Saturday, August 27, 2011

தேநீர் பற்றிய சில உண்மைகள்..!


 டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் சொல்வதுண்டு' இவற்றில் எது உண்மை?... 
டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல. 
உண்மை: ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

கூந்தலை அழகாக அலங்கரிப்பது எப்படி?


விருந்து, விசேஷம் என்று எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் பெண்கள் அழகாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. அழகென்றால் அங்கொன்றும், இங்கொன்று மாக இல்லை- உச்சி முதல் பாதம் வரை மொத்தமும் அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக உச்சி அதாவது கூந்தல் அழகு சூப்பரோ சூப்பராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். `ஏய்.. எப்படி இது! அமர்க்களமா இருக்குதே..!' என்று, பார்ப்பவர்களில் பத்து பேராவது சொல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பதிவிறக்கம் செய்ய சில ஆலோசனைகள்! Tips for download,,,


நாம் பல பைல்களை இணைய தளங்களிலிருந்து அடிக்கடி டவுண்லோட் செய்கிறோம். இந்த பைல்கள் பி.டி.எப்., ஸிப் ஆர்க்கிவ், வேர்ட் என ஏதோ ஒரு பார்மட்டில் இருக்கலாம். பல வேளைகளில் டவுண்லோட் செய்த பின்னர் தான், இந்த பார்மட் பைல் என்றால், இதனை டவுண்லோட் செய்தி டாமல் இருந்திருக் கலாமே என்று எண்ணு கிறோம். ஏனென்றால், அதனைத் திறந்து பார்ப்பதற்கான புரோகிராம் இல்லாமல் இருக்கலாம். அல்லது நாம் மேற்கொண்டு திட்டமிடும் வேலைக்கு அது உகந்ததாக இருக்கலாம்.

மழையால் ஏற்படும் தனிமை உணர்வு...!


மழைக்கும், தனிமைக்கும் அப்படி என்னதான் சம்பந்தம் இருக்கிறதோ தெரியவில்லை... மழை என்றாலே நாம் தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்ற ஓர் உணர்வு நம்மை ஆட்கொண்டு விடுகிறது. மழை நம் மனதுக்கு உற்சாகம் அளித்தாலும், தொடர்மழை ஒருவித தடுமாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும். மழை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் யாவும், இன்னொரு மழையில் நினைவுக்கு வரும்.

Power saving options in laptop computers! மடிக்கணினியில் சக்தி சேமிப்பு


பேட்டரி சக்தியில் இயங்கும் லேப்டாப்பில், நாம் எந்த அளவிற்கு அதனைச் சரியாக, செட் செய்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு அதன் திறன் நமக்கு நீண்ட நேரம் கிடைக்கும். லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைத்திடும் விண்டோக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

Sunday, August 21, 2011

கார் குளிரூட்டியை பராமரிப்பது எப்படி? (Air Condition maintenance)


தமிழகத்தைப் பொறுத்தவரை ஏ.ஸி இல்லாத கார்களை வாங்குபவர்கள் வெறும் 10 சதவிகிதத்தினரே! காரில் ஏ.ஸி இருந்தாலும் ஒழுங்காக இயங்கவில்லை என்றால், எந்தப் பயனும் இல்லை. கார் ஏ.ஸியைப் பராமரிப்பது எப்படி? காருக்குள் ஏ.ஸி இயங்கிக்கொண்டு இருக்கும் போது, ஒரு விதமான துர்நாற்றம் வந்தால், அதற்கு கிருமிகள்தான் காரணம். ஏ.ஸி ஃபேன் கேஸிங்கில் இருக்கும் கூலிங் காயில் அல்லது ஃபில்டரில் பாக்டீரியாக்கள் தங்கி, பல்கி பெருகுவதற்கு மூல காரணம்....

தீப்பற்றிக் கொண்டால்.. உடனடியாக செய்ய வேண்டியது என்ன???


 
பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்....
* நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவியுங்கள்.

ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன?


இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம், ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்திதான் என்பது தெரிந்த ஒன்றுதான் என்றாலும், ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன என்பதை அறிந்துகொண்டால், அதற்கான முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

Thursday, August 18, 2011

எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் ரூட்கிட் வைரஸ்..


பாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை மறைத்துக் கொண்டு செயலாற்றுவதில் கில்லாடி களாகும். இவை பரவிக் கைப்பற்றியுள்ள, பெரும்பாலான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்கள் எனக் கண்டறியப் பட்டுள்ளது. எக்ஸ்பி பயன்படுத்தப்படும் நான்கு கம்ப்யூட்டர் களில் நிச்சயம் ஒன்றில் ரூட்கிட் வைரஸ் இருப்பதாகத் தெரிகிறது. ரூட்கிட் பாதித்த கம்ப்யூட்டரை, அதனை அனுப்பியவர், வெகு அழகாக, நேர்த்தியாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விடுகிறார்.

முன்னேறத் தூண்டும் `சுய கவுரவம்'



ஒவ்வொரு மனிதனுக்கும் சுயகவுரவம் உண்டு. அது தான் அவனை தன்னம்பிக்கையோடு வழிநடத்திச் செல்ல உதவுகிறது. ஒரு பழைய கதை உண்டு. அதாவது, ஒரு விளக்கில் அடைபட்டுக் கிடந்த பூதமானது, அந்த விளக்கை துடைத்து. தன்னை விடுதலை செய்பவனின் விருப்பங்களை நிறைவேற்றித் தருவதாக கூறியது. இந்தச்சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால். நீ என்ன கேட்பாய்?

மார்கெட்டில் இருந்து மாயமாகும் CDமற்றும் DVD க்கள்...


கம்ப்யூட்டர் மார்க்கட்டில் இருந்து சிடி மற்றும் டிவிடிக்கள் மறையும் காலம் வந்துவிட்டது. பிளாப்பி டிஸ்க்குகளைப் போல இவையும் காணமால் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஒரு காலத்தில், 1985க்கு முன்னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டிகல் ரெகார்ட் அளவிலான டிஸ்க்குகள் பயன்பாட்டில் இருந்தன. துளையிடப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்த கார்டுகளுக்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தன. இவற்றை ஐந்தே கால் அங்குல அகல அளவிலான டிஸ்க்குகள் வெளியேற்றின. இதன் கொள்ளளவு கேபி அளவிலேயே இருந்தன.

காய்கறி, பழங்களில் ரசாயனம் (Chemicals) ஜாக்கிரதை!


நமது அன்றாட உணவில் காய்கறிகள், பழங்களுக்கு முக்கிய பங்குண்டு. இந்தியர்களின் உணவில் 23 சதவீதம் காய்கறிகள் இடம் பெற்றுள்ளன என, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளிட்டவை, காய்கறி, பழங்களிலிருந்து கிடைக்கின்றன. பல்வேறு நோய்களைத் தடுக்கும் மருந்தாக, பச்சைக் காய்கறிகள், பழங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இயற்கை உரங்களைக் கொண்டு விளைவித்த காய்கறி, பழங்களை தோட்டத்தில் இருந்து நேரடியாகப் பறித்துச் சாப்பிட்டோம். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கலக்காமல் அவை நமக்குக் கிடைத்தன.

குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதெப்படி...?


குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறோமோ அதுபோலவே அவை வளரும். `வரிசையில் செல்' என ஒழுக்கம் கற்பிக்கிறோம். யதார்த்தத்தில் வரிசையில் நிற்க நேரிட்டால் `இப்படி நின்றால் யாரும் வழிவிட மாட்டார்கள், முண்டிக் கொண்டுதான் போக வேண்டும்' என்று விதியை தளர்த்துகிறோம். தவறு செய்யாதே என்கிறோம். ஆனால் நிஜத்தில், `வாழ்வது சந்தோஷத்திற்காக... அதற்காக எதுவும் செய்யலாம்' என சமாதானம் சொல்கிறோம். இப்படி செய்தால் குழந்தைகள் எப்படி வளர்ந்து வருவார்கள்.

Saturday, August 13, 2011

அமெரிக்காவுக்கு நேரம் சரியில்லை... உலகத்துக்கும் தான்.!


எது நடக்கக் கூடாது என்று உலகம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததோ அது கடந்த சனிக்கிழமை நடந்தேவிட்டது. அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளாக அமெரி்க்காவின கடன் தர வரிசை 'AAA' என்ற அதி உயர் தரத்தில் இருந்தது. அதாவது, கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் AAA என்ற அதி உச்ச நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

"ஆன்- லைன்' வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்க விலை.


