பங்கு வர்த்தக கணக்கு `டிமேட்’ கணக்கு தொடங்க 1. `பான்’ கார்டு நகல், 2. உங்கள் முகவரியுடன் உங்களை அடையாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின் கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல்), 3. உங்களுடைய புகைப்படம், 4.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல் செய்யப்பட்டது) போன்றவற்றை அளிக்க வேண்டும். ஒரு முதலீட்டாளர், `ஆப்லைன்’ மற்றும் `ஆன்லைன்’ என்ற இரு பிரிவுகளின் கீழ் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
இனி `டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கு என்ன, என்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும் மற்றும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு பங்குச் சந்தை புரோக்கரிடம் `டிரேடிங் அக்கவுண்டு’ எனப்படும் பங்கு வர்த்தக கணக்கு தொடங்குவது பற்றி பார்க்கலாம். நாம் முன்பே குறிப்பிட்டது போல், `டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கு முதலில் `பான்’ (றிகிழி) எனப்படும் வருமானவரி கணக்கு எண் அட்டை மிகவும் அவசியமாகும். தற் போது வருமானவரி கணக்கு எண் எல்லாவற்றிற்கும் முக்கிய ஆவணமாக கருதப் படுவதால், `பான்’ அட்டை வேண்டி விண்ணப்பித்த ஒரு வார காலத்திற்குள், வரு மானவரி அலுவலகம் அதனை அனுப்பி விடுகிறது.
சரி, `டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கு நீங்கள், உங்கள் புரோக்கர் அல்லது டீ.பி.க்கள் என்று அழைக்கப்படும் `டெபாசிட்டரி பார்டிசிபென்ட்ஸ்’ முகவர்களை அணுகி `டிமேட்’ கணக்கை தொடங்க சொல்லலாம். அவ்வாறு டீ.பி.க்களிடம் செல்லும்போது, 1. `பான்’ கார்டு நகல், 2. உங்கள் முகவரியுடன் உங்களை அடையாளம் காட்டுவதற்கான அத் தாட்சிகள் (பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின் கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்க வேண்டும்), 3. உங்களுடைய புகைப்படம், 4. நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல் செய்யப்பட்டது) போன்றவற்றை அளிக்க வேண்டும்.
வங்கிக் கணக்கு உங்கள் பெயரில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் அல்லது கணக்கு புத்தகம் இல்லாதவர்கள் அவர் களுடைய வங்கி கணக்கு குறித்த இரண்டு மாத காலத் திற்கான பற்று, வரவு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து ஆவ ணங்களுடன் `டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கான விண்ணப் பத்தையும் பூர்த்தி செய்து உங்கள் புரோக்கர் / டீ.பி.யிடம் சமர்ப்பிக்க வேண்டும். டீ.பி.யும் நீங்கள் அளித்த விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை எந்த `டெப்பாசிட்டரி’யில் பதிவு செய்து கொண்டுள்ளதோ (நேஷனல் செக்ரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட் – என்.எஸ்.டீ.எல் அல்லது சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் – சி.டீ.எஸ்.எல்) அதற்கு அனுப்பி வைக்கும்.
டெப்பாசிட்டரி அமைப்பு, முதலீட்டாளர்களால் அனுப்பப்பட்ட விண்ணப்பம் உள்ளிட்ட ஆவணங்களை ஆராய்ந்து பார்த்து `டிமேட்’ கணக்கை தொடங்கி, கணக்கு எண் போன்றவற்றை டீ.பி.க்கு அனுப்பி வைக்கும். டீ.பி.யும் `டிமேட்’ கணக்கு தொடங்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரிவிக்கும். அதன் பிறகு நீங்கள் `டிமேட்’ கணக்குதாரர் ஆகிவிடுவீர்கள். பொதுவாக `டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கு சுமார் ஒரு வார காலம் ஆகும்.
டிமேட் கணக்கு தொடங்குவதற்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?`டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கு தற்போது சுமார் ரூ.150 செலவாகிறது. ஆனால், இந்த `டிமேட்’ கணக்கை பராமரிப்பதற்காக, ஒவ்வொரு டீ.பி.யும் அவர்கள் அளிக்கும் சேவையின் அடிப்படையில் வெவ்வேறு விதமான அளவுகளில் கட்டணம் வசூலிக்கின்றனர். பெரும்பாலும் `டிமேட்’ கணக்கை பராமரிக்க ஆண்டு கட்டணமாக சுமார் ரூ.250 வசூலிக்கப்படுகிறது.
`டிமேட்’ கணக்கு தொடங்கப்பட்டவுடன் உங்களிடம் நிறுவனங்களின் காகித வடிவிலான பங்குகள் இருந்தால் அதனை மின்னணு பங்குகளாக மாற்றுவதற்கு டீ.பி.க்கு அனுப்பி வைக்க வேண்டும். டீ.பி. அதனை மின்னணு பங்குகளாக மாற்றுவதற்கான ஏற்பாடு களை மேற் கொள்ளும். மேலும் அந்நிறுவனங்கள் வழங்கும் உரிமைப் பங்குகள், இல வசப் பங்குகள் போன்றவையும் மின்னணுப் பங்குகளாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக வந்துவிடும். தற்போது `பான்’ கார்டில் உள்ள உங்களுடைய பெயரின் அடிப்படையில்தான் `டிமேட்’ கணக்கு தொடங்கப்படுகிறது. எனவே, நீங்கள் வாங்கும் நிறுவன பங்குகள், வங்கி கணக்கு போன்றவையும் அதே பெயரில் இருக்கும் வகையில் பராமரிப்பது நல்லது.
