Sunday, February 3, 2013

சிறுமி மலாலாவும், அடாவடி அமெரிக்காவும்...

அக்டோபர் 9/2012 அன்று சிறுமி மலாலா சுடப்பட்டாள் என்ற செய்தி உலகையே உலுக்கியது. யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி செய்த போது கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்கும் மேற்கத்திய அந்நிய கல்வி நிறுவனங்களை மூடுமாறு உத்தரவிட்டனர். ஏராளமான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. உடனே தங்கள் ஊடகங்கள் மூலம் உலகம் முழுவதும் தலிபான்களுக்கு எதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விட்டனர் அடாவடி அமெரிக்காவும், அதன் அல்லக்கைகளும். தாலிபான்கள் பெண் கல்வியைத் தடுத்து விட்டனர், காட்டுமிராண்டி ஆட்சி செய்கின்றனர் என்று அலறினார்கள்.

மேற்கத்திய நாசகார கல்விமுறை, இசுலாமிய நாடுகளில் பெரும் சதித் திட்டத்துடன் திணிக்கப்பட்டதால் படித்த திருடர்களையும், விபச்சாரத்தையும், குடும்ப ஆண்-பெண் சீரழிவுகளையும் உண்டாக்கியதைக் கண்கூடாகக் கண்ட பின்புதான் தலிபான்கள் இந்த முடிவை எடுத்தனர். இந்த முடிவு அமெரிக்க, இசுரேலின் குரல்வளையை நெரிப்பது போன்ற முடிவாகும். இதன் தாக்கம் ஆப்கான, பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்தது. உண்மை உணர்ந்த அங்கு வாழும் முசுலிம்கள் அந்நிய மேற்கத்திய கல்வி முறைக்கெதிராக திரும்பினர். 

அக்டோபர் 2001 இல் தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு கடந்த 12 ஆண்டுகளாக ஆப்கானில் அந்நிய அமெரிக்க படைகள் செய்த அட்டூழியத்தின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள இந்த மலாலா என்ற சிறுமி வாழ்ந்த மாகாணத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானில் தங்கள் இனம் அந்நியர்களால் படுகொலை செய்யப்படுவதையும், ஆதரவற்று நிற்ப்பதையும் பார்த்த பாகிஸ்தானில் வாழ்ந்த முசுலிம்களும் ஆப்கானில் இருந்து அடைக்கலம் தேடி வந்த முஸ்லிம்களும் அன்னியப் படையெடுப்பை எதிர்த்துப் போராடும் தலிபான்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். 

பழங்குடி என்றாலே வீரம் மிகுந்தவர்கள் அதிலும் ஆப்கான மண்ணும் உலக வரலாற்றில் ஒருபோதும் அந்நிய தீய சக்திகளுக்கு அடிமைப்பட்டதும் கிடையாது, தோற்றதும் கிடையாது. இறைவழிப் போரை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே நேசிப்பவர்கள். ஈமான் என்னும் ஆயுதத்தைக் கொண்டு போரிட்டு வரும் தலிபான்களுக்கு உதவியாக பாகிஸ்தான் இனமும் களத்தில் குதித்தனர்.

அமெரிக்க அதிர்ந்து போனது. உடனே தனது கைப்பாவையான பாகிஸ்தான் அரசை போராளிகளுக்கெதிராக தூண்டி விட்டு ராணுவத்தை அனுப்பி தன் சொந்த நாட்டு மக்களையே கொல்ல சொன்னது. பாகிஸ்தான் வரலாற்றில் சுதந்திரமாக வாழ்ந்த அந்த வடமேற்கு எல்லை பகுதி நோக்கி ராணுவம் சென்றது. ஒரு பக்கம் அமெரிக்க கூலிப்படை, மறுபுறம் பாகிஸ்தான் ராணுவம். இரண்டு தீவிரவாதிகளையும் அந்த வீர முஸ்லிம்கள் தீரத்துடன் எதிர்த்தனர். ஆனால் அல்கொய்தாவுடன் தான் ராணுவம் போரிடுகிறது என்று பொய் பரப்பப்பட்டது.

