அப்சல் குரு .....

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு பலிகடா அப்சல் குரு .....


  10.12.2012 அன்று நமது மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் அப்சல் குருவின் கருணை மனு மீதான முடிவு இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குப்பின் எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். The Hindu 11.12.2012
  
     டிசம்பர் 222012 அன்றே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்துள்ள நிலையில் இனி ஒரு நாள் திடுதிப்பென தூக்கிலிட்டு விட்டோம் என்ற செய்திகள் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்சல் குரு நமது நாடாளுமன்ற தாக்குதல் முயற்சியில் (13.12.2001) தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளி. தூக்கிலிடப்பட்ட பின் வளரும் விவாதங்கள் எந்த நியாயத்தையும் வழங்கிவிடமாட்டா. யாருடைய கண்களையும் திறந்து எந்தப் பலனுமில்லை.

     ஆனால் நீதிக்கான நமது போர் தொய்வின்றி தொடரும். இந்த வகையில் அப்சல் குரு விவகாரத்திலும் அவர் குற்றம் சாட்டப்பெற்ற நாடாளுமன்ற தாக்குதலையும் குறித்து நாம் பல தொடர்களை வைகறையில் வெளியிட்டுள்ளோம்.

     அவை நாடாளுமன்ற தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்” என்ற பெயரில் நூலாகவும் வெளி வந்துள்ளது. அந்த நூலிலும் அதற்கு பின்னர் வந்த தொடரிலும் இடம் பெறாத பல தகவல்களை இடம் பெற செய்கின்றோம்.

இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு பெரும் உண்மை:


     PUDR People’s for Democratic Rights என்ற ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்பு ஓர் ஆவணத் தொகுப்பை வெளியிட்டது. அதற்கு டிசம்பர் 13 ஜனநாயகத்தின் மேல் தீவிரவாதம் என தலைப்பிட்டிருந்தது

     இதில் வந்த உண்மைகளை நமது தொலைக்காட்சிகள் ஏறெடுத்தும் பார்த்திட்ட தாகத் தெரிந்திடவில்லை.

     அதில் பக்கம் 47 இல் கணீர் என்றொரு பிரகடனம் Finally, parts of Afzal’s 313 when conjoined and interpreted raise daka      issues about the complicity of the security agencies in the conspiracy     புரியும்படியாக இதைச் சொன்னால்:

     அப்சல் குரு நீதிபதியின் முன் கொடுத்த வாக்கு மூலத்தின் ஒரு பகுதியையும் இதர தடயங்களையும் தொகுத்து ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் நாடாளுமன்றத் தாக்குதல் சதியில் பாதுகாப்பு படைகளும் தங்கள் கைவரிசையைக் காட்டி இருக்கின்றன என்ற கசப்பான உண்மை வெளிவருகின்றது.

     நமது நாடாளுமன்ற தாக்குதல் அதை தாக்கிட நடந்த முயற்சியில் நமது பாதுகாப்பு படைகளின் பங்கு” என்பவை எத்துணை பாரதூரமான பதிவு. இதில் இன்றளவும் எந்த விசாரணையும் இல்லை அரசு தரப்பிலிருந்து.
     ஆனால் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம் ஒரு பெரும் ஆய்வை நடத்தி ஆவணத் தொகுப்பொன்றை மக்கள் மன்றத்தில் வைத்திருக்கின்றது. அதில் இந்த வரிகள் ஒரு பெரும் சவாலை தொடுத்துக் கொண்டே இருக்கின்றன.

     அதனை மீடியாக்கள் கண்டுகொள்ளவே இல்லை.

     மொத்தத்தில் கஷ்மீரின் STF - Special Task Force என்ற சிறப்புப்படையும் ராஜ்பிர் சிங் என்ற டெல்லி காவல்துறை ஆணையரும் ஏற்பாடு செய்ததே இந்த நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி என அந்த PUDR People’s Union Democracy Rights  அறிக்கை உணர்த்திற்று.

     இதில் கைதிகளாக காவல் துறையின் கட்டுப்பாட்டிலிருந்த பல கஷ்மீர் முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.

     அப்சல் குருவின் விவகாரத்திலும் இதுவே நடந்தது. அதனை சுருக்கமாக இங்கே தருகின்றோம்.

அப்சல் யார்?

     முஹம்மத் அப்சல் வறுமையில் வாடிய ஓர் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய தந்தை அவருடைய இளம் பருவத்திலேயே இறந்து  போனார். அவருடைய அண்ணன் ஏஜாஸ் அஹ்மத் தான் அவரை வளர்த்தார். ஏஜாஸால் நன்றாக படித்திட இயலவில்லை. அதனால் அவன் தன் தம்பியை படிக்க வைக்க விரும்பினார். தம்பி அப்சல் குரு படிப்பதில் ஆர்வம் காட்டினான். அப்சல் குரு நன்றாக படித்து ஒரு மருத்துவராக ஆகிட வேண்டும் என்று விரும்பினான். இந்த இலட்சியத்தை அடைந்திட ஏஜாஸ் உதவி செய்தார்.

காஷ்மீரில் போர்:

     அப்சல் மருத்துவ படிப்பின் முதலாண்டில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் கஷ்மீரின் இளைஞர்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அந்தப் போராட்டம் 1987ல் கஷ்மீரில் நடந்த பொது தேர்தலுக்கெதிரான போராட்டம். இந்த தேர்தலில் ஜெயித்தவர்கள் சிறையிலடைக்கப் பட்டார்கள். மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் சட்டசபைக்கு அனுப்பப்பட்டார்கள் (ஒரு பெரும் ஜனநாயக படுகொலை நடந்தது)

     இந்த போராட்டம் காலாகாலமாக கஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிஒடுக்குமுறை இவற்றிற்கு எதிராக எழுந்தது. தாமாக மக்கள் படை திரண்டு பல பத்தாண்டுகளாக நடந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய போராட்டம். இந்தப் போராட்டத்தில் நடந்த ஊர்வலங்கள் பல மைல்கள் நீளங் கொண்டவை. ஆயிரக் கணக்கான இளைஞர்கள் வெகுண்டெழுந்தார்கள்.

     தாங்கள் உலகில் வைத்திருந்த அபிலாஷைகளைப் புறந்தள்ளிவிட்டு தங்களது இல்லங்களை துறந்து பனிமண்டலங்களைக் கடந்து பள்ளத்தாக்குகளைக் கடந்து பாகிஸ்தான் கைவசமுள்ள கஷ்மீருக்கு சென்று ஆயுத பயிற்சி எடுக்கச் சென்றார்கள். அப்சல் குருவும் அவர்களில் ஒருவன்.