உதாரணமாக ராமன் என்ற பெயர் கொண்டவர், அவருடைய பெயருக்கு முன்னால், அவரின் தந்தையின் பெயரான சந்தானம் என்பதின் முதல் எழுத்தை `எஸ்’ என்று குறிப்பிட்டிருப்பார். இந்த பெயரிலேயே (எஸ். ராமன்) வங்கி கணக்கு வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் `பான்’ அட்டையில் `சந்தானம் ராமன்’ என்று இருக்கும். எனவே அவர், அவருடைய கணக்கு உள்ள வங்கிக் கிளைக்கு `சந்தானம் ராமன்’ என்ற பெயரில் வரும் காசோலைகளையும் தன்னுடைய கணக்கில் வரவு வைக் கும்படி கடிதம் அளிக்கலாம். இந்நிலையில், புதிதாக வங்கி கணக்கு தொடங்குபவர்கள், `பான்’ கார்டில் இருப்பதுபோன்று வங்கி கணக்கைத் தொடங்கிக் கொள்வது நல்லது.
`டிரேடிங் அக்கவுண்டு’
`டிமேட்’ கணக்கு தொடங்கப்பட்டு விட்டது. இதனையடுத்து, முதலீட்டாளர், அவர் வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள, பங்குச் சந்தைகளில் பதிவு பெற்றுள்ள புரோக்கர் அலுவலகத்திற்கு சென்று, பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான `டிரேடிங்’ கணக்கை தொடங்கச் சொல்லலாம். இதற்கு `புரோக்கர் – வாடிக்கையாளர் ஒப்பந்தம்’ என்று பெயர். ஒரு முதலீட்டாளர், பங்கு வர்த்தக ஒப்பந்த கணக்கை தொடங்குவதற்கு, `டிமேட்’ கணக்கை தொடங்குவதற்கு அளித்த ஆவணங்களை போன்று இதற்கும் அளிக்க வேண்டும்.
பங்குச் சந்தை புரோக்கர் தனது வாடிக்கையாளர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே, பங்கு வர்த்தக கணக்கை தொடங்க விரும்பும் ஒரு முதலீட்டாளர் 1. வருமானவரி கணக்கு எண் (பான்) நகல், 2. `டிமேட்’ கணக்கு எண், 3. உங்களுடைய வங்கி கணக்கு எண், 4. உங்களுடைய பெயர், பிறந்த தேதி, உங்கள் புகைப்படம், வீட்டு முகவரி, கல்வி தகுதி, வேலை, இந்தியரா அல்லது அயல்நாட்டில் வசிக்கும் இந்தியரா போன்ற தகவல்களை அளிக்க வேண்டும்.
இவை தவிர, உங்கள் இருப்பிட முகவரிக் கான அத்தாட்சியாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவற்றில் உங்கள் புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். உங்களுடைய புரோக்கர் மேற்கண்ட ஆவணங்களை சரிபார்த்து நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் வகையில் `டிரே டிங்’ கணக்கை தொடங்கித் தருவார். இதன் பிறகு நீங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கி / விற்கும் நடவடிக்கையை தொடங்கலாம்.
தற்போதைய நிலையில் பெரும்பாலான டீ.பி.க் கள் / புரோக்கர்கள் `டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கு ரூ.150-ஐயும், `டிரேடிங்’ கணக்கை தொடங்க ரூ.150-ஐயும் கட்டணமாக வசூலிக்கின்றனர். இவை தவிர, உங்களுடைய விருப்பத்தின் அடிப்படையிலும், அனுமதியுடனும் `டெலிவரி இன்ஸ்ட்ரக்ஷன் சிலிப்பை’ உடனடியாக வழங்காமல் புரோக்கர் உங்களுக்காக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான பி.ஓ.ஏ. எனப்படும் `பவர் ஆப் அட்டார்னி’ பத்திர நடைமுறைக்காக ரூ.110-ஐயும் கட்டணமாக பெறுகின்றனர். ஆக, `டிமேட்’ கணக்கு, `டிரேடிங்’ கணக்கு மற்றும் பி.ஓ.ஏ. அனுமதி பத்திரம் ஆகிய மூன்றிற்கும் சேர்த்து ரூ.410 கட்டணம் வசூ லிக்கப்படுகிறது.
பங்கு வர்த்தகத்தில் தற்போது `ஆப்லைன்’ மற்றும் `ஆன்லைன்’ என்ற இரு பிரிவுகளின் கீழ் ஈடுபடலாம். இவற்றுள் `ஆப்லைன்’ என்பது ஒரு முதலீட்டாளர் அவருடைய புரோக் கரிடம் நேரடியாக அல்லது தொலைபேசியின் வாயிலாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கச் சொல்வது அல்லது விற்கச் சொல்லி ஆர்டர் வழங்கும் சாதாரண நடைமுறை யாகும்.
`ஆன்லைன்’ எனப்படுவது இணையதளத்தின் வாயிலாக, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள `குறியீடு’ மற்றும் `பாஸ்வேர்டு’ வாயிலாக கம்ப்ட்டர் மூலம் நேரடியாக பங்கு வர்த் தகத்தில் ஈடுபடுவதாகும். இந்த கணக்கு வசதியை பெற சுமார் ரூ.710 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நன்றி: உங்களுக்காக
நன்றி: உங்களுக்காக
No comments:
Post a Comment