இப்படி பள்ளத்தாக்கில் எதிர்ப்புகள் வலுக்கவே, அமெரிக்க c.i.a உளவு அமைப்பு நவீன ஆள் இல்லா drone விமானங்களைக் கொண்டு தாக்கியது. இதுவரையிலும் 337 முறை கண்மூடித்தனமாக தாக்கியதில் 40,000 பாகிஸ்தான் மக்கள் பலியாகினர். ஏராளமான மசூதிகளும் மதரசாக்களும் குறி வைத்து தாக்கப்பட்டன. 

சிறுமி மலாலாவின் தந்தை அந்த பள்ளத்தாக்கில் அமெரிக்க, பிரிட்டன் உதவியுடன் பல அந்நிய ஆங்கில கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இவரும் அந்த போராளி இனம் தான். ஆனால் அந்நியக் கூலிப் படைக்கு நெருக்கமானவர். பாகிஸ்தான் தலிபான் அமைப்பினர் நாசக்கார மேற்கத்திய பள்ளி கல்லூரிகளை மூடியதை சிறுமியும், அவள் தந்தையும் கடுமையாக எதிர்த்தனர். 

பேச்சாற்றல் நிறைந்த மலாலாவை மேற்கத்திய ஊடகங்கள் நன்கு பயன்படுத்தி தலிபான்களுக்கேதிராக அவதூறுகளை பரப்பின. சிறுமியை பெண் கல்விப் போராளி (!?) என்று பரிசு விருதுகள் பறந்தன. பல பள்ளி, கல்லூரிகளுக்கு சிறுமியை அழைத்து சென்று அந்நியக் கல்வியை ஆதரித்தும் தலிபான்களை விமர்சித்தும் பேச வைத்தனர். 

அக்டோபர் 9 அன்று மலாலா அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டாள் என்ற செய்தி உலகம் முழுவதும் ஒலித்தது. நாங்கள் தான் சுட்டோம் என்று தலிபான்கள் பெயரில் மின்னஞ்சல் பறந்தன. உலகம் முழுவதும் சிறுமி மலாலா தலிபான்களால் சுடப்பட்டு விட்டாள் என்று ஊடகங்கள் வாந்தி எடுத்தன.

பாகிஸ்தான் ஜமிய்யத் உலமா தலைவர் மௌலானா பஸ்லுர் ரஹ்மான், "சிறுமி மலாலா சுடப்பட்டிருந்தால் உண்மையில் அது காட்டுமிராண்டி செயல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரம் அமெரிக்காவின் c.i.a வின் கண்மூடித்தனமான drone தாக்குதலில் இதுவரை 40,000 பாகிஸ்தான் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதையும், மசூதிகள், மதரசாக்கள் இடிக்கப்பட்டதையும் உலக ஊடகங்கள் வெளியிட மறுப்பதையும் வைத்தே இதன் பின்னணியில் யார் செயல்படுகின்றனர் என்று தெளிவாகிறது. 

மட்டுமல்ல பெண்கள், குழந்தைகளை தாக்குவது ஆப்கான் சரித்திரத்திலேயே நிகழாத சம்பவம்." என்று கூறுகிறார்.
ஐ.நா.சபையோ நவம்பர் 10 மலாலா தினம் என்று அறிவித்துள்ளார்.!? பரிசுகளும், விருதுகளும் பறக்கின்றன சிறுமிக்கு.ஆனால் சிறுமி சுடப்பட்டது உண்மையா என்பது மட்டும் வெளி வரவே இல்லை (உண்மை வெளி வராது என்பது நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்) 

"எங்கள் நாடுகளை கொள்ளையடிக்காதீர்கள், எங்கள் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் உயர்ந்தது, உன்னதமானது. அதை எதற்காகவும் விட்டுத் தரவே மாட்டோம். ஆண்-பெண் குடும்ப உறவுகளை சீரழிக்கும் உங்கள் கல்விமுறை எங்களுக்குத் தேவையில்லை " என்று உலகின் வல்லூறுகளை தீரத்துடன் எதிர்த்துப் போராடும் ஆப்கான் நியாயத்தை உலகின் கவனத்திற்கு யார் கொண்டு செல்வது...

