Friday, September 30, 2011

முஸ்லீம்கள் ஏமாற மாட்டார்கள்...!


குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைத் தூக்கி நிறுத்தும் ஒரு சூழ்ச்சி நாட்டில் அரங்கேறி வருகிறது. பா.ஜ.க., சங்பரிவார் வட்டாரத்தில் நரேந்திரமோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று கருதுவது அந்த வட்டாரம், எந்தத் தகுதியில் இருக்கிறது என்பதற்கான அடையாளம். என் வீட்டில் 
இருப்பவர்களிலேயே மகா மகா யோக்கியன் அதோ கூரைமீது ஏறி நின்று கொள்ளி வைக்கின்றானே அவன்தான்! என்றானாம் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுண்டு. பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி தான் என்று பா.ஜ.க., வட்டாரம் கூறுவது இதனைத்தான் நினைவூட்டுகிறது. 

தோண்டத் தோண்டப் பிணங்கள் ஜம்முகாஷ்மீரின் கண்ணீர் கதை!


சில நாட்களுக்கு முன்னால் காஷ்மீரில் அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் தோண்டி எடுக்கப்பட்டன உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தை மத்திய அரசும் ஊடகங்களும் அப்படியே மூடி மறைத்தது ஞாபகமிருக்கலாம் அதைத்தொடர்ந்து இப்பொழுது ஜம்முவிலும் ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத இளைஞர்களிண் சடலங்கள் அங்குள்ள சவக்குழிகளில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பட்டுப் புடவைகளை பாதுகாக்க இதோ சில ஆலோசனைகள்…


 பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது. துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும்படி போடுவது நல்லது.

வீட்டுத் தொழில் பெண்களுக்கு லாபமா? பிரச்சனையா?


குடும்ப நிர்வாகத்தில் பெரும்பங்கு பெண்ணைச் சேர்ந்தது. குழந்தைகள் பராமரிப்பு, கணவரை கவனிப்பது, விருந்தோம்பல், வீட்டு வேலை, குடும்ப நிர்வாகம் என பல்வேறு பணிகளையும் கவனிக்க வேண்டியதிருக்கிறது. இவ்வளவு பொறுப்புகளுக்கு இடையே சுயதொழில் செய்யும் பெண்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்களா? சுயதொழிலில் சந்திக்கும் இடர்பாடுகள் என்னென்ன? என்பது பற்றி ஒரு பார்வை.

சுறா கல்லீரலில் டெங்கு, கேன்சருக்கு சூப்பர் மருந்து !


வாஷிங்டன் : சுறாக்களின் கல்லீரலில் உள்ள ரசாயன மூலப்பொருளில் இருந்து மனிதனின் பல நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்பட உள்ளது. இந்த ரசாயன பொருள், நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது என்பதால் இதை பயன்படுத்தி ஆன்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சி மருத்துவர்கள்.

ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கு சிறுநீரகம் செயலிழப்பு !


சென்னை: இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கும் சிறுநீரகங்கள் செயலிழக்கிறது. ஆனால், தானமாக 5 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. மனிதன் உயிருடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறுநீரகம் முக்கிய பங்கு வகுக்கிறது. அந்த சிறுநீரகம் செயலிழந்து விட்டால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும்.

Tuesday, September 27, 2011

ஏர்-கண்டிஷன் அறையில் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் உருவாகும்!


உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மனித குலத்துக்கு பல்வேறு நோய்களை பரிசாக தந்து கொண்டு இருக்கின்றன. மனநிலை பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. முன்பு 40 வயதுக்கு மேல் ஏற்பட்ட சர்க்கரை நோய் இப்போது குழந்தை பருவத்திலேயே வந்த விடுகிறது. மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

மனிதர்களின் வாழ்நாளைக் குறைக்கும் தொலைக்காட்சி!


தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, "டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ஆண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொலைக்காட்சி மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகள் மூலம் புரிந்து கொள்ள இயலும்.