தேர்வுகள் நடக்கும் மாதம் என்றால் அது மார்ச், ஏப்ரல்தான். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வு நேரத்திற்கு சற்று முன்பு தேர்வு அறையில் மாணவர்கள் பலரும் பாடங்களைப் பற்றி பேசுவதும், புத்தகங்கள் படிப்பதாகவும் இருப்பார்கள். ஆனால், இறுதி நேரத்தில் பாடங்களை படிப்பது மன அமைதியை இழக்கச் செய்யும். உங்களுக்கான நாற்காலியில் அமைதியாக அமருங்கள்.
சிறிது நேரம் எந்த விதமான குழப்பமும் இன்றி மனதை அமைதியாக வைத்திருங்கள். நண்பர்களுடன் வீண் விவாதம், அரட்டையும் உங்களது சக்தியை இழக்கச் செய்து விடும். நீங்கள் படிக்காத அல்லது உங்களுக்கு சற்று கடினமான பதில்களை இறுதி நேரத்தில் படிக்க வேண்டாம். இது தேவையில்லாத டென்ஷனை ஏற்படுத்திவிடும்.