     மூன்று மாதங்களுக்கு பின் அவன் திரும்பி வந்து விட்டான். காரணம் பாகிஸ்தானும் தன் அரசியல் விளையாட்டுகளுக்காக கஷ்மீர் இளைஞர்களை பயன்படுத்துகின்றது என்பதை தெரிந்து கொண்டான். அதனால் அவனது சிந்தனைகள் மாறின. அவன் திரும்பி வந்தான். நமது எல்லைப் பாதுகாப்பு படையிடம் சரணடைந்தான். அவன் சரணடைந்ததற்கு நமது எல்லைப் பாதுகாப்பு படையினர் விதித்த நிபந்தனை அவன் இன்னும் இரண்டு பேரை சரணடைந்திட செய்திட வேண்டும். இந்த நிபந்தனையையும் அவன் நிறைவேற்றிடவே செய்தான்.


     அப்சல் வேலை தேடினான் வாழ்வதற்கு. மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் வேலை ஒன்று அவனுக்கு கிடைத்தது. இது அவனுடைய மருத்துவராக வேண்டும் என்ற ஆசையை ஓரளவுக்கு ஈடு செய்வதாக இருந்தது. இதில் மாதம் ஐந்து ஆயிரம் ரூபாய் வருவாயாகக் கிடைத்தது. அவன் திருமணம் செய்து கொண்டான்.

     திருமணமான இரண்டு நாள் கழித்து கஷ்மீரின் சிறப்புப் படையைச் சார்ந்த சிலர் அவன் வீட்டுக்கு வந்தார்கள். அவனை அவர்களுடைய முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அவனை அவர்கள் ஏறத்தாழ ஒரு மாதம் வைத்திருந்தனர். ஒவ்வொரு நாளும் அவன் குரூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டான்.

     அவனுடைய மலத்துவாரத்தில் பெட்ரோலை ஊற்றினார்கள். குளிர்ந்த நீரில் பல நாள்கள் வைக்கப்பட்டிருந்தான். கடுமையான உதைகளுக்கும் அடிகளுக்கும் ஆளாக்கப்பட்டான்.

     அவனை இந்த சித்திரவதைகளிலிருந்து விடுவித்து வெளியே விட வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாயைத் தந்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்கள்STF என்ற கஷ்மீர் சிறப்புப்படையினர். இந்த சிறப்புப்படையினர் கஷ்மீர் மக்களிடம் தண்டால் வசூல் செய்வதில் மிகவும் பிரசித்து பெற்றவர்கள்.

     அப்சல் குருவின் மனைவி தபசும் தன்னிடமிருந்த எல்லா அணிமணிகளையும் விற்ற பின் தான் இந்த ஒரு லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்திட முடிந்தது. அப்சல் பயன்படுத்திக் கொண்டிருந்த ஸ்கூட்டரை அவனுடைய தாய் விற்று விற்றாள்இந்த ஒரு லட்சம் ரூபாய் என்ற இலக்கை அடைந்திட.

     ஒரு லட்ச ரூபாயைத் தந்தார்கள். அப்சலை மீட்டார்கள். ஆனால் அவனை ஒரு நடைபிணமாகவே அவன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்கள்.

     அப்சல் சிறப்பு படைகளின் கைகளிலிருந்த நாள்களை அந்தக் குடும்பத்தினரால் மறந்திட இயலவில்லை.

     மக்கள் எழுச்சி : அடுத்து அப்சல் சிறப்பு படையின் (எஸ்டிஎஃப்-இன்) தகிடுதத்தங்களை வெளியே சொன்னால் என்ன நடக்குமோஇந்தச் சிறப்புப் படையினர் என்ன செய்வார்களோ என்ற பீதியும் பயமும் அப்சலின் குடும்பத்தைத் தொற்றிக் கொண்டது.

     இந்த பயம் அப்சலை விட அவனுடைய அண்ணன் ஏஜாஸை அதிகமாக தொற்றிக் கொண்டது. மொத்த குடும்பமும் பீதி வயப்பட்டது.

     இந்த சிறப்பு படையை அகற்றிட வேண்டும். அது நடத்தும் சித்திரவதைக் கூடங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் மக்கள் போராடினார்கள். உலகெங்கிலுமிருந்து கஷ்மீரைப் பார்வையிட வந்த மனித உரிமை அமைப்புகள் போராடின. ஆனால் நம் நாட்டு ஊடகங்களோ நம் நாட்டில் இயங்கும் மனித உரிமை அமைப்புகளோ இதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

     நம் நாட்டு மனித உரிமை அமைப்புகள் கஷ்மீர் மக்களைச் சித்திரவதைச் செய்தால் அது நாட்டுப்பற்று என எடுத்துக்கொள்கின்றார்கள் என்று நந்திதா ஹாக்சர் ஆதங்கப்படுகின்றார்

     இந்த நந்திதா ஹாக்சர் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பிரதான குற்றவாளி SAR ஜீலானிக்காக வாதாடியவர்.

     எஸ்.டி.எஃப் என்ற கஷ்மீர் சிறப்புப் படையின் மீது மக்கள் எந்த அளவுக்கு வெறுப்புக் கொண்டார்கள்அந்த வெறுப்பால் அவர்கள் எவ்வாறு ஒருமுகப்பட்டு நின்றார்கள் என்றால் இந்த சிறப்புப்படையை அகற்றிடு வேன் என்று வாக்குறுதி கொடுத்தால் தேர்தலில் வென்றிடலாம் என்ற நிலை இருந்தது.

     உண்மையில் இப்படியொரு வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கித்தான் முஃத்தி செய்யீத் என்பவர் கஷ்மீர் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தார். (மேலே சொன்ன மேற்கோள்)

     சில நாட்கள் கழித்து இந்த சிறப்பு படையினர் அப்சலிடம் அவர்கள் சொல்லும் நபர்களை வேவு பார்த்து தகவல் தந்திட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினார்கள். இராம் மோகன் ராண் என்ற 22 ராஷ்டிரிய்ய ரைபிள் படையைச் சார்ந்தவர் அப்சலை அழைத்துச் சென்று அவனுடைய மறைவிடங்களில் மின்சாரத்தை பாய்ச்சினார். அவரை அவமானப்படுத்தினார்கள். வதைத்தார்கள். வைதார்கள்.

தொடரும் சித்திரவதை:     அடிக்கடி அவர்கள் அப்சலை அழைத்து சென்று சித்ரவதை செய்தார்கள். ஒரு நாள் இரவு டி.எஸ்.பி வினாய் குப்தாவும் டி.எஸ்.பி டாரிந்தர் அவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தவர்கள். அனைவரையும் வாய்க்கு வந்தபடி வைதார்கள். அப்சலை அழைத்து சென்றார்கள். மீண்டும் பணம் கேட்டார்கள். மிச்சம் மீதி இருந்தனவற்றை விற்றுத் தந்து தான் அப்சலை மீட்டிட முடிந்தது.