தங்களிடம் ஒரு குண்டுமணி அளவிலாவது தங்கம் வீட்டில் இருக்க வேண்டும். தங்கத்தால் மட்டுமே வீட்டில் செல்வம் தங்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நம்நாட்டுப் பெண்கள். இன்றைய நிலையில், தங்கத்தின் விலை விண்ணைத்தாண்டிச் செல்லும் அளவில் உயர்ந்து வருவது அவர்களை மட்டுமன்றி, பெற்றோர்களிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் வீட்டை நீங்களே பராமரிக்க சில டிப்ஸ்..


கட்டிடங்களை கட்டி,அதில் குடி புகுந்த பின் நாம் கட்டிட பராமரிப்பு பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. ஆனால் சிறு விரிசல்,ஓதம் தொடங்கி மழை காலங்களில் நீர் தேங்குதல் போன்றவற்றால் கட்டிடங்களின் ஆயுள் குறைகிறது. நாம் மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்து கொள்வது போல கட்டிடங்களும் குறிப்பிட்ட இடைவேளைகளில் பராமரிப்பது அவசியமாகிறது.அவ்வாறு பராமரிக்காத கட்டிடங்கள் விரைவில் இடிந்து விழும் அபாயத்திற்கு செல்வதுடன் கட்டிட உரிமையாளருக்கு அதிக செலவு உண்டாக்குகிறது.

Thursday, August 11, 2011

ஹார்ட் அட்டாக்! ஆயுர்வேத மருத்துவம்!


காலை 10.30 மணிக்கு அவருக்கு சிகிச்சை துவங்கியது. இதய நோய்க்குச் சிறந்த மருந்துகள் கொடுக்கப்பட்டன. அவரது இதய நோய், வாதம், பித்தம் ஆகிய இரண்டு தோஷங்கள் சேர்ந்ததாக இருந்தது. மருந்து துவங்கி, ஒரு மணி நேரத்திற்குப் பின், வலி அடங்கியது. வழக்கமாக மக்களிடையே ஆயுர்வேத சிகிச்சை முறைகளைப் பற்றிய சில கருத்துக்கள் வேரூன்றியுள்ளன. அதில் ஒன்று, ஆயுர்வேதம் நீண்டகாலம் தொடர்ந்து இருக்கும் நோய்களின் (Chronic Diseases) சிகிச்சையோடு மட்டுமே தொடர்பு கொண்டதாக கருத்து உண்டு.

பணம் உன்னுடையது... ஆனால் உணவு - பொதுச்சொத்து!


உலகின் வளர்ந்த நாடுகளில் முக்கிய ஸ்தானத்தை வகிக்கிறது ஜெர்மனி. பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற உலகப் புகழ்பெற்ற கார்கள் இங்குதான் தயாராகின்றன. ஸீமன்ஸ் போன்ற கம்பெனிகள் உலகப் புகழ் பெற்றவை. அணு ரியாக்டருக்கு வேண்டிய பம்புகள் இங்குள்ள ஒரு சின்ன ஊரில் தயாராகின்றன. இப்படிப் பல துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ள நாட்டில் மக்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நினைப்போம்? நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், ஒரு ஸட்டி டூர் என்னை அந்த நாட்டிற்கு இட்டுச் செல்லும் வரையில்

பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பது ஏன்?'


பிரபல டெலிவிஷன் செய்தி வாசிப்பாளர் சவுதாமணி, `திருமணமான இந்திய பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பது ஏன்?' என்று விளக்குகிறார்.
"நமது சமூகமும், குடும்ப கட்டமைப்புகளும் திருமணமான பெண் 24 மணிநேரமும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடவேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. அவள் அதிகாலையில் எழுந்து, கணவருக்கு டீ, மாமியாருக்கு காபி, பிள்ளைகளுக்கு ஏதாவது இன்னொரு பானத்தை சுடச்சுட தயாரித்து கொடுத்து விட்டு, மின்னல் வேகத்தில் அடுத்த வேலைக்கு செல்லவேண்டும். காலை உணவு இட்லியோ, தோசையோ என்றால் புருஷன் காரச் சட்னி கேட்பார். பிள்ளைகள் சாம்பார் கேட்பார்கள். மாமியார் இரண்டையும் ருசித்து விட்டு `அதில் காரமில்லை.. இதில் உப்பு இல்லை..' என்று கூறுவார். அடுத்து கணவரும் குறை சொல்ல வாய் திறக்க, அவளுக்கு காலையிலே மன அழுத்தம் ஆரம்பித்துவிடும்.

இந்தியாவை மிரட்டும் மனஅழுத்தம்...


ஆன்மிகத்தில் தலைசிறந்த நாடு. மகிழ்ச்சியான குடும்ப உறவுகளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நாடு. உடலுக்கும், மனதுக்கும் நலம் பயக்கும் யோகாசனம், தியானம் போன்றவை உருவான நாடு. ஞானிகளும், முனிவர்களும் வாழ்வியல் தத்துவங்களை வகுத்தளித்த நாடு. இந்த வரிசையில் இன்னும் பல சிறப்புகள் வாய்ந்த இந்தியாவில் மகிழ்ச்சியும், மனநிறைவும், அன்பும், ஆனந்தமும்தான் பொங்கி வழிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் "உலகத்திலே மிக அதிக அளவில் துயரமும், கண்ணீரும், வேதனையும், விரக்தியும்தான் பொங்கிவழிந்து கொண்டிருக் கிறது'' என்கிறது, `உலக சுகாதார நிறுவன' ஆய்வு.

வழி தவறும் பள்ளி மாணவிகள்! அதிர்ச்சி தகவல்


பீச், பார்க்குகளில் குடைக்குள் புகுந்தபடியும், பைக்கின் பின் துப்பட்டா மறைவில் காதல் செய்யும் காதல் ஜோடிகள் நமக்கு பல ஆண்டுகளாக பழக்கம்.ஆனால், சென்னையில் கடந்த சில வருடங்களாக இவ்வாறு மறைந்து இருக்கும் பெண்களில் பலர் பள்ளிக் குழந்தைகள் என்பது தான் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம்.

Sunday, August 7, 2011

முஸ்லிம்கள் கல்வி வேலை வாய்ப்பில் பின்தங்கி இருப்பதேன்?


அறிவுப் பெட்டகம் குர்ஆனைக் பெற்ற நாம் பின்தங்கி இருப்பதேன்?
(டாக்டர் எ.பீ.  முகம்மது அலி ஐ.பீ.எஸ்(ஓ)

 நிலம் வெளுக்க நீர் உண்டு மக்கள் மனம் வெளுக்க குர் ஆன் வேதமுண்டு  என்று நானிலம் போற்றும் வள்ளல் நபி அவர்களுக்கு அறிவூற்றினை தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சந்தததியர் கல்வி கேள்வியில் பின்தங்கியிருக்கலாமா "சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை என்று பகன்ற கோமான் நபி பொன்மொழியினை புறக்கணித்து கண்ணிருந்தும் மூடர்களாக ஆகலாமா? கல்வி நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சொர்க்கத்தினை நோக்கி வீறு நடைபோடும் அடிச்சுவடு என்ற வாக்கினை புறக்கணிக்கலாமா? 500 ஆண்டுகள் ஆண்ட சமுதாயம; என்று பீற்றத் தெரிந்த நாம் மற்றவர்களுக்கு முன் மாதிரி ஆக திகழ வேண்டாமா?

Saturday, August 6, 2011

மூடப்பட்ட 10,000 பள்ளிகள்! திறக்கப்பட்ட 10,000 மதுக்கடைகள்!!


தமிழகத்தில் இப்போது தினசரி மது அருந்துவோரின் எண்ணிக்கை 49 லட்சம் என்பதும்அவர்களின் சராசரி வயது 28-லிருந்து 13 ஆகக் குறைந்துள்ளது என்பதும் அதிர்ச்சியளிக்கும் தகவல். பள்ளிச் சிறார்களிடமும் மதுப் பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. மேலும்தற்கொலைக்கு முயல்வோரில் 37 சதவீதத்தினர் மதுப்பழக்கம் உள்ளவர்களே.

Friday, August 5, 2011

தேனில் உள்ள மருத்துவ குணங்கள்...!

தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது. தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும். சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.

புறநோயாளிகளுக்கும் காப்பீடு திட்டம்...!



