர முடிகிறது.
 
தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களிலிருந்து ஆட்குறைப்பும், சம்பளக் குறைப்பும், இப்போதுதான் நிகழ்கிறது என்றால் இந்த போக்கு உற்பத்தி சார்ந்த தொழில்துறைகளுக்கு முன்பே நடந்து வருகிறது. பின்னி ஆலை, ஸ்டாண்டர்டு மோட்டார் ஆலை போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஓரளவுக்கு நடுத்தர வர்க்க ஊதியம் வாங்கி வந்த பல நூறு தொழிலாளர்கள் இன்று தமது வாழ்க்கைக்காக உதிரி வேலை செய்து போராடி வருகிறார்கள். இவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு.

நல்லதும் கெட்டதும்.... ஆக்கம் நூருத்தீன்

இன்பமும் துன்பமும் ஒவ்வொருவர் வாழ்விலும் மாறிமாறி நடைபெறுபவை. எவருக்கும் இதில் விலக்கில்லை. ஆயினும் நல்லது ஏற்படும்போது மகிழ்கின்ற மனம், துன்பமோ சோதனையோ தீண்டும்போது மட்டும் துவள்கிறது; நிதானத்தை இழக்கிறது. நினைத்தது நடக்கும்போது மனம் இன்பத்தில் துள்ளுகிறது. அது நிறைவேறாதபோது வெறுப்பில் மூழ்குகிறது.

சோதனைகளைப் பற்றியும் அது நிகழும்போது மேற்கொள்ள வேண்டிய பொறுமையைப் பற்றியும் நிறைய படித்திருப்போம். ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டில் பாக்தாதில் வாழ்ந்த இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) Sayd Al-Khatir (தமிழில் ‘மனச்சுரங்கம்’ என்று சொல்லலாம்) எனும் நூலில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்துகள் மிகவும் சுவையானவை.

‘தனது அனைத்து ஆசைகளையும் தேவைகளையும் அல்லாஹ் நிறைவேற்றி வைக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுவானேயானால் அவனைவிட முட்டாள் இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது’ 

யு.எஸ்.பி. டிரைவ் கேடு (corrupt) ஆகிவிட்டால்…

யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்கள் (USB flash drives) அனைத்தும் “plug and play” வகையைச் சேர்ந்த சாதனங்கள். இவை நாம் பயன்படுத்தும் பலவகையான, வீடியோ பைல் உட்பட, பைல்களை சேவ் செய்து, மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை. ஆனால், கம்ப்யூட்டரில் உள்ள, இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால், பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, கம்ப்யூட்டர் அதனைத் தேடி, செயல்பாட்டில் வைத்திருக்கையில், கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. சில வேளைகளில், அதில் உள்ள அனைத்து டேட்டாவினையும் மீண்டும் பெற்று பயன்படுத்த முடியாமல் போய்விடும். அல்லது குறிப்பிட்ட பைல் கரப்ட் ஆகும். அல்லது பிளாஷ் ட்ரைவே பயன்படுத்த முடியாமல் போய்விடலாம்.

Saturday, April 14, 2012

மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா?


மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா என்ற கேள்வியே நம்மை அச்சுறுத்தும் தன்மையில் அமைந்துள்ளது. ஏனென்றால் அந்த மருத்துவ ஆய்வுக்கூடங்களின் முடிவுகளை நம்பியே நம் சிகிச்சைகள் அனைத்தும் அமைந்துள்ளன. இப்படி அடிப்படையிலேயே சந்தேகம் எழுப்பினால் அச்சம் வருவது இயல்புதான்.
நம் உடலின் ஆரோக்கியம் சரியாக இருக்கிறதா
, இல்லையா என்பதில் துவங்கி, என்னென்ன நோய்கள் நம் உடலில் குடியிருந்து கொண்டிருக்கின்றன, எந்தெந்த உறுப்புகளை அறுவை சிகிச்சையில் நீக்கலாம் என்பது வரை தீர்மானிக்கும் சக்தியாக நாம் நம்புவது இந்த மருத்துவ ஆய்வுகளைத்தான். கடவுளை நம்பாத மனிதர்கள் கூட உண்டு. ஆனால் டெஸ்டுகளை நம்பாத மனிதர்களே இல்லை என்று கூறுமளவிற்கு நம் நம்பிக்கை பெற்ற ஒன்றாக இந்த நூற்றாண்டில் ஆய்வுக்கூடங்கள் விளங்குகின்றன.

பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள்...


திவிஜேந்திர நாராயண ஜா இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் வரலாற்றை ஆராய்ந்து வரும் வரலாற்றறிஞர்; இந்துத்துவத் தொன்மங்கள் பலவற்றைத் தக்க சான்றுகளுடன் தவறென நிறுவி வருபவர்; இந்துத்துவாவின் பரப்புரைகளுள் பல தவறானவை என்பதை இந்திய இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எடுத்துக் கூறி வருபவர். “புனிதப் பசுவின் புராணம்” (‘The myth of the holy cow’) என்னும் தம்முடைய நூலில் இந்திய உணவு முறைகளில் மாட்டிறைச்சி இருப்பதை எடுத்துக்காட்டியிருப்பவர். பழைய இந்தியாவின் பண்பாடு பற்றியும் இடைக்கால இந்தியாவின் நிலப்பிரபுத்துவ அமைப்புப் பற்றியும் தம்முடைய வழிகாட்டியும் வரலாற்றறிஞருமாகிய ஆர். எசு.சருமாவைப் போலவே நிறைய பணியாற்றியிருப்பவர்.

ரேஷன் கடைகளில் முறைகேடா..? உடனே பறக்கும் படையை தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும், உணவுப் பொருட்கள் பதுக்கலைக் கண்காணிக்கவும் பறக்கும் படை அமைக்கப்பட்டும், முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதி ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்றால் பறக்கும் படையினருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கலாம்.

மருத்துவர்களின் கொள்ளையோ கொள்ளை...

ஒரு விவசாயி வயலில் வேலை செய்யாமல் ஜீவிக்க முடியாது. ஒரு பாட்டாளி உழைக்காமல் உயிர்வாழ முடியாது. கட்டடப் பொறியாளர் கூட, கட்டடப் பக்கமே வராமல் சம்பாதிக்க முடியாது. ஆனால், 

"ஒரு டாக்டர் நோயாளியைக் குணப்படுத்தாமலே லட்சம் லட்சமாய் குவிக்க முடியும்."

மருத்துவ உலகில் வளர்ந்துவரும் ஆய்வக நோயறியும் முறையினால் (லேபரட்டரி டயக்னோசிஸ்) ஏற்பட்டிருக்கும் நூதன மாற்றம் இது. ஒரு நல்ல டாக்டருக்கான முன் நிபந்தனையாக அவர் எந்த அளவுக்கு நோயாளியைக் குணப்படுத்துவார் என்பது இருந்தது. அவரை ஊரில் "கைராசி" டாக்டர் என்பார்கள். ஒரு டாக்டர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமெனில், நோயாளிக்குச் சிறந்த சிகிச்சையளித்து குணப்படுத்தியாக வேண்டும். இதெல்லாம் அந்தக் காலம்!

Thursday, April 12, 2012

'தொ(ல்)லைக்காட்சியை அணைத்து வைப்போம்!

உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்? உண்மையான நண்பர்களுக்கு பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே நண்பர்களாக உள்ளார்களா? அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா? அப்படியானால், நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.  நர்சரி பள்ளியில் பாலர் வகுப்பில் படிக்கும் அப்துல்லா மிகச் சோர்வாகவும், கண்கள் ஒடுங்கியும் காணப்பட்டான். அவன் ஏதோ மனசிக்கலில் இருக்கின்றான் என்பது மட்டும் வெளிப்படையாகவே தெரிந்தது. "இப்போல்லாம் அவன் படிப்பில் அக்கறையில்லாமல் கவனக்குறைவாக இருக்கிறான், ஏதோ வித்தியாசம் தெரியுது அவங்கிட்ட". என்று கவலைப்படுகிறார்கள் அப்துல்லாவின் பெற்றோரும் தாத்தா பாட்டியும்.

தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்!



இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான் அவசரமாக கிடைக்கும். புத்தகம் வாசித்தல், குர்ஆன் ஓதுதல், பாடப் புத்தகங்களைப் படித்தல், நல்ல கட்டுரைகளை எழுதுதல், படித்துக் கொடுத்தல், தாய், தந்தைக்கு உதவுதல், தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக்க் கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள். வாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.