     இந்த கொடுமைகள் தாழாமல் அவர் டெல்லிக்கு வந்து விடுவது என்று முடிவு செய்தார். அங்கே தனது வியாபாரத்தை தொடர்ந்தார். டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். படித்து பட்டமும் பெற்றார்.

     முஹம்மத் : ஒரு முறை அவர் குடும்பத்தவர்களைப் பார்க்க வந்த போது சிறப்புப் படையினர் அவரை அழைத்துச் சென்றனர். ஹும்ஹாமா என்ற இடத்திலுள்ள சிறப்பு படையின் முகாமில் வைத்து முஹம்மத் என்பவரையும் தாரிக் என்பவரையும் அறிமுகப்படுத்தினார்கள். அதில் முஹம்மத் என்பவரை டெல்லிக்கு அழைத்துச் சென்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். அந்த முஹம்மத் யார் என்பதோ அந்த முஹம்மதை எஸ்.டி.எஃப் என்ற சிறப்பு படையினர் ஏன் டெல்லிக்கு அழைத்துச் செல்ல கட்டாயப்படுத்துகின்றார்கள் என்பதோ அப்சலுக்குத் தெரியாது.

     இந்நிலையில் அவர் இனி கஷ்மீரிலிருந்து தன் குடும்பத்தவர்களை டெல்லி அழைத்து வந்திட வேண்டும் என முடிவு செய்தார். அவருக்கொரு மகனும் பிறந்திருந்தான்.

     டெல்லியில் இந்திராவிகாரின் ஒரு வீட்டுக்கு ஏற்பாடு செய்தார். பெருநாளுக்கு கஷ்மீருக்கு வந்து குடும்பத்தினருடன் பெருநாள் கொண்டாடிவிட்டு குடும்பத்தோடு டெல்லி சென்றிட கஷ்மீர் சென்றார். ஸ்ரீநகர் பஸ் நிலையத்தில் இறங்கினார். தயாராக இருந்த கஷ்மீர சிறப்புப்படையினர் அவரைக் கைது செய்தார்கள். நாடாளுமன்றத் தாக்குதலில் இணைத்தார்கள். இப்போது தூக்கு மேடைக்கே கொண்டு சென்று விட்டார்கள்.

     பாட்னாவிலிருந்து தூக்குக் கயிரு தருவிக்கப்பட்டது. தூக்கில் யார் போடுவது என்பதும் முடிவாகி விட்டது.

     ஒருவேளை இறந்த பின் அவர் என்ன என்ன அறிக்கை விட வேண்டும் என்பதும் எழுதி வாங்கப்பட்டிருக்கும்.

அப்சல் குருவிடம் வாக்குமூலம் வாங்கியவரின் வாக்குமூலம்:


     நமது பாரத நாட்டில் அப்பாவி முஸ்லிம்களை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வாக்குமூலங்களை வாங்கிடுவதற்கென ஐந்து சித்திரவதைக் கூடங்கள் இருக்கின்றன. இதனை நாம் வைகறை வெளிச்சத்தில் ஏற்கனவே விரிவாக வெளியிட்டிருக்கின்றோம்.

     இந்த வழியிலேயே காஷ்மீர் எஸ்.டி.எஃப்-ஐ சார்ந்த டிரேவிந்தர் சிங்  என்பவர் அப்சல் குருவையும் சித்திரவதைச் செய்து வாக்குமூலம் வாங்கி இருக்கின்றார். இவர் தான் சித்திரவதை செய்ததை பர்வேஷ் புகாரி என்ற பத்திரிகையாளரிடம் இப்படி கூறுகின்றார்:

     நான் என்னுடைய முகாமில் வைத்து அப்சல் குருவை பல நாட்கள் சித்ரவதைச் செய்தேன். விசாரித்தேன். அவனை கைது செய்ததை நாங்கள் எங்களுடைய எந்தப் பதிவேட்டிலும் பதிந்திடவில்லை. அவனை எங்களுடைய முகாமில் வைத்து எப்படியெல்லாம் சித்திரவதைச் செய்தோம் என்பதை விளக்கியிருக்கின்றானோ அது அத்தனையும் உண்மை. அன்றைய நாட்களில் அது தான் எங்களுடைய வழக்கம். நாங்கள் அவனுடைய மலத்துவாரத்தில் பெட்ரோலை ஊற்றினோம். நான் அவன் மீது மின்சாரத்தை பாய்ச்சி சித்திரவதை செய்தேன். ஆனாலும் அவனுடைய உறுதியை என்னால் உடைத்திட இயலவில்லை. அவனை நாங்கள் எவ்வளவு குரூரமாக சித்திரவதை செய்திட இயலுமோ அவ்வளவு குரூரமாக சித்திரவதை செய்தோம். 

ஆனாலும் அவன் கொஞ்சமும் விட்டுக் கொடுக்கவில்லை. நாங்கள் எங்களால் இயன்ற எல்லா குரூரங்களையும் கட்டவிழ்த்து விட்டோம்.  அவன் எதையும் ஒத்துக் கொள்ளவில்லை. காசிபாபா என்ற பாகிஸ்தான் உளவுத்துறையின் ஏஜெண்டுக்கும் அவனுக்கும் தொடர்பிருக்கின்றது என நாங்கள் சொல்லிடச் சொன்னோம். ஆனாலும் அவன் கிஞ்சிற்றும் விட்டுக் கொடுத்திடவில்லை. அவன் மலைபோல் நின்று விட்டான். நான் சித்திரவதை செய்வதில் கடுமையானவன். யாரை வேண்டுமானாலும் பணிய வைத்திடுபவன் என்ற பெயரையும் புகழையும் பெற்றவன். என்னுடைய சித்திரவதைக்குப் பின்னும் ஒருவன் குற்றமற்றவனாக வருகின்றான் என்றால் எவனும் அவனை சீண்டிட முடியாது. அவனை நல்லவன் என்றே மொத்த காவல் துறையும் எடுத்துக் கொள்ளும்.

     பர்வேஷ் பாரி இந்தப் பேட்டியை ஒரு பேட்டி என்ற அளவில் அல்லாமல் தனிப்பட்ட சம்பாஷனை என்ற பெயரில் டிரேவிந்தர் சிங் என்ற கஷ்மீரின் சிறப்புப் படையின் தலைவரிடமிருந்து கறந்த தகவலாகும்.

     இதனை தெஹல்கா பாணி என்றும் சொல்வார்கள்.

