Saturday, March 31, 2012

முகவரி சான்றுக்கு விண்ணப்பம்! How to apply Address proof card?


வங்கி கணக்கு ஆரம்பிக்கவோ, சிம் கார்டு பெறவோ, PAN அட்டை மற்றும் பாஸ்போர்ட் பெறவோ, அல்லது சமையல் எரிவாயு இணைப்பு பெறவோ, நாம் அந்தந்த அதிகாரிகளிடம் தகுந்த முகவரி சான்றை அளிக்கவேண்டியுள்ளது. புதிதாக நகரத்தில் குடிபெயர்ந்தவராக இருந்தாலோ, தனிப்பட்ட முறையில் வணிகம் புரிபவராக இருந்தாலோ அல்லது இதுவரை எந்த முகவரிச் சான்றையும் பெறாதவராக இருந்தாலோ இந்த சேவைகளை பெற இயலாது.

எனவே இந்திய தபால்துறை, குறைந்த செலவில் இந்திய மக்களுக்கு முகவரி சான்றை அளிக்க முன் வந்துள்ளது இந்த அட்டையில் நபரின் கையொப்பம், அலுவலகம் மற்றும் வீட்டு முகவரி, பிறந்த தேதி, இரத்த பிரிவு, அவரின் கையொப்பம் ஆகிய அனைத்தும் இருக்கும்.


எங்கு இந்த வசதி கிடைக்கிறது?
  • இது நகர்புறவாழ் மக்களுக்கே கிடைக்கிறது
  • தற்பொழுது புவனேஷ்வர் (ஒரிசா), சென்னை மற்றும் மதுரை (தமிழ்நாடு), ஹைதராபாத் மற்றும் வரங்கள் (ஆந்திரா) ஆகிய நகரங்களில் கிடைக்கிறது.
யார் முகவரி சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்?
  • எந்தவொரு இந்திய குடிமகனும் இதற்கு விண்ணப்பிக்கலாம்
  • இதை பெற வயது வரம்பில்லை
எவ்வளவு காலம் இந்த அட்டை செல்லும்?
  • இந்த அட்டையின் ஆயுள் மூன்று வருடங்கள்
  • மூன்று வருடம் கழித்து விருப்பம் உள்ளவர்கள் திரும்ப விண்ணப்பிக்க வேண்டும்
  • ஆயுள் மூன்று வருடம் இருந்தாலும் வருடா வருடம் இதை புதுப்பிக்க வேண்டும்
இதனை பெற கட்டணம்
  • விருப்பமுள்ளவர்கள் ரூபாய் 240-ஐ செலுத்தி முகவரி சான்றை பெறலாம் (விண்ணப்ப கட்டணம் ரூபாய் 10, கட்டணம் மற்றும் அட்டை விலை ரூ.240/-)
  • ஒவ்வோரு வருடம் புதுப்பிக்கும் போது ரூபாய் 140ஐ இந்திய தபால்துறைக்கு செலுத்த வேண்டும்
எங்கு முகவரி சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும்?
  • விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
  • விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் கவனமாக பூர்த்தி செய்யவும் முழு குறிப்பையும் அளிக்கவும்
  • இரு வண்ண புகைப்படத்தை ஒட்டவும்
  • விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டு, கட்டணத் தொகை ரூபாய் 250-யுடன் விண்ணப்பிக்கவும்
  • கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும்
முகவரி சான்றை பெற வழிமுறை
  • விண்ணப்பத்தை பெற்றவுடன், இந்திய தபால் நிலையத்தின் பொது ஜன தொடர்பு அலுவலர், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை சரிப்பார்ப்பார்கள்
  • விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் திருப்தி அடைந்த பின்னர், முகவரி சான்று அட்டையை வழங்குவர்
அட்டையை புதுப்பித்தல்
  • அட்டைக்கு சொந்தகாரர்கள் வருடா வருடம் ரூபாய் 140ஐ செலுத்தி புதுப்பித்து கொள்ள வேண்டும்
  • மூன்று வருடம் முடிந்தவுடன் அட்டையின் ஆயுள் முடிந்து விடும். பின்னர் திரும்ப விண்ணப்பித்து புதிய முகவரி சான்று அட்டையை பெற வேண்டும்.

No comments:

Post a Comment