Thursday, April 11, 2013

சவூதி "ஆஸாத் விசா" விதிமுறை மீறல் மற்றும் அபராதங்களின் பட்டியல்"

சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள "விதிமுறை மீறல் & அபராதங்களின் பட்டியல்" (08.04.2013 தேதிப்படி) வெளியிட்டுள்ளது அதனை
இங்கு பதிவிட்டு உள்ளோம் பார்க்கும் சகோதரர்கள் பிறருக்கும் கொண்டு செல்லுங்கள்....

1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (எக்ஸ்பைரி தேதி) 3 நாட்கள் முன்னதாக, இக்காமாவை புதுப்பிக்க (ரெனிவ் செய்ய) சமர்ப்பிக்க வேண்டும்.

மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்

2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது, தகுந்த காரணங்கள் அன்றியே அல்லாமல், காண்பிக்க வேண்டும்

மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்

Saturday, April 6, 2013

ஐயயோ, ஹோட்டல்லயா சாப்பிடப் போறீங்க?

நம்ம தமிழ்நாட்டு ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...

இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

Wednesday, April 3, 2013

'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்பவர்களே..... உஷார் ... உஷார்!

நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம். நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும், பலர் விசிட் விசா அல்லது ஃப்ரீ விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வருபவர்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை. விசிட் விசா மற்றும் ஃப்ரீ விசாவில் வருபவர்களுக்குத் தான் சிக்கல்கள் அதிகம். விசிட் விசாவில் வருபவர்கள் தொழிலாளர் விசா கிடைக்காமல் தலைமறைவாக ஒளிந்து கொண்டு வேலை செய்து பிழைப்பதும், ஃப்ரீ விசாவில் வருபவர்கள் கிடைக்கும் வேலையை விசாவுக்கு சம்பந்தமில்லாத இடங்களில் செய்து பிழைப்பதும் தான் தற்போதைய சவூதி அரேபியாவின் நிலை.

Tuesday, April 2, 2013

சர்க்கரை உணவா...விஷமா?

கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை. பனை, தென்னை மரங்களிலிருந்து இப்போதும் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. என்றாலும், உலக சர்க்கரை வர்த்தகத்தில் பெரும்பகுதியாக இருப்பது கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரைதான். ஆகவே, இதை முதலில் தெரிந்துகொள்வோம்.

'இதைத் தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகப்போகிறது?'

இன்றைக்கு, சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் உலக அளவில் நாம் முதலிடம் பிடித்திருப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளத்தான்! ஆம்... சத்துமிக்க பொருளாக விளையும் கரும்பு, 'வெள்ளைச் சர்க்கரை' என்கிற பெயரில் எப்படி நஞ்சாக மாற்றப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளத்தான்!