மகாராஷ்டிரா மாநிலம் மும்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த ஜூன் 15, 2004 அன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். “இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்தபொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர். அப்பொழுது நடந்த மோதலில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக” குஜராத் மாநில அரசு அறிவித்தது. அச்சம்பவம் நடந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அது ஒரு போலிமோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருக்கிறது.
Home
- Home
- மாஸலாமா
- ஒளரங்கசீப்
- மாவீரன் ஹைதர் அலி
- மாவீரன் திப்புசுல்தான்
- கர்னல் சவுகத் ஹயாத்
- பழனிபாபா பதில்
- அப்சல் குரு .....
- அப்சல் குரு - நேர்காணல்
- இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad).
- காந்திஜி vs கோட்சே
- மோடியை பற்றி கட்ஜூ
- மாவீரன் ஹேமந்த் கார்கரே
- காவி (தரித்த) பயங்கரவாதம்
- இந்தியாவின் மனசாட்சி கட்ஜூ!
- அப்துல் ஹபீப் யூசப் மர்பாணி
- மாவீரன் (மருத நாயகம்) யூசுப்கான் சாஹிப்
- குஜராத் படுகொலை - நிஜங்கள்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- சிராஜ்-உத்-தௌலா
Saturday, July 7, 2012
குஜராத்: மோடியின் கொலைக்களம்!
இம்‘மோதல்’ கொலை சம்பவம் நடந்தவுடனேயே, அதன் உண்மைத் தன்மை குறித்து மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர். “தனது மகள் தீவிரவாதி கிடையாது; ஏழ்மையில் வாடியபோதிலும் படித்து ஆசிரியராக வேண்டும் எனக் கனவு கண்ட பெண்; குடும்பத்தின் வறுமை காரணமாகக் கல்லூரியில் படித்துக்கொண்டே வேலைக்கும் போய்க்கொண்டிருந்த அப்பாவிப் பெண்” என அன்றே கதறினார் இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமா.
Labels:
நிஜங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment