ஆந்திரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் நீங்கலாக நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 15 சதவீத இடங்கள், மத்திய செகண்டரி கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படும் ஏ.ஐ.பி.எம்.டி. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் தேதியை அறிவித்துள்ளது, மத்திய செகண்டரி கல்வி வாரியம். தேர்வுக்கான விதிமுறைகள்,தேர்வு அட்டவணைகள் தேர்வு நடைபெறும் முறை, நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் ஆகிய முக்கியத் தகவல்களை கடந்த கல்வி இதழில் (02-01-2012) வெளியிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டைப் போல அல்லாமல் விண்ணப்பங்கள் பெறுவதிலும், விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்துவதிலும் சில மாறுதல்களை செய்துள்ளது மத்திய செகண்டரி கல்வி வாரியம். இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
வேறு எந்த வங்கிக் கிளைகளிலும் விண்ணப்பங்களை பெற முடியாது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதை The Deputy Secretary (AIPMT),Central Board of Secondary Education, 2, Community Centre, Vihar, Delhi - 301 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மற்றும் ஸ்பீடு போஸ்ட் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்கள் கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலமாகவோ விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தலாம். ஜனவரி 25ஆம் தேதிக்கு முன்னதாக செலுத்தினால் பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000.

எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.550. பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு முன்பாக செலுத்தும் பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500. அதே தேதிக்கு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,050.
பிப்ரவரி எட்டாம் தேதிக்குப் பிறகு, பிப்ரவரி 24ஆம் தேதிக்கு முன்பாக தேர்வுக் கட்டணம் செலுத்தும் பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,000. அதே தேதிக்கு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,550 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 2.
முதல் கட்ட தாமதக் கட்டணம் செலுத்துவோர் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 15.
இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 2.
முதல் கட்ட தாமதக் கட்டணம் செலுத்துவோர் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 15.
இரண்டாம் கட்ட தாமதக் கட்டணம் செலுத்துவோர் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: மார்ச் 2.
No comments:
Post a Comment