மருத்துவ
ஆய்வுகள் பொய் சொல்லுமா என்ற கேள்வியே நம்மை அச்சுறுத்தும் தன்மையில் அமைந்துள்ளது. ஏனென்றால் அந்த மருத்துவ ஆய்வுக்கூடங்களின் முடிவுகளை நம்பியே நம் சிகிச்சைகள்
அனைத்தும் அமைந்துள்ளன. இப்படி அடிப்படையிலேயே சந்தேகம் எழுப்பினால் அச்சம் வருவது இயல்புதான்.
நம் உடலின் ஆரோக்கியம் சரியாக இருக்கிறதா , இல்லையா என்பதில் துவங்கி, என்னென்ன நோய்கள் நம் உடலில் குடியிருந்து கொண்டிருக்கின்றன, எந்தெந்த உறுப்புகளை அறுவை சிகிச்சையில் நீக்கலாம் என்பது வரை தீர்மானிக்கும் சக்தியாக நாம் நம்புவது இந்த மருத்துவ ஆய்வுகளைத்தான். கடவுளை நம்பாத மனிதர்கள் கூட உண்டு. ஆனால் டெஸ்டுகளை நம்பாத மனிதர்களே இல்லை என்று கூறுமளவிற்கு நம் நம்பிக்கை பெற்ற ஒன்றாக இந்த நூற்றாண்டில் ஆய்வுக்கூடங்கள் விளங்குகின்றன.