வருடம் முழுதும் நன்றாகப் படித்தால் மட்டும் போதாது. கடைசி நேரத்தில் பதறிவிட்டால் மொத்த உழைப்பும் வீண். வில்லிலிருந்து கிளம்பும் அம்பாக மனமும் உடலும் இருப்பது தேர்வுக்கு அவசியம். அதற்க நிபுணர்கள் சொல்லும் ஆலேசானைகள் என்ன?
“மாணவர்களுக்கு அவங்களோட பெற்றோர்தான் பதற்றத்தை ஏற்படுத்தறாங்க. சில பசங்க எவ்வளவு திட்டினாலும் அலட்டிக்க மாட்டாங்க. சில பசங்க லேசா கோபப்பட்டாலே இடிஞ்சு போய் உட்கார்ந்திடுவாங்க. பசங்களோட மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டு பெற்றோர் செயல்படணும். முதலில் தங்கள் குழந்தைகள் படிப்பில் கெட்டியா, சுமாரா, வெகு சுமாராங்கிறது பெற்றோருக்குத் தெரிஞ்சிருக்கணும்.
அதற்கேற்பத்தான் தேர்வில் ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியும். அதிக மார்க்க எடுக்கலைனா அம்மா அப்பா திட்டுவாங்கங்கிற பயம் நல்லா படிக்குற பசங்களைக் கூட திணற வச்சுடும். பெற்றோர் இவ்வளவு நாள் பசங்களை பயமுறுத்தியிருந்தாலும் தேர்வு நேரத்திலாவது அவங்ககிட்ட இணக்கமா பேசணும். உன்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணு. தேர்வில் சுலபமான வினாக்கள்தான் வரும். நீ நல்லா எழுதுவேங்கிற பெற்றோரின் உற்சாக வார்த்தைகளே பசங்களுக்கு தெம்பைக் கொடுக்கும். கடமையைச் செய், பலனை எதிர்பாராதேங்கிற கீதை உபதேசம் தேர்வுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்.
படிப்பில் தாங்கள் எங்கே நிற்கிறோம்ங்கிறதை மாணவர்கள் தெளிவா புரிஞ்சுக்கணும். ஒரு வருஷமா படிக்க முடியாததை ஒரு வாரத்தில் படிச்சுட முடியாது. ஏற்கெனவே படிச்சதை ரிவைஸ் செஞ்சுட்டு, மீதி நேரத்துலதான் புதுப் பகுதிகளைப் படிக்கணும். தேர்வையொட்டி பசங்ககிட்ட எதிர்பார்க்குற வாழ்க்கை முறையைப் பெற்றோரும் பின்பற்றத் தயாரா இருந்தா ரொம்ப நல்லது. அதுவே பசங்களுக்குத் தொந்தரவா ஆகிடக்கூடாது’ என்கிறார் மனநல ஆலோசகர் டாக்டர் அகஸ்டின்.
படித்த மாணவர்கள் கூட தேர்வு நேரத்தில் முடங்கிவிட இன்னொரு காரணம், உணவுப் பழக்கவழக்கங்களில் நேரும் குளறுபடி. இதைப்பற்றி சென்னையைச் சேர்ந்த டாக்டர் நளினியிடம் கேட்டோம். “புள்ள ராப்பகலா படிச்சு கஷ்டப்படுது. நாக்குக்கு ருசியா சமைச்சுக்கொடுப்போம்’னு அம்மாக்கள் களத்துல குதிச்சு டிராக்கை மாத்திடக்கூடாது. எண்ணெய், காரம், மசாலா அதிகமான உணவுகள் தேர்வு நேரத்துல பசங்களைக் கஷ்டப்படுத்திடும். முட்டை, சிக்கன், மட்டன் உணவுகள் அதிகமாக சாப்பிடக்கூடாது.

மீன் உணவுகள் இதயத்துக்கு ஆற்றலைக் கொடுக்கும். சுண்டல், முளைகட்டிய தானியங்கள் உள்ளிட்ட உணவுகள் சாப்பிடலாம். பழவகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடணும். மாதுளம்பழம், திராட்சை போன்ற பழங்கள் மூளைக்கு நல்லது. வயிற்றுப்பிரச்னை உள்ள பசங்க கமலா, ஆரஞ்சு போன்ற பழங்களைத் தவிர்க்கணும். புத்திக்கூர்மைக்கு வைட்டிமின் ஏவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸும் அவசியம். கீரைகள், பப்பாளி, முள்ளங்கி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் இந்த விட்டமின்கள் இருக்கு என்கிறார் நளினி.
நன்றி: உங்களுக்காக
No comments:
Post a Comment