Thursday, July 12, 2012

இரத்தக்கொதிப்பை (Blood pressure) கட்டுப்படுத்தும் வாழைப்பழம்

எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் சாமான்ய மக்களும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள், வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன ஆப்பிளை விட சிறந்தது, பல வகை சத்துகளைக் கொண்டது

ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். கார்போஹைட்ரேட் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது. பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது.. வைட்டமின் ஏ மற்றும் இரும்புசத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.

Saturday, July 7, 2012

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும்


”சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களுக்கும், தூக்குக் கயிற்றில் தொங்கிய தியாகிகளுக்கும் உயிர் கொடுத்த மந்திரச் சொல் ‘வந்தே மாதரம்‘. தன்னிகரில்லா பாரதத் தாயின் மீது பக்தியையும், அன்பையும் தூண்டி எழுச்சியைத் தோற்றுவிக்கும் ‘வந்தே மாதர‘ தேசிய கீதத்தை கிறித்தவர்களும், முசுலீம்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?”

- ஆர்.எஸ்.எஸ்.இன் நீண்டகால அவதூறுகளில் இதுவும் ஒன்று.
கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரத்தைக் கட்டாயமாகப் பாடும் நடைமுறையை அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். வந்தே மாதரத்தைப் பாட மறுக்கும் சிறுபான்மையினரைத் தேசத்துரோகிகள் என்று பெரும்பான்மை மக்கள் எளிதில் ஏற்கும் வண்ணம் பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். ஆகையால் வந்தே மாதரத்தையும் நாட்டுப் பற்றையும் இணைத்து இந்து மதவெறியாளர்கள் போட்டிருக்கும் இந்தப் பொய் முடிச்சை நாம் அவிழ்க்க வேண்டும்.

குஜராத் இனப்படுகொலையை மறந்து விடுவதற்கு எதிரான போராட்டம்! – பாரா நக்வி


குஜராத் 2002ஐ நம்மில் சிலர் விரும்புவது போல ‘நடந்து முடிந்த ஒன்று’ என்று ஏற்றுக் கொள்வதன் மூலம் நமது நிகழ்கால வாழ்வின் அர்த்தத்தை அச்சுறுத்துவதோடு, எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறோம்.
இடம்: ஷா-இ-ஆலம் நிவாரண முகாம், அகமதாபாத்,  நாள்: மார்ச் 27, 2002: அகமதாபாத் ஷா இ ஆலம் நிவாரண முகாம் 10,000 க்கும் அதிகமான தப்பிப் பிழைத்தவர்களுக்கான மிகப்பெரிய முகாம். அதன் முற்றத்தில் சிதறிக் கிடக்கும் மனித எச்சங்களில் சாய்ரா (வயது 12), அப்ஸனா (வயது 11), நைனா (வயது 12), அஞ்சு (வயது 12 ), ருக்சத் (வயது 9), நீலோபர் (வயது 10), நீலோபர் (வயது 9), ஹேனா (வயது 11) ஆகியோரும் அடங்குவர். அவர்கள் அனைவரும் நரோடா பாடியாவில் தப்பிப் பிழைத்தவர்கள். எந்தக் குழந்தையும் பார்க்கக் கூடாதவற்றை அவர்கள் பார்த்திருக்கிறார்கள், எந்தக் குழந்தையும் கற்றிருக்கக் கூடாத வார்த்தைகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த ஜூன் 15, 2004 அன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். “இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்தபொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர்.  அப்பொழுது நடந்த மோதலில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக” குஜராத் மாநில அரசு அறிவித்தது. அச்சம்பவம் நடந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அது ஒரு போலிமோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருக்கிறது.

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?


“இந்துக்கள் தங்கள் கோபத்தை முசுலீம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முசுலீம்களுக்கு பாடம் புகட்டட்டும்” நரேந்திர மோடி.

“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”

9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸிடமிருந்து உங்கள் கணினியை காப்பாற்ற...


இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.

DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.