வல்ல இறைவன் கூறுகிறான்: "யூதர்களும், கிருத்தவர்களும் நீங்கள் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றும் வரை உம்மைப் பற்றி திருப்தி அடையவே மாட்டார்கள். கூறுங்கள்- ஏக இறைவனின் வழி அதுவே நேரான வழி. உமக்குத் தெளிவான அறிவு வந்த பின்பும் அவர்களின் மனோ இச்சைகளை பின்பற்றினால் இறைவனிடம் இருந்து உங்களைக் காப்பாற்றுபவனும், உதவி செய்பவனும் இல்லை." ( 2: 120)

உலகில் அநீதி நிலைத்து நின்றதாக ஒரு சான்றைக் கூட உலக வரலாற்றில் காண முடியாது.

- நன்றி சகோதரர் CMN சலீம்

2 comments:

  1. மனசாட்சியில்லாத மனிதர்கள்...

    மலாலா சுடப்பட்ட சம்பவம் தொடர்பான இந்த மடல் முகநூலிலும் பதிவிடப் பட்டிருப்பதைக் கண்டேன்.

    மலாலா தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சதிகள் இருக்கலாம், இல்லாதிருக்கலாம். இரண்டு விதமாகவும் நிலவுவன ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

    குறித்த பதிவில், ஆப்கானிய தாலிபான்கள் மேற்கின் கல்வி சீரழிவானது என்றுசொல்லி அதை முற்றாகத் தடைசெய்திருப்பதை ஆதரித்து எழுதி இருப்பவரும், அக் கருத்தை அங்கீகரிப்பவர்களும், மேற்குலகின் கல்வியை முற்றாகப் புறக்கணித்து, அதனைக் கற்காமல் வெறுமனே மத்ரஸா கல்வியை மட்டுமே மட்டும் கற்றவர்கள் எனப் புரிந்துகொள்வதா?

    அல்லது, இவர்கள் எல்லாம், "நாங்கள் மட்டும் மேற்கின் கல்வியை நல்ல முறையில் கற்றுத்தேறி டாக்டர், என்ஜினியர், வக்கீல், கம்பியூட்டர் நிபுணர், கல்லூரி லெக்ஸரர் என்று... -ஏன் நாஸா வரை சென்றுகூட- பல்வேறு தொழில்களில் நல்ல சம்பளத்தில் வேலையில் சேர்ந்து, குடும்பம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, சுகாதாரம், வசதி வாய்ப்புகளோடு வளமாக வாழ்வோம். ஆப்கானியர்களான அவர்கள் மட்டும், தங்களின் இறை விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள அக்கல்வியை நிராகரித்து, ஓர் இருட்குகைக்குள் காலத்தைக் கடத்தட்டும், நாம் அதற்கு 'ஜே' போடுவோம்" என்று சொல்ல வருகிறார்களா?


    தமது உள்ளங்களில் குறைந்தபட்ச மனிதாபிமானமோ, "இஸ்லாம் கல்வியை உலகக் கல்வி - மார்க்கக் கல்வி எனப் பிரிக்கவில்லை, கல்விக்கு இஸ்லாம் மிகுந்த மகத்துவம் வழங்கியுள்ளது" என்ற புரிதலோ இருப்பவர்கள் யாரும் இப்படிச் சொல்லவே மாட்டார்கள்.