     டிரேவிந்தர சிங் தான் கொடுமையானவன் சித்திரவதைச் செய்பவன் என்பனவற்றை எள்ளளவும் மறைப்பவனல்ல. ஒரு தொலைக்காட்சியில் இப்படி பேட்டிக் கொடுத்தான். சித்திரவதை தான் தீவிரவாதத்தை தடுக்கும் ஒரே வழி. நான் அதை நாட்டுக்காக செய்கின்றேன். (அதே ஆதாரம் அதே பக்கம்)

     உண்மையில் அப்பாவிகளை இவன் செய்யும் தீவிரவாத செயல்களை ஒத்துக் கொள்வதற்கே இவன் சித்திரவதைகளைச் செய்கின்றான். பதவி உயர்வும் பணமும் தான் இவனது குறிக்கோள்.

     இதே அப்சல் குருவின் குடும்பத்தில் இருந்த கடைசி காசு வரைக்கும் கறந்தெடுத்தவன் இவன். இறுதியில் அவனை தூக்கு மேடையில் கொண்டு நிறுத்தி விட்டான்.

அப்சல் குருவே இலக்கு:


     அப்சல் குருவை தூக்கிலே போட்டுத்தான் எல்லா உண்மைகளையும் மண்மூடிப்போகச் செய்திட வேண்டும் என்பதை இன்னொரு நிகழ்வு உண்மைப் படுத்தும்.

     காவல்துறையினர் நீதிமன்றங்களில் அவனுடைய குற்றங்களை நிரூபிக்க வேண்டும் என்பதை விட மக்கள் மன்றத்தில் அவனை குற்றவாளியாகக் காட்டிட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள். இதற்காக ஒரு பெரும் ஏற்பாட்டைச் செய்தார்கள். அது  அப்சல் குருவை பிடித்து வந்து நான் தான் குற்றவாளி என தொலைக்காட்சியின் முன் சொல்லிட வைத்தார்கள்.

தொலைக்காட்சிப்பேட்டி:     டிசம்பர்132001 இல் நாடாளுமன்றத் தாக்குதல் முயற்சி நடைபெற்று டிசம்பர் 20 2001ல் தொலைக்காட்சி பேட்டி எடுத்தன

     இந்த பேட்டிகள் எங்கு வைத்து எடுக்கப்பட்டன என்பது இன்னும் விநோதமானது.

     இந்த பேட்டி டெல்லியிலுள்ள சிறப்பு காவல் நிலையத்தின் அலுவலகத்தில் வைத்து எடுக்கப்படுகின்றது. பேட்டிகளை ஒருங்கி ணைத்து வழிநடத்திக் கொண்டிருந்தவர் காவல் துறையின் ஸ்பெஷல் செல் பிரிவின் தலைவர் ராஜ்பிர் சிங். கஷ்மீர் எஸ்.டி.எஃப்க்குப் அடுத்ததாக நாடாளுமன்ற தாக்குதலின் மொத்த மூளையும் இவர் தான். அப்சல் குருவை தூக்கில் போட்டு அரசு முகவாண்மைகளின் சதிகளை மொத்தமாக மறைத்திட வெகு நாட்களுக்கு முன்னரே முடிவு செய்திருந்தார் இவர்.

      பேட்டியின் போது அப்சல் குருவிடம் ஒரு கேள்வி. ஒசாமா பின் லேடன் அவர்கள் பற்றிய இலக்கியங்கள் SAR ஜீலானியிடம் இருந்தனவா?

     இந்தக்கேள்விக்கு அப்சல்குரு SAR ஜீலானி என்பவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனப்பதில் சொல்லுகின்றார். உடனேயே டெல்லி சிறப்புப்பிரிவு படையைச் சார்ந்த ராஜ்பிர்சிங் காட்சிகளை நிறுத்த சொல்லுகின்றார். இதனை நீதிமன்றம் இப்படிப்பதிவு செய்கின்றது.

     ஷஹீர்கான் ஆஜ்தக் என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தின் முதன்மை செய்தியாளர் சிறப்பு நீதிமன்றத்தில் இப்படி கூறினார்:

     நான் ஆஜ்தக் டிவி சானலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன். நான் குற்றம் சுமத்தப்பட்ட முஹம்மத் அப்சல்குரு என்பவரை 20 டிசம்பர் 2001ல் டெல்லி சிறப்பு காவல் பிரிவின் லோடி ரோடு அலுவலகத்தில் வைத்துப் பேட்டிக் கண்டேன். இந்த பேட்டி 15 நிமிடங்கள் தொடர்ந்தன.

     நான் அப்சலிடம் கேட்டக் கேள்வி SAR ஜீலானி இடமிருந்து ஒசாமா பின்லேடன் பற்றி இலக்கியங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டனவாஎன்பதாகும்

     அப்சல் குரு தன்னுடைய பதிலில் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார்.

     எனக்குப்பின் அதாவது ஆஜ்தக் தொலைக்காட்சிக்குப் பின் வேறு சில தொலைக்காட்சிகளும் பேட்டி     எடுத்தன. நான் பேட்டி எடுக்கும்போது என்.டி.டி.வி தொலைக்காட்சியை சார்ந்தவர்களும் அங்கு இருந்தார்கள். நான் ஆஜ்தக் தொலைக் காட்சிக்காக பேட்டி எடுத்த பின் சில தொலைக்காட்சி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என்னிடம் ஜீலானியின் நாடாளுமன்றத் தாக்குதலில் பங்கு பற்றி கேட்டார்கள். நான் அவர்களிடம் ஜீலானி அப்பாவி எனக் கூறினேன். உடனேயே காவல் துறை துணை ஆணையர் ராஜ்பீர்சிங் எழுந்து என்னிடம் ஜீலானி பற்றி யாரிடமும் எதுவும் சொல்லிடக் கூடாது என்றார். இந்த சம்பவம் சாட்சியம் எண் 4-கின் முன்னாலேயே நடந்தது. குற்றம் சாட்டப்பெற்ற ஏனையோரை பேட்டிக் காண எங்களை அனுமதிக்கவில்லை.

     அதன் பின் ராஜ்பீர்சிங் எழுந்தார். என்னிடம் வந்தார். அவர் குற்றம் சுமத்தப்பட்ட அப்சல் குருவிடம் SAR ஜீலானியைப் பற்றி யார் கேள்வி கேட்டாலும் எதுவும் சொல்ல வேண்டாம் என என்னிடம் சொன்னதும் உண்மையே.

     ஆனால் ராஜ்பீர்சிங் இப்படிச் சொல்லிடும் போது நான் அப்சல்குருவைப் பேட்டி எடுத்து முடித்திருந்தேன்.

