Tuesday, November 29, 2011

(மழைக்கால) மின் விபத்துகள் மற்றும் முதலுதவிகள்!


மழை நேரங்களில் ஏற்படும் சிரமங்கள் ஏராளம். அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் மழை, வேறு சில ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம். அவற்றில் முக்கியமானது மின் விபத்துகள். சமைக்க, தண்ணீர் சுட வைக்க, துணி துவைக்க, தேய்க்க, காற்று வாங்க என மின்சாரத்தின் பயன்பாடுகள் அதிகம். மழை நேரத்தில் வயர் இணைப்புகள் பாதிக்கப்படுவது, மின்கம்பங்கள் சாய்வது என விபத்துகள் ஏற்பட்டு மழை நீர், ஈரப்பதத்தின் மூலம் மின்சாரம் கடத்தப்பட்டு இழப்புகளையும் ஏற்படுத்துகிறது.

Monday, November 28, 2011

சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்!

நம்முடைய பணியிடங்களில் சரியாக வேலை செய்ய முடியாமல் இருப்பதற்கு இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை , உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். இங்கே நீங்கள் ஒரு பணியிடத்தில் சுறுசுறுப்பாக இருக்கவும் , உங்கள் உடல் நலத்தை பேணவும் உதவும் சில குறிப்புகள் கொடுக்க முயற்சிக்கிறோம்.

Sunday, November 27, 2011

இணையதளத்தில் ரகசியமாக உங்களை கண்காணிக்கும் உளவு நிறுவனங்கள்!

நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன.  இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன.

Saturday, November 26, 2011

நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன், உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை. ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான, மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு, நெய் மிக முக்கியமான மருந்து.

Friday, November 25, 2011

"வெளிநாடு செல்லும் பெண்கள்: பாதுகாக்க சட்டத்தில் மாற்றம்! வயலார் ரவி

புது தில்லி, நவ. 24: வளைகுடா நாடுகளில் பணிக்குச் செல்லும் இந்தியப் பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதைத் தடுக்கும் நோக்கில், உரிய சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்திருப்பதாக வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் ரவி மாநிலங்களவையில் வியாழக்கிழமை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்!

நல்ல ஊதியத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நிச்சயம் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பதற்கு கல்வி உதவித்தொகையும் கிடைக்கும் என்கிறார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா தென்மண்டலத் தலைவர் பி.ரவி. கம்பெனி செக்ரட்டரி படிப்பு குறித்து ‘புதிய தலைமுறை கல்வி’க்கு அவர் அளித்த பேட்டி:கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?
  இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா கல்வி நிலையம், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதாகும். மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இது செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் தில்லியில் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் தில்லியில் மண்டல அலுவலகங்களும், 69 கிளை அலுவலகங்களும் உள்ளன.

போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார் இஷ்ரத் ஜஹான்- எஸ்ஐடி அதிரடி அறிக்கை

அகமதாபாத்: அகமதாபாத் அருகே இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டனர் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நரேந்திர மோடி அரசுக்கு இந்த அறிக்கை பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
   19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத் அருகே குற்றப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Thursday, November 24, 2011

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!


உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை


'முட்டை சைவமா..? அசைவமா?' என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா? அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது.

Tuesday, November 22, 2011

ஆதார் அட்டை விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகள்


Along with the filled Aadhaar enrollment form, following documents need to be produced in original or attested copies from notary/gazetted officer.
Proof of Identity (PoI)
Proof of Address (PoA)
Date of Birth (DoB)
As per the UID website, following are the documents which will be accepted as proof. If you don’t have some or any of the listed documents, see the bottom section ‘In case one does not have documents for proof’ for the procedure to be followed.

Sunday, November 20, 2011

அயல்நாடுகளை அசத்திய அழகர்சாமி முருங்கை காய்.....

சர்வதேச அளவில் காய்கறிச் சந்தைகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது ‘பள்ளப்பட்டி அழகர்சாமி வெள்ளியங்கிரி முருகன்’ (PAVM–) என்ற முருங்கைக்காய். திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி அழகர்சாமி கண்டுபிடித்த 5வகை ஒட்டு முருங்கை ரகமான இதில் அப்படியென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? அபார ருசி கொண்ட இவ்வகை முருங்கை, நடவு செய்த 6மாதங்களிலிருந்து காய்ப்புக்கு வந்து, வருடத்திற்கு ஒவ்வொரு மரத்திலும் 3000காய்கள்வரை காய்க்கும் (மொத்த எடை சுமார் 300கிலோ இருக்குமாம்!). அழகர்சாமியைச் சந்திக்க அவரது தோட்டத்திற்குச் சென்றோம். ‘பச்சை முருங்கைத் தோட்டத்தை’ சுற்றிக்காட்டியபடி உற்சாகமாகப் பேசுகிறார்...

முட்டை சாப்பிடுங்க.. மூளை சுறுசுறுப்பாகும்..

மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பகல் நேரங்களில், குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து சாப்பிடலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஜாமுக்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்வது நல்லதாம்

Saturday, November 19, 2011

சர்க்கரை நோய்: இந்தியர்களே ஜாக்கிரதை!

கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக் காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என, உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல் லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.

Wednesday, November 16, 2011

மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…

கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

வறுமைக்கோடு என்ற பெயரில் ஏழைகளுக்கு எதிராக திட்டக்கமிசன்!


ஒரு நாளைக்குத் தேவையான உணவு, மருத்துவம், கல்விச் செலவுகளைச் சமாளிக்க, நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு தனிநபரின் ஒருநாள் வருமானம் ரூ.32/ ஆகவும், கிராமப்புறத்தில் வசிக்கும் ஒரு தனிநபரின் ஒருநாள் வருமானம் ரூ.25/ ஆகவும் இருந்தால் போதும் எனத் திட்ட கமிசன் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது. திட்ட கமிசனின் இந்தத் தெளிவான வரையறைக்கும் அன்றாட நடப்புக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

Monday, November 14, 2011

2011 - இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டல் - Free Online Education Portal.



இந்த சிறுவர் தினத்தில் "இலவச ஆன்லைன் கல்வி"க்காக நான் ஆறு மாத உழைப்பில் இந்த பணியை செய்துள்ளேன். இது தான் ஆரம்பம். ஆம் ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதக இருக்கும். இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றூம் ஆசிரியர் பயிற்ச்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்ச்சி ஆங்கில மற்றூம் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றூம் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ண்மும் அதன் பயன்பாடும்......

Sunday, November 13, 2011

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

தீவிரவாத பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் ‘தேசபக்த’ இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள், அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால் புதைக்கப்பட்டுள்ளன.

வகுப்பு வெறியாட்டங்களும், மறுக்கப்படும் நீதியும்

இது நம்பிக்கைகளின் தேசம். கடலுக்கு அடியில் இராமரின் பாலம் இருப்பதாக நம்பலாம். அதை மறுத்தால் பெரும்பான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை அவமதித்த குற்றத்திற்கு ஆளாகக் கூடும். நாடாளுமன்றம் அனுமன் பிறந்த இடம். ஆகவே, அதை இடித்து விட்டு கோயில் கட்ட வேண்டும் என கோரிக்கை எழலாம். அனுமன் தாவிச் செல்லும் வகையை சேர்ந்தவன். அந்த இடத்தில் நாடாளுமன்றம் கட்டியதால் தான், குரங்குகளைப் போல கட்சி விட்டு கட்சி தாவும் குணம் அரசியல்வாதிகளுக்கு உருவானது என்கிற ஆதாரத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளலாம். இடிக்க விட்டு வேடிக்கை பார்த்து, பின்பொரு நாளில் இரண்டு பங்கை கோயில் நிலமாக தீர்ப்பு வழங்கலாம்.

‘இந்தியாவே வெளியேறு......

‘இந்தியாவே வெளியேறு’ என்ற ஒற்றை முழக்கம் ஜம்மு - காசுமீர் பள்ளத்தாக்குகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசின் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக காசுமீர் மக்களின் போராட்டம், மீண்டும் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. காசுமீரி தேசிய இனத்தவரின் தாயகமான காசுமீரை, ஆக்கிரமித்த இந்தியா, அங்கு தன் இராணுவத்தை நிறுவி பேயாட்சி நடத்தி வருகின்றது. பதவிக்காகவும், பணத்திற்காகவும் இன உரிமையை விலை பேசுகின்ற, தேர்தல் கட்சிகளை வைத்துக் கொண்டு அங்கு சனநாயகம் தழைத்தோங்குவதாக இந்திய அரசு வெளியில் பொய் சொல்லி வருவதை இப்போராட்டங்கள் அம்பலப் படுத்துகின்றன.

Saturday, November 12, 2011

குஜராத் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை: சங்க்பரிவார் பயங்கரவாதத்தின் நேரடி சாட்சி

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்ட குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் அதிகமாக விவாதிக்கப்படாத சம்பவம்தான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கு. கோத்ரா சம்பவத்தின் திரை மறைவில் மோடி அரசின் ஒத்துழைப்புடன் குஜராத் முழுவதும் சங்க்பரிவார பயங்கரவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கோரத்தாண்டவம் ஆடிய வேளையில் தப்பி பிழைத்தவர்கள் ஸர்தார்புராவில் உள்ள இப்ராஹீம் ஷேக்கின் வீட்டில் அடைக்கலம் தேடினர். அபயம் தேடியவர்களை விடாது துரத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இப்ராஹீமின் வீட்டை பூட்டி உள்ளே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினர்.