    பலஸ்தீன், ஆக்கிரமிப்பு இஸ்ரேலை வெறுமனே கற்களைக் கொண்டு எதிர்த்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், அதேநிலையைக் காலமெல்லாம் கட்டியழவில்லை. சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் அப்பால் அந்தச் சமூகம் கல்வியைக் கற்றது. இரசாயனவியலில், பொறியியலில், தொழினுட்பத்தில் முனைவர் பட்டம்வரை எடுத்துக் குவித்தவர்களே அங்கு அரசியல் தளபதிகள், போராட்ட வீரர்கள். இஸ்ரேலை ஒருகாலத்தில் அஞ்சி நடுநடுங்கவைத்த யஹ்யா அய்யாஷ் முழுக் குர் ஆனையும் மனனம் செய்த ஹாஃபிழ் மட்டுமல்ல; ஒரு கெமிக்கல் என்ஜினியரும்கூட! அங்கே போராட்டக் களத்தின் முன்னணித் தளபதிகளில் அனேகர் முனைவர் (கலாநிதி) பட்டம்வரை ஒவ்வொரு துறையிலும் படித்த கல்விமான்களே. தவிர, நம் நாட்டின் சில அரசியல் வியாதிகளைப்போல் மழைக்கும் பள்ளிக்கூடம் போகாத முட்டாள் ரவுடிகள் அல்லர்.

    பலஸ்தீனர்களைக் கண்டு இப்போதைய இஸ்ரேல் பயந்து நடுங்குகிறது. கற்களில் இருந்து ஏவுகணைக்கு ஹமாஸ் நகர்ந்துள்ளது. அவர்களோடு சமரசம் செய்ய இஸ்ரேல் பணிந்து வருகிறது. பலஸ்தீன் ஐ.நா. அங்கத்துவம் பெற்ற ஒரு நாடு என்ற நிலையை அடைந்து, முழு உலகின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளது. முன்புபோல் ஆட்டம் போட முடியாமல் இஸ்ரேலின் வாலை ஒட்ட நறுக்கி வைத்துள்ளது. இது, கல்வியால் அவர்கள் அடைந்த வெற்றி.

    அதைப் பார்த்துப் பாடம் படிக்காமல், "மேற்கின் கல்வியாம், ஒழுக்கம் சீரழிகிறதாம், ஆகவே அக்கல்வி தேவை இல்லையாம்." சுத்தப் பைத்தியக்காரத்தனமான இந்தக் கருத்தைத் தூக்கிப் பிடித்து எழுதுவோரும், கருத்திடுவோரும் மேற்கின் கம்பியூட்டர் கல்வியைக் கற்று, அவர்களின் கண்டுபிடிப்பான ஒரு கம்பியூட்டரின் முன்னிருந்துகொண்டு கொஞ்சம்கூட வெட்கமோ மனசாட்சியோ இன்றி இவ்வாறெல்லாம் எழுதுகின்றனர்.

    இந்தியாவின் கூட்டு மனசாட்சிக்காக அப்பாவிகள் தூக்கில் ஏற்றப்படுவது போல, இவர்களின் வீராவேச அமெரிக்க எதிர்ப்புக் கோஷங்களுக்காகவும் சுலோகங்களுக்காகவும் அங்கே அந்த ஆப்கானிய அப்பாவிகள் கல்வி உரிமை மறுக்கப்பட்டு நூற்றாண்டு காலப் பின்னடைவுகளோடு, காலமெல்லாம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் சிக்கியே மொத்தமாய் அழிந்து போகட்டும்! நாம் அதை ஃபோட்டோ பிடித்து, நம்முடைய சமூக அபிமானத்தை வெளிக்காட்டும் வகையில் அமெரிக்காவைத் திட்டித் தீர்த்தபடி முகநூலில் வெளியிட்டு அஞ்சலி செலுத்துவோம், சரிதானே, சகோதரர்களே?

    "நெஞ்சில் உரமுமின்றி
    நேர்மைத் திறனுமின்றி
    வஞ்சனை சொல்வாரடி -கிளியே
    வாய்ச்சொல்லில் வீரரடி!" - பாரதி.

    ReplyDelete
    Replies
    1. புரிரிந்த்து தவறு. கல்வி கற்றுக்கொள் கலாச்சாரம் மீராமல்

      Delete