     அதன்பின் ராஜ்பீர்சிங் என்னிடம் வந்து ஜீலானி பற்றி அப்சல் குரு சொன்னவற்றை தொலைக்காட்சியில் காட்டிட வேண்டாம் எனக்கூறினார். அதேபோல் நாங்கள் 20 டிசம்பர் 2001 மாலை 5 மணிக்கு இந்தப் பேட்டியை ஒளிபரப்பு செய்த போது அந்த வரிகளை விலக்கிக் கொண்டோம். ஆனால் 100 நாட்களுக்குப் பின் நாங்கள் மறு ஒளிபரப்பு செய்தபோது அந்த வரிகளையும் சேர்த்துதான் ஒளிபரப்புச் செய்தோம்.


     நீதிமன்ற பதிவுகளிலிருந்து:( (PUDR: report december 13 Terror over democrasy page 208, 209, 210 deposition of aaj tak principal correspondent oct 10 2002 dw4) இங்கே நாம் கவனிக்க வேண்டியது எல்லோமே முன்னரே முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. அப்சல் குருவை மக்கள் மன்றத்தில் பிரதான குற்றவாளியாகக் காட்டி விட்டு அவனை தூக்கில் போட்டு மொத்த சதியையும் ஒன்றாக மூடி விட வேண்டும் என்பதே தொடக்க நாள் முதல் திட்டம்.

     அதனால் காவல் நிலையத்தில் வைத்த ஒரே ஒரு குற்றம் சுமத்தப்பட்டரை பேட்டி எடுத்திருக்கிறார்கள்.   மக்கள் மன்றத்தில் அவரது வாயைக் கொண்டே அவரை குற்றவாளி என சொல்லிட வைத்த பின்பு சாட்சியங்கள் சட்டத்தின் சீரான நடவடிக்கைகள் எல்லாம் எதற்கு?

     குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சுமத்தப்பட்டவரை நிரபராதி” என்றே கொள்ள வேண்டும் என்ற சட்டத்தின் பொன்னான கோட்பாடுகளை காவல்துறை காற்றிலே பறக்க விட்டது. நீதித்துறை இதனை கண்டித்தது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையுமில்லை.

     ஆனால் அப்சல் குரு விவகாரத்தில் குறிப்பாக நாடாளுமன்ற தாக்குதலில் இஃது இன்னும் ஒருபடி மேலே நடந்தது. அதாவது காவல்துறை ஜோடித்த மொத்தப் பொய் வழக்கையும் மையமாகக் கொண்டு ஒருபடமே எடுக்கப்பட்டது. இதை ஸீ நியூஸ் நிறுவனம் எடுத்தது. திரைப்படத்தின் பெயர் டிசம்பர் 13”. வழக்கு நடந்துக் கொண்டிருக்கும் போது படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் எல்லோருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுகின்றது. அந்த தூக்குத் தண்டனையே தீர்ப்பிலும் கீழ் நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்றது. தீர்ப்பு இப்படித்தான் இருக்கவேண்டும் எனத் திரைப்படம் நீதிமன்றங்களுக்கு அழுத்தங்களை தந்தது. அதுதான் மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு என்றது திரைப்படம். 

     அதாவது வழக்கு நடந்து முடிவதற்கு முன்னரே முஸ்லிம்கள் குறிப்பாக கஷ்மீர் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள். இனி வழக்கில் என்ன நடந்தால் என்னமக்களில் சிலர் தூக்கு எப்போது எனக் கேட்டார்கள். திரையில் பார்ப்பதெல்லாம் நிஜம் என்று நம்பும் மக்கள் தூக்குப் போட்டாகி விட்டதே என்பார்கள். தூக்கில் போடாவிட்டால் என்ன நமது அரசு தீவிரவாதிகளை விட்டுவிடுகின்றதே இதனால் தான் நாட்டில் தீவிரவாதம் பெருகுகின்றது என்பார்கள்.

     நாட்டில் நடப்பிலிருக்கும் சட்டங்களின் படி குற்றம் சுமத்தப் பட்டவர்களை தொலைக்காட்சியில் காட்டுவதே தவறு. ஆனால் அவர்களை பேட்டியும் எடுக்கின்றார்கள். திரைப்படமும் எடுக்கின்றார்கள்.

உச்சநீதிமன்றத்தின் உச்சபட்ச (அ)நீதி:


     இப்படிப் படம் எடுப்பது தவறுஅதை திரையிட்டது தவறுஅதை உடனேயே நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் சென்றார்கள். டெல்லி உயர் நீதிமன்றம் ஸ்டே ஐ தடையை வழங்கியது. படமெடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஊடகங்களின் அழுத்தங்களுக்கு ஆளாகமாட்டார்கள் எனக்கூறி டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தடைய அகற்றியது. திரைப்படம் தங்குதடையின்றி ஓடியது. இறுதியில் திரைப்படத்தில் தரப்பட்ட தண்டனையே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தரப்பட்டது. கீழ்நீதிமன்ற நீதிபதி திங்காரா கங்காரா என்பவரால் வழங்கப்பட்ட இந்த மொத்த தீர்ப்பும் உயர்நீதிமன்றத்தில் பல திருத்தங்களுக்கும் தலைகீழ் மாற்றங்களுக்கும் உள்ளாகியது.

     திரைப்படத்தில் காட்டப்பட்டதைப் போல் நாடாளுமன்ற தாக்குதலின் மூளை என குற்றம் சாட்டப்பட்ட டெல்லி பல்கலைகழக பேராசிரியர் ஷிகிஸி ஜீலானி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப் பெற்றது. ஆனால் உயர் நீதி மன்றம் அவரை விடுவித்தது.

     உச்சநீதிமன்றத்தின் அநீதியும் அந்த திரைப்படத்தின் தாக்கமும் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நந்திதா ஹாக்சர் என்ற மூத்த வழக்கறிஞர் இப்படி குறிப்பிடுகின்றார்: 

The Supreme court however  vacated the stay on grounds that judges could not be influenced. it failed to appreciate how such film are responsible for creating a climate of fear and mistrust.Today even post acquittal Geelani cannot get a house on rent. His children find it hard to lead a normal life(source:13 december A Reader with an introduction by Arunthathi Rai Page no:9)

     அதாவது உச்சநீதிமன்றம் அந்த தடையை நீக்கிற்று. நீதிபதிகள் ஊடகங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகமாட்டார்கள் என காணம் சொன்னது. அதுபோன்ற திரைப்படங்கள் மக்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவதில் பொறுப்பு வகிக்கின்றன என்பதை கண்டு கொள்ள உச்சநீதிமன்றம் தவறிவிட்டது. இப்போது ஜீலானி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் அவர் ஒரு சாதாரண வாழ்க்கையை மக்கள் மத்தியில் நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றார். அவருக்கு ஒரு வாடகை வீடு கிடைப்பதில்லை. அவருடைய குழந்தைகளும் ஒரு சராசரி வாழ்க்கையை நடத்திட முடிவதில்லை (டிசம்பர்13 A Reader page no9)

     ஆனால் அப்சல்குருவுக்கு திரைப்படத்தில் தரப்பட்ட தண்டனை மக்கள் மனதில் கடைசிவரை நீடித்தது.

