நீங்கள் வாய்க்கு ருசியாக சாப்பிடவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதற்காக குட்கா, அபின் போன்ற போதைப்பொருளை, உணவில் சேர்த்து சாப்பிட விரும்புவீர்களா? பாக்கெட் உணவுகளை அதிகம் ருசிப்பவரா? தாகம் எடுக்கிறது என்பதற்காக பிளாஸ்டிக் டப்பாவை உடைத்து "மொடக்"குபவரா? வேண்டாமே, இந்த விபரீதம், நாம் அமெரிக்காவை போல உயரலாம், அதற்காக, அவர்கள் "கேடுகெட்ட" உணவுப் பழக்கத்தை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமா? மிளகிலும், சுக்கிலும், திப்பிலியிலும் அரிய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று அவர்கள் பின்பற்றத் துவங்கிவிட்டனர். ஆனால், அவர்கள் விட்டொழித்த "டப்பா" உணவுகளை நாம் ஏதோ ஆசைக்கு வாங்கி சாப்பிடலாம். அதற்காக வாழ்க்கையே டப்பா உணவாகி விடலாமா? நாம் சமையல் அறைகள் என்ன ரசாயன தொழிற்கூடமா? உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் எல்லாம் நமக்கு அவசியம் தானா?
நாம் இதையெல்லாம் யோசிக்க மறுக்கிறோம்? அது மட்டுமல்ல, நம் அந்தஸ்த்து, ஸ்டேட்டஸ் என்று எல்லாம் பார்த்து, பார்ட்டி என்ற பெயரில், நாள்தோறும் கண்ட கண்ட தின்பண்டங்களை சாப்பிட்டு, நாம் குழந்தைகளையும் சாப்பிட வைத்து எதிர்காலத்தில் அவர்களை அவஸ்தைப்பட வைக்க நினைப்பவரா?
* நீங்கள் சாப்பிடும் எந்த ஒரு டப்பா உணவிலும், டப்பா குளிர்பானங்கள், மது வகைகளிலும், சீஸ், பர்ஜர் என்ற சமாச்சாரங்களிலும் அசைவம் சேர்ந்திருக்கிறது.
* நீங்கள் சைவமாக இருக்கலாம். அதில் பிடிவாதமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் சாப்பிடும் இறக்குமதி சாக்லெட் முதல் எல்லாமே, மாட்டிறைச்சி, மீன் கொழுப்பு என்று ஏதாவது சேர்த்துத்தான் இருக்கும்.
* நாம் சமையலில் பயன்படுத்தும் பல பாக்கெட் சமாச்சாரங்களிலும் இப்படிப்பட்ட "ப்ளேவர்" கூட்டும் ரசாயனங்கள் இல்லாமல் இல்லை.
* நம்மில் சிலர் பயன்படுத்தும் "டேஸ்ட்" தருவதற்கான அஜினோமோட்டோவில் கூட முழுக்க ரசாயனம் தான். அதை பயன்படுத்தி வந்த சீனர்களும், அமெரிக்கர்களும் அதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆம், இப்படி நாம் எப்போது உலகமயமாக்கலில் கவனம் செலுத்தி, இப்போது மூழ்கி விட்டோமோ, அப்போதே நம் வாழ்க்கையில் சர்வதேசத்தனம் ஊடுருவத் துவங்கிவிட்டது. அதன் மூலம் தான் நம் சைவ உணவு பொருட்கள் கூட, இறக்குமதிகளால், ரசாயனம், அசைவம் சேர்ந்து வரத்துவங்கி விட்டது. பாக்கெட் உணவுகளால் ஆபத்தில்லை. ஆனால், நாம் அதிக அளவில் அதை பின்பற்றக்கூடாது என்பது தான். பலரும் அதிலேயே மூழ்கி விட்டது தான் ஆபத்து தருவதாகும்.
அஜினோமோட்டோ, இதன் உண்மையான பெயர் எம்.எஸ்.ஜி., என்பது தான். மோனோ சோடியம் க்ளூட்டாமேட் என்பது தான் இதன் முழு ரசாயனப்பெயர். கெச்சப்பாகட்டும், மஷ்ரூம் அயிட்டங்களாகட்டும், சிக்கன் சமாச்சாரங்களாகட்டும் எதிலும், இந்த எம்.எஸ்.ஜி., இருக்கும். நம்மூர் சோடா உப்பு போல் தான். இந்த எம்.எஸ்.ஜி., தான் நம்மில் அஜினோமோட்டோ என்று பிராண்ட் பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த எம்.எஸ்.ஜி., