Friday, November 25, 2011

"வெளிநாடு செல்லும் பெண்கள்: பாதுகாக்க சட்டத்தில் மாற்றம்! வயலார் ரவி

புது தில்லி, நவ. 24: வளைகுடா நாடுகளில் பணிக்குச் செல்லும் இந்தியப் பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதைத் தடுக்கும் நோக்கில், உரிய சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்திருப்பதாக வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் ரவி மாநிலங்களவையில் வியாழக்கிழமை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பெண்களைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, அங்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் வயது30க்குக் குறையாமல் இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிக்கான ஒப்பந்தம் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளோம். முன் கட்டணத்துடன் கூடிய கைத்தொலைபேசியை பணிப் பெண்ணிடம் அவரை வேலைக்கு வைத்திருப்பவர் தர வேண்டும்  என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பணிப் பெண்ணை வேலைக்கு
அமர்த்தும் ஒருவர், பிணைத் தொகையாக ரூ. 1.3 லட்சத்தை இந்தியத் தூதரகத்தில் அந்தப் பெண்ணின் சார்பில் செலுத்த வேண்டும் என்றும் வயலார் ரவி குறிப்பிட்டார்.

நன்றி; தினமணி

No comments:

Post a Comment