Sunday, April 1, 2012

ஹரியானா குண்டுவெடிப்பு..! இரண்டு இந்துத்துவா சன்னியாசி ஆசிரமங்களுக்கு தொடர்பு..!

ஹரியானா மாநிலம் ஜிந்தில் முஸ்லிம்களை கூட்டாக படுகொலைச் செய்யும் சதித் திட்டத்துடன் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஆஸாத் சங்காடன் என்று ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பலை கைது செய்ததன் பின்னணியில் மேவாத் நூஹ் மெஹ்ஸில் ஆசிரமத்தை நடத்திவரும் சுவாமி தயானந்தை போலீஸ் கண்காணித்து வருகிறது.

முஸ்லிம் மஸ்ஜிதுகளிலும், மத்ரஸாக்களிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த தங்களுக்கு பணத்தை அளித்து தூண்டியது தயானந்தா என்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் இந்த ஆசிரமத்தை கண்காணித்து வருகின்றனர். அத்துடன் ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்வுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தயானந்தாவின் ஆசிரமத்துடன் ஜிந்தில் உள்ள உச்சனாவில் சுவாமி கோரக்‌ஷானந்தின் ஆசிரமத்தையும் போலீஸ் கண்காணித்து வருகிறது. கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கோரக்‌ஷானாந்தின் ஆசிரமத்தில் நிரந்தரமாக சென்றுவந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது.

சாகர்,காலா என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆஸாத் என்பவன் தான் இந்த ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலின் தலைவன் ஆவான். பிரவீன் சர்மா, ராம்நிவாஸ், குர்ணாம்சிங், ராகேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடர்கள் என சந்தேகித்து இவர்களை கைது செய்து விசாரணை நடத்திய பொழுது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. இவர்களை தவிர கிஸ்மத் சுரேந்தர், அஜய், பவன், ஸோனு ஆகியோருக்கும் இந்த ஹிந்துத்துவா தீவிரவாத குழுவுடன் தொடர்பிருப்பதாக போலீஸ் கண்டுபிடித்துள்ளது

No comments:

Post a Comment