பொடா

அப்சல்குரு விவகாரத்தில் இன்னும் பல விளையாட்டுக்கள்: நாடாளுமன்றத் தாக்குதல் முயற்சி டிசம்பர் 13 2001ல் நடைபெற்று அப்சல் குருவை டிசம்பர் 15 2001  ஆம் ஆண்டு கைது செய்தார்கள். பொடா என்ற பாசிச பயங்கரவாத சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். டிசம்பர் 20ம் நாள் நாடாளுமன்றத் தாக்குதலை பொடாவின் கீழ் கொண்டு வந்தார்கள்.

     ஏனெனில் பொடாவின் கீழ் வாங்கப்படும் வாக்குமூலம் சட்டப்படி செல்லும். அதைக் கொண்டே அவனை தண்டிக்கலாம். அத்தோடு தனி நீதிமன்றம் அமைக்கவும் அது வழிவகுத்தது.

     இதில் கவனிக்கப்படவேண்டிய இன்னொது விவகாரம் என்னவெனில் பொடாவைக் கொண்டு வருவதற்காக திட்டமிடப்பட்டதே இந்த நாடாளுமன்றத் தாக்குதல். அதுபோது நாட்டை ஆட்சி செய்து கொண்டு இருந்த பாரதீய ஜனதா கட்சியின் ஊழல் ஊரெல்லாம் நாடெல்லாம் பரவி நாடாளுமன்றத்தையும் அதிர்வுகளுக்குள்ளாக்கி கொண்டிருந்தது.

ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன : தொடர் சித்திரவதை பொடா இவையெல்லாவற்றையும் பயன்படுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலத்தையும் கூட உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கறிஞர் நந்திதா இப்படி குறிப்பிட்டார் வழக்கின் புலனாய்வில் நடந்தது அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவை. நீதிமன்றங்களே அக்கறையுடன் சாட்சியங்கள் புகுத்தப் பட்டுள்ளனடெல்லி காவல் சிறப்பு நிலையத் தின் காவல் துறை அதிகாரிகள் சத்தியப் பிரமாணம் எடுத்து நீதிமன்றங்களில் பொய் சாட்சியம் சொன்னார்கள்அதேபோல் உச்ச நீதி மன்றம் காவல்துறையினர் அப்சல் குருவை சித்திரவதைச் செய்து ஒப்புதல் வாக்குமூலங்களை பெற்றிருக்கின்றார்கள்  என்பதை ஒத்துக் கொள்கின்றது. December 13 A Reader Page : Arundhati Roy & Haksar Page No. 26/27

     உச்ச நீதி மன்றம் இப்படி சொன்னது

“All these Lapses and violations of proceedural safeguards guaranteed in the statue itself impell us to hold that it is not safe to act on the alleged confessional statement of Afsal and Place reliance on this item of evidence on which the prosecution places heavy reliance”
Extracted from the Supreme Court Judgement 4/8/2005/ Nirmalang shree Mukerjee. Should Muhammed Afzal die. Page No.128.

      அதாவது வாக்குமூலங்கள் வாங்குவதில் சட்டங்கள் உறுதியளித்துள்ள பாதுகாப்புகளில் செய்யப்பட்டுள்ள அத்துமீறல்கள் தொய்வுகள் இவை எங்களை அப்சலின் இந்த வாக்குமூலங்களை சார்ந்திருப்பது சரியல்ல என்பதை உணர்த்துகின்றன. அதை ஒரு சாட்சியம் என எடுத்துக் கொள்வதும் சரியல்ல. ஆனால் அந்த வாக்குமூலத்தின் மீதுதான் அரசு அதிகமாகச் சார்ந்திருக்கின்றது.

     இப்படி அப்சலின் வாக்கு மூலம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அப்சல் மீதான மொத்த வழக்கும் அவன் வழங்கிய வாக்கு மூலத்தை நம்பியே இருக்கின்றது. அது முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட பின் அவனை எப்படித் தூக்கில் போட முடியும்?

அப்சல்குரு தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவரா?


     நாடாளுமன்ற தாக்குதல் நடந்தவுடன் லஸ்கரே-இ-தொய்பாஜெய்சே முஹம்மது ஆகிய பாகிஸ்தான் அமைப்புகளைச் சார்ந்தவர்களே இந்த தாக்குதலை செய்தார்கள் எனப் பிரகடனப்படுத்தினார்கள். அத்வானி இதில் முன்னிலையில் நின்றார். இதனை அடிப்படையாகக் கொண்டு பாகிஸ்தானோடு ஒரு போருக்கு தயாரானார்கள். 10000 கோடி ரூபாய் செலவில் படைகள் எல்லைகள் நோக்கி நகர்த்தப்பட்டன. இந்த அவசர நடவடிக்கையில் நமது இந்திய இராணுவத்தினர் 800 பேர் இறந்தார்கள். 100 குழந்தைகள் மடிந்தார்கள் நிலத்தில் புதைத்த கண்ணிவெடிகளில் சிக்கி பலநூறு விவசாயிகள் மாண்டார்கள். அணு ஆயுதங்களைப் பற்றிய பேச்சுகளும் வந்தன. ஆனால் எந்த தீர்ப்பும் அப்சல் குருவோ மற்றவர்களோ தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்பதை குறிப்பிடவில்லை. அவர்கள் யாரும் எந்த அமைப்பும் சார்ந்தவர்களல்லர். குறிப்பாக அப்சல் குரு 1990ல் நமது எல்லை பாதுகாப்பு படையிடம் சரணடைந்தவர். அன்று முதல் அவர் நமது பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பில் கீழிலிருந்தார். அப்படியிருக்க அவர் பாதுகாப்பு படைகளை விஞ்சி எதுவும் செய்திட இயலாது.

     பிரதான மூளை: இத்தனைக்கும் மேலாக அப்சல் குருவின் பிரதான மூளை என்று யாரும் குறிப்பிடப்படவோ குற்றம் சாட்டப்படவோ இல்லை. நாடாளுமன்ற தாக்குதலின் பிரதான மூளை எனக் குற்றம் சாட்டப்பெற்றவர் ஜீலானிதான். ஆனால் அவரை அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுவித்து விட்டார்கள். இந்நிலையில் ஏன் அப்சல் குருவை தூக்கிலிட வேண்டும் எனத் துடிக்கின்றார்கள்.

அப்சல்குருவுக்கு அடிக்கடி வந்த போன்


     அப்சல் குரு தான் தனது வழக்கறிஞர் சுஷில் குமாருக்கு எழுதிய கடிதத்தில் எனக்கும் நாடாளுமன்ற தாக்குதலில் கொலை செய்யப்பட்ட முஹம்மத் என்பவருக்கும் பல தொலைபேசி அழைப்புகள் கஷ்மீர் எஸ்டிஎஃப்-ஐ சார்ந்த டிராவிந்தர் சிங் என்பவரிடமிருந்து தான் வந்தது என்பதை நீங்கள் எங்கள் செல்போன்களை ஆய்வு செய்தால் கண்டு கொள்ளலாம் என கூறியுள்ளார். (Arundhati Roy Dec-13 Page No.19)

     ஆனால் இன்றளவும் அது குறித்து எந்த ஆய்வும் செயல்படவில்லை. அதனால் தான் இந்த எஸ்.டி.எஃப் என்ற கஷ்மீர் சிறப்புப் படையின் ஏற்பாட்டில் தான் நாடாளுமன்ற தாக்குதல் நடந்திருக்கின்றது என்கின்றது நாடாளுமன்ற தாக்குதலில் ஆய்வாளர்கள்அறிஞர்கள்ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம் இவை வைக்கும் முறையீடு.
The Right thing to-do would be to a order a retrail Page XXI

     அப்சலின் வழக்கை முற்றாக விருப்பு வெறுப்பற்ற ஒரு மறுஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். அதேபோல் நாடாளுமன்ற தாக்குதல் பற்றியும் குழு புலனாய்விற்கு உத்தரவிட வேண்டும்.

     நாடாளுமன்ற தாக்குதலில் உளவுத்துறையின் பங்குபாதுகாப்புப் படையினரின் பங்குகஷ்மீரில் இயங்கும் எஸ்.டி.எஃப் என்ற கிளர்ச்சிகளுக்கு எதிரான படைகளின் பங்குஇவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சாட்சியங்கள் வாக்கு மூலங்கள் இவற்றில் பல அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன என்பது ஏற்கனவே நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தியாவில் எந்த அரசும் இதைச் செய்யும் என எதிர்ப்பார்ப்பதற்கில்லை - அருந்ததிராய் Dec 13 A Reader Page XXI

“Mohamed Afzal was a pawn in the design of the state” Page 13

     முஹம்மத் அப்சல் அரசின் ஏற்பாட்டில் ஒரு பொம்மை - நிர்மலாங்ஹு முகர்ஜி.

     அதாவது நிர்மலாங்ஹு முகர்ஜி அப்பட்டமாக அறிவிக்கின்றார் நாடாளுமன்ற தாக்குதலை (ஏற்பாடு செய்த) அரசின் கைகளில் இருந்த ஒரு பொம்மை தான் அஃப்சல். பக்கம் 13 A Reader

     ஆனால் யாரும் கொலை செய்யப்படவும் இல்லை. தாக்குதல் நடந்த இடத்திற்கு அவன் செல்லவுமில்லை. இது இந்திய நாடாளுமன்ற தாக்குதல் என்பதால் இதன் எல்லாப் பகுதிகளும் எல்லோருடைய பங்கும் சரியாக சீராக திறந்த மனதுடன் ஆராயப்பட வேண்டும் - ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம்.

எல்லா சாட்சியங்களும் தோற்றுப் போனதால் தான் மக்களின் மனங்களை திருப்திப்படுத்திட ஒரு தூக்கு ஒரு உயிர் பலி என தீர்ப்பளித்திருக்கின்றது உச்ச நீதி மன்றம் நரபலி நிலையிலிருந்து நம் நாடு இன்னும் மீளவில்லை.   

மொத்த நாடாளுமன்ற தாக்குதலும் ஒரு மகத்தான உள்ளிருப்பு வேலை:


     கசாப் விவகாரம் அப்சல் குரு விவகாரம் இந்த இரண்டும் நமக்கு பல படிப்பினைகளைத் தந்திடும்.

     1. இங்கே உளவுத்துறைகஷ்மீரின் சிறப்பு பாதுகாப்பு படை இவற்றில் ஒரு முஸ்லிமை பிரதிநிதியாக காட்டுவதுஅதாவது மொத்த தீவிரவாத தாக்குதலுக்கும் ஒரு முஸ்லிமையே பிரதிநிதியாக்குவதுஇதனால் தொடர்ந்து முஸ்லீம்களை தீவிரவாதிகள்” எந்த மனசாட்சியுமில்லாமல் தாக்குதலை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்கள் என்ற எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருப்பதுஇப்படி முஸ்லிம்களை முற்றாக வெறுக்கின்ற ஒரு தலைமுறையை வளர்த்தெடுத்து விட்டார்கள். இது இவர்கள் இந்த நாட்டுக்கு செய்த மாபெரும் துரோகம்.

     2. இப்படி மொத்த தாக்குதலுக்கும் ஒரு முஸ்லிமை பிரதிநிதித்துவப்படுத்தி அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கியவுடன் உள்ளிருப்பு வேலைகளைச் செய்த உளவுத்துறையின் கறுப்பாடுகளும் பாதுகாக்கப்பட்டு விடுகின்றனர். இவர்களால் அபிநவ் பாரத் போன்ற இவர்களின் எடுபிடிகளும் உண்மையான குற்றவாளிகளும் பாதுகாக்கப் படுகின்றார்கள். அவர்கள் எப்போதும் பிடிபடாமல் குண்டு வைப்புகளையும் தீவிரவாத தாக்குதல்களையும் தொடருகின்றார்கள். இதனால் தான் இந்தியாவில் குண்டுவடிப்புகள் தொய்வின்றி நடக்கின்றன.

     3. அப்சல் குரு கசாப் இவர்கள் இருவருக்கும் வழங்கிய தீர்ப்பில் நமது உச்ச நீதி மன்றம் தரப்பட்ட சாட்சியங்களையும் ஆவணங்களையும் ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கியதை விட நாட்டு மக்களின் மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காகவே இவர்களை தூக்கில் போட வேண்டும் என கூறியது.  

“The attack on the indian parliment resulted in heavy casualities has shaken the entire nation on the collective conscience of the society will only be satisfied if capital punishment awarded to the offendent”

     இதே சொற்களைத் தான் கசாப்-இன் விவகாரத்திலும் உச்சநீதிமன்றம் கூறியது இப்படி. 

The case has shocked the collective conscience of the indian people as few others cases have Page 350 of the supreme court judgement on 26/11 delivered on....

