Tuesday, November 29, 2011

(மழைக்கால) மின் விபத்துகள் மற்றும் முதலுதவிகள்!


மழை நேரங்களில் ஏற்படும் சிரமங்கள் ஏராளம். அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் மழை, வேறு சில ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம். அவற்றில் முக்கியமானது மின் விபத்துகள். சமைக்க, தண்ணீர் சுட வைக்க, துணி துவைக்க, தேய்க்க, காற்று வாங்க என மின்சாரத்தின் பயன்பாடுகள் அதிகம். மழை நேரத்தில் வயர் இணைப்புகள் பாதிக்கப்படுவது, மின்கம்பங்கள் சாய்வது என விபத்துகள் ஏற்பட்டு மழை நீர், ஈரப்பதத்தின் மூலம் மின்சாரம் கடத்தப்பட்டு இழப்புகளையும் ஏற்படுத்துகிறது.


* மின் விபத்துகளை தடுக்க, சுவிட்சுகள் மற்றும் மின் சாதனங்களை இயக்கும்போது கவனமாகப் பயன்படுத்த வேண்டும். உலர்ந்த காலணிகளை அணிந்து கொள்வது, மின்சாரம் உடல்வழியாக கடத்தப்பட்டு தரையை அடைவதை தடை செய்து மின்விபத்தை தடுக்கும். வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும்போது தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை மின்சுவிட்சை ஆப் செய்த பிறகுதான் பரிசோதிக்க வேண்டும். மின்அடுப்பையும் மின்சாரம் கடத்தாத இடத்தில் வைத்து பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்.

* சில இடங்களில் வீடுகளுக்கு மிக அருகே மின்கம்பிகள் சென்று கொண்டிருக்கும். அவை தொடும் தூரத்தில் இருந்தால் அவற்றை கைகளாலோ, கம்புகளாலோ தொடக்
கூடாது. கல்லெறிதல், தண்ணீர்கொட்டுவது, பொருட்களை அதன்மீது படும்படி பயன் படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். வீட்டுக்குள் மின்இணைப்பு வயரிங் செய்து பல ஆண்டுகள் ஆகியிருந்தால் மழை நேரத்தில் மின்காப்பு (இன்சுலேசன்) பாதிக்கப்படலாம். இதனால் மின்ஒழுக்கு ஏற்பட்டு `ஷாக்` அடிக்க வாய்ப்பிருக்கிறது. பாதிப்புகளை உடனடி யாக சரி செய்துவிட வேண்டும்.

* விபத்தால் இதயத்துடிப்பு நின்று போயிருப்பவர்களுக்கு செயற்கை சுவாச முறையுடன் இதய இயக்க முதலுதவியும் அளிக்க வேண்டும். மார்புக் கூட்டின் மையப் பகுதிக்கும், இடதுபுறத்துக்கும் இடையில் கையை வைத்து அழுத்த வேண்டும். நிமிடத்துக்கு சுமார் 40 முறை இப்படி செய்யலாம். அதே நேரம் செயற்கை சுவாசமும் அளிக்கப்பட வேண்டும்.

* துண்டான வயர்களை `டேப்' கொண்டு ஒட்டிப் பயன்படுத்துவது, தரமற்ற உபகரணங் களைப் பயன்படுத்துவது போன்றவை மழைநேரத்தில் மின்விபத்தை ஏற்படுத்தலாம். பல்புகள் பியூஸ் போய்விட்டால் சுவிட்சை ஆப் செய்துவிட்டு, மர பெஞ்ச் மீது காலணி அணிந்து நின்று கொண்டு பல்பை மாற்ற வேண்டும். ரெப்ரிஜிரேட்டர், ஏ.சி., மிக்�® �ி ஆகியவை பயன்படுத்துவதிலும் கவனம் தேவை. இவற்றில் மின்கசிவு ஏற்பட்டு தீப் பிடிக்க வாய்ப்புண்டு. மின்காப்பு பாதிக்கப்பட்டு வீணாகும் மின்சாரம் வெப்பசக்தியாக வெளியேறும்போது தீப்பிடிக்கிறது.

* வீட்டிற்கு வெளியே நிகழும் மின்விபத்துகளும் அதிகம். மின்கம்பங்களில் கல்லெறி வது, ஏறிவிளையாடுவது, மின்கம்ப இணைப்புக் கம்பியில் மாடுகட்டுவது போன்றவை கிராமப்புறங்களில் பழக்கமாக இருக்கிறது. நகர்ப்புறங்களிலோ மின்கம்பங்களை ஒலி பெருக்கி கட்ட, பந்தல்காலாக பயன்படுத்துகிறார்கள். இவையாவும் மின்விபத்துகளை தூண்டும். மரக்கிளைகள் மின்வயரில் உரசுவது, கிளைகள் முறிந்து வயரில் விழுவது, மண் அரிப்பால் மின்கம்பங்கள் சாய்ந்துவிடுவது போன்றவை மின்விபத்துகளுக்கு காரண மாகி விடும்.

