இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.
DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.
இப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம் DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.
இப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம். இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.
உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய:

உங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்கு www.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.
இந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :
ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:
DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.
ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.
மேக்(Mac) கணினிகளுக்கு:
மேக்(Mac) கணினிகளுக்கு:
மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Toolடவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.
Source - www.fbi.gov
No comments:
Post a Comment