உடலில் எந்த நேரத்தில் எந்த பாகம் பழுதாகி, இயல்பு வாழ்க்கை முடங்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அத்தகைய இக்கட்டான சூழலில் ஏற்படும் பொருளாதார பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உதவுகின்றன.
பொது மருத்துவ காப்பீட்டை விட, முக்கிய நோய்களுக்கான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு பயன்கள் உள்ளன. குறிப்பாக இதயம், மூளை உள்ளிட்ட 12 வகையான முக்கிய நோய்களுக்கு, பிரத்யேக மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உள்ளன.

செல்போன் அபாயம்! அதிகரிக்கும் மலட்டுத்தன்மை ..


உலக சுகாதார நிறுவனம், அளவுக்கதிகமாக கைபேசி உபயோகிப்பவர்களுக்கு மூளையில் கட்டி ஏற்படக்கூடும் என்று சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2000- லிருந்து 2004 வரை 5 வருடங்களில் 13 நாடுகளில் கைபேசி உபயோகிக்கும் 12 ஆயிரத்து 800 நபர்களிடம் 8 வித ஆய்வுகள் மேற்கொண்டதில் 6 ஆய்வுகள் அளவுக் கதிகமாக அலைபேசி உபயோகிப்பதற்கும் மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவிக்கிறது. 

Thursday, August 4, 2011

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்.


உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

பெண்களுக்கு பாதுகாப்பானது. சேலையா , சுடிதாரா..?

பெண்ணே நீ உன் பண்பாட்டு அடையாளமாகப் பூட்டப்பட்ட சங்லிகளை அறுத்தெறிவதன் ஒரு நடவடிக்கையாக உன் சேலையை வீசிவிடு.
பண்பாட்டுப் பாதுகாவலர்கள் கேலியாகப் பார்க்கிறார்கள். இப்பெல்லாம் எந்தப் பொண்ணு சேலை கட்டுறா? எல்லாரும் சுடிதார், சல்வார்னு மாறி தமிழச்சி அடையாளத்தையே அவுத்துப்போட்டுட்டு நிக்கிறாங்களே,” என்ற விமர்சனம் அந்தக் கேலிப் பார்வையில் இருக்கிறது. சுடிதார் அணியும் பழக்கம் அதிகரித்திருக்கிறது, கிராமங்களில் கூட பரவி வருகிறது என்பது ஓரளவு உண்மைதான்.

Wednesday, August 3, 2011

பேஸ் மேக்கர் (pace maker) வேலை செய்வது எப்படி..?


பேஸ் மேக்கர் பணி இயற்கையாக நடைபெறவில்லை எனில், செயற்கை பேஸ் பேக்கர் பொருத்த வேண்டியுள்ளது. இது ஒரு ரூபாய் அளவுள்ள மருத்துவக் கருவி. குறைந்த இதயத் துடிப்பை அதிகமாக்க, உடலில் பொருத்தப்படும் கருவி. இந்த கருவியில், கீழ்கண்ட பகுதிகள் உள்ளன. பேட்டரி உள்ளது. இது, லித்தியம் சக்தி கொடுக்கிறது. இதில் உள்ள சிறிய கம்ப்யூட்டர், இதயத் துடிப்பு மிகவும் குறைவாக உள்ளதா, அதிகமாக உள்ளதா என்று அறிய உதவும். அதன் தகவலை பேட்டரிக்கு அனுப்பும்.

Tuesday, August 2, 2011

பொடுகு தொந்தரவு...

ஆண்- பெண் இருபாலருக்கும் சாதாரணமாக காணப்படும் பிரச்சினை பொடுகு. உலக அளவில் 60 சதவீதம் பேர் பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறார்கள்.  இந்தியர்களில் 70 சதவீதம் பேருக்கு பொடுகுப் பிரச்சினை இருக்கிறது. பொடுகு; அரிப்பை ஏற்படுத்துவதோடு நிரந்தர தொல்லையாக இருந்து எரிச்சலூட்டும் பிரச்சினையாகும். உச்சந்தலை தோல் செல்கள் இறந்து உதிர்வதைத்தான் பொடுகு என்கிறோம்.

ஹார்ட்வேர் (Hardware) பிரச்னைகளும் தீர்வுகளும்...!

1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:
எஸ்.எம்.பி. எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.