* மின்விபத்துகளை தவிர்க்க மின்கம்பிக்கும் கட்டிட உச்சிக்கும் 2.4 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கட்டிடத்திற்கு பக்கவாட்டில் வயர் சென்றால் 1.219 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அதற்கும் குறைவான இடைவெளி இருந்தால் மின்காப்பு பயன்படுத்த வேண்டும். விவசாயக் கிணறுகளில் மோட்டாரை இறக்கி ஏற்றுவத ு, எர்த் கம்பிகளை சரியாக இணைக்காமல் விடுவது, எலி, அணில் போன்ற உயிரினங்களால் வயர்கள் சேதம் அடைவது ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படலாம். எனவே கவனம் தேவை.

* எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் எதிர்பாராமல் விபத்துகள் நிகழலாம். எனவே முதலுதவி முறையை தெரிந்து வைத்திருப்பது நல்லது. விபத்தை அறிந்ததும் முதலில் மின்இணைப்பை துண்டிக்க வேண்டும். மரப்பெஞ்சு, நாற்காலி, ரப்பர், பாய் போன்ற மின் கடத்தா பொருட்களின் மேல் செருப்பு அணிந்து நின்று கொண்டு, தோல் , கயிறு, துணி, காகிதம், சாக்கு உதவியுடன் மின் சாதனத்திலிருந்து விபத்துக்குட்பட்டவரை விலக்க வேண்டும்.

* மின் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவரை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும். மூச்சு குறைவாக இருந்தால் உடனே செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வாய் அல்லது மூக்கில் தன்னுடைய வாயால் ஊதி காற்றை செலுத்துவது நேரடி சுவாச முறையாகும். முதுகு தரையில் படும்படி படுக்க வைத்து, தலையை நன்கு பின்னோக்கி சாய்த்துப் பிடித்து சுவாசமளிக்க வேண்டும். மார்பு நன்கு உயரும் வரை நிமிடத்திற்கு சுமார் 20 முறை சுவாசமளிக்கலாம்.

* மின்தாக்குதலால் உடலில் சருமம் தீய்ந்து புண் ஏற்படலாம். அவர்களுக்கும் முதலில் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். பிறகு எரிபுண்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, கொப்புளங்கள் பாதிக்கப்படாமல் ஆடைகளை களைய வேண்டும். உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரினால் புண்களை நனைக்க வேண்டும். அதே நீரில் நனைத்�® ¤ துணியை புண்ணின் மீது கட்ட வேண்டும். அவரால் சாப்பிட முடிந்தால் இனிப்பான டீ கொடுக்கலாம்.

* உப்புக்கரைசல் தயாரிக்க முடியாத பட்சத்தில் தூய துணியால் மின் எரிபுண்களை கட்டலாம். காயத்தில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தால் அதைக் கட்டுப்
படுத்த வேண்டும். அதிகமாக சுத்த ரத்தம் வெளியேறும் போது, இதயத்துக்கும் காயத்திற் கும் இடையில் இதயத்தின் அருகே துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். அசுத்த ரத்தம் வெளியேறினால் புண்ணின் அருகிலேயே கட்டுப்போடலாம். காயத்தின் மேல் பஞ்சை வைத்து கட்டுப்போட வேண்டும். துணியும் பஞ்சும் கிருமிகள் அற்றனவாக இருக்க வேண்டும்.

* வீட்டிற்கு வெளியே நிகழும் மின்விபத்துகளும் அதிகம். மின்கம்பங்களில் கல்லெறி வது, ஏறிவிளையாடுவது, மின்கம்ப இணைப்புக் கம்பியில் மாடுகட்டுவது போன்றவை கிராமப்புறங்களில் பழக்கமாக இருக்கிறது. நகர்ப்புறங்களிலோ மின்கம்பங்களை ஒலி பெருக்கி கட்ட, பந்தல்காலாக பயன்படுத்துகிறார்கள். இவை யாவும் மின்விபத்துகளை தூண்டும். மரக்கிளைகள் மின்வயரில் உரசுவது, கிளைகள் முறிந்து வயரில் விழுவது, மண் அரிப்பால் மின்கம்பங்கள் சாய்ந்துவிடுவது போன்றவை மின்விபத்துகளுக்கு காரண மாகி விடும்.

* மின்விபத்துகளை தவிர்க்க மின்கம்பிக்கும் கட்டிட உச்சிக்கும் 2.4 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கட்டிடத்திற்கு பக்கவாட்டில் வயர் சென்றால் 1.219 மீட்டர் இடை வெளி இருக்க வேண்டும். அதற்கும் குறைவான இடைவெளி இருந்தால் மின்காப்பு பயன்படுத்த வேண்டும். விவசாயக் கிணறுகளில் மோட்டாரை இறக்கி ஏற்றுவ�® �ு, எர்த் கம்பிகளை சரியாக இணைக்காமல் விடுவது, எலி, அணில் போன்ற உயிரினங்களால் வயர்கள் சேதம் அடைவது ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படலாம். எனவே கவனம் தேவை.
நன்றி: உங்களுக்காக

No comments:

Post a Comment