புதுடெல்லி : ‘தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்’ என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:
வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.

ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.
ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

Source: dinakaran.com
No comments:
Post a Comment