     அதாவது இந்த வழக்கு இந்திய மக்களின் ஒட்டுமொத்தமான மனசாட்சியையும் உலுக்கிற்று வேறு சில வழக்குகளைப்போல். பக்கம் 350 மும்பை தாக்குதலில் உச்ச நீதி மன்ற தீர்ப்பிலிருந்து.

     இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு அப்பால் நின்று ஒரு புதுக்கொள்கையை உச்ச நீதிமன்றம் வகுக்கின்றது. அதுதான் நாட்டுமக்களின் ஒட்டுமொத்தமான மனசாட்சி என்ற கொள்கை.

     மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றம் வேறு சில வழக்குகளைப்போல் என்ற சொற்களையும் பயன்படுத்தியுள்ளது. இந்தசொற்கள் வரும் நாட்களில் பல வழக்குகளில் அப்பாவிகளைத் தூக்கிலிடவும் அபிநவ் பாரத் போன்ற அமைப்புகளின் தளகர்த்தர்களை காப்பாற்றவும் பயன்படும்.

     காலப்போக்கில் உயர் நீதிமன்றங்களும் மாவட்ட முதன்மை நீதிபதிகளும் இந்த உச்ச நீதிமன்ற சொற்களை பயன்படுத்துவார்கள். அப்பாவிகளை தண்டிப்பார்கள்.

     காலப்போக்கில் பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளைப்போல் ஒரு சட்டவிதி என்றாகி விடும்.

     இதனை இப்போதே நாம் எதிர்த்தாக வேண்டும். இதில் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த மனசாட்சி என்ற சொற்களுக்கு என்ன இலக்கணம்வரையறைமீடியாக்களில் அடிக்கடி குற்றவாளி எனக்காட்டப்படுவதே போதுமாஉச்ச நீதி மன்றம் தான் சொல்லும் வேறு சில வழக்குகளைப்போல் என்பதில் என்னென்ன வழக்குகள் வருகின்றன?அந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் எப்படி ஒட்டுமொத்த மக்களின் மனசாட்சியை அறிந்ததுஇதுவும் இனி தெளிவுக்கு வந்தாக வேண்டும். இங்கே இன்னொரு கேள்வியும் எழுகின்றது. நாட்டின் மனசாட்சி உச்ச நீதிமன்றத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட விஷயமாஅப்பாவிகளை தூக்கிலே தொங்கவிடும் போது உலுங்காத கலங்காத மனசாட்சியும் ஒரு மனசாட்சியாஇந்திய குடிமக்களின் மனசாட்சி உச்சநீதிமன்றம் அப்பாவிகளைத் தூக்கிலே தொங்கவிடும் போதெல்லாம் உலுங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்திட வேண்டும்.

     4. அப்சல் குரு விவகாரத்தில் காவல்துறை நீதிமன்றங்களில் அவனுடைய குற்றங்களை நிரூபிக்க வேண்டும் என்பதை விட மக்கள் மன்றத்தில் அவனை ஒரு குற்றவாளியா காட்டிட வேண்டும்ட என்பதற்காக ஒரு பெரும் ஏற்பாட்டைச் செய்தது அஃது அப்சல் குருவை பிடித்து வந்து தொலைக்காட்சி முன் அமர வைத்து நான் தான் குற்றவாளி எனச் சொல்லிடச் செய்தார்கள்

     ஆனால் அவன் உண்மையைச் சொல்லிட தலைப்பட்டபோது காட்சியை துண்டித்துவிட்டார்கள்

     டிசம்பர் 13 2001ல் நாடாளுமன்றத் தாக்கிடும் முயற்சி நடைபெற்றது குற்றம் சுமத்தப்பட்ட அப்சல் குருவை டிசம்பர் 20 2001ல் தொலைக்காட்சிகள் பேட்டி எடுக்கின்றன இந்த பேட்டி எங்குவைத்து எடுக்கின்றன என்பது இன்னும் விநோதமானது 
     இதில் நாம் பெறும் பாடம் என்னவெனில் முஸ்லிம்களை தீவிரவாதப் பரம்பரையினர் என மக்களை சகோதர சமுதாயத்தவர்களை நம்ப வைக்கும் ஒரு பெரும் முயற்சி இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது

     ஒரு முறை இதனை செய்து சாதித்து விட்டால் அதன் பின் முஸ்லிம்களை எப்படி எப்போது வேண்டுமானாலும் கூட்டாகக் கொலை செய்யலாம் என்ற அனுமதி லைசென்ஸ் எல்லோருக்கும் கிடைத்துவிடுகின்றது

     இப்படி ஒரு முயற்சி இடைவிடாமல் நாட்டிலே நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அண்மையில் தஞ்சை பல்கலைக் கழகம் வெளியிட்ட நூல் ஒன்று தெள்ள தெளிவாக விளக்குகின்றது இப்படி: நவம்பர் 20 2012 இல் நமது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் அப்சல் ஐயும் இன்னும் வரிசையில் இருக்கும் பலரையும் தூக்கிலிட முடியாது என்கின்றது தி ஹிந்து பத்திரிகை அத்தோடு ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதிகள் 13 வழக்குகளில் தாங்கள் வழங்கிய தூக்குத்தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்றிட வேண்டும் என குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதம் நீதிமன்றங்கள் செய்து கொண்டிருந்த கொலைகளில் பெரும் திருப்பம்

நாடாளுமன்ற தாக்குதலில் நமது பாதுகாப்பு முகவாண்மைகளின் உள்ளிருப்பு வேலை என்பதை ஊர்ஜிதப்படுத்தும் பிரிதொரு அத்தாட்சி.


ஹம்சா என்றொருவரை நமது நாடாளுமன்ற வளாகத்தில் வைத்துக் கொலை செய்தார்கள். இந்த ஹம்சா தீவிரவாதிகள் வந்த அம்பாசிடர் காரில் நாடாளுமன்றத் திற்குள் வந்தவர்களில் ஒருவன் எனவும் காட்டப்பட்டது

ஆனால் இவன் 2000ஆம் ஆண்டு முதலே எஸ்டிஎஃப் என்ற கஷ்மீரின் சிறப்புபடையின் பாதுகாப்பில் இருப்பவன். இவனை மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்ட காவல்துறையினர் 2000ஆம் ஆண்டில் கைது செய்து ஜம்மு கஷ்மீர் காவல் துறையிடம் ஒப்படைத்திருக்கின்றனர். 2000ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டவர் எப்படி 2001 இல் நாடாளுமன்றத்தைத் தாக்க வந்தான்.

இது நாடாளுமன்ற தாக்குதல் முயற்சியில் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் படையின் கைகள் இருக்கின்றன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்குகின்றது.

Source: http://almanjakollai.blogspot.com/2013/01/blog-post_9611.html

No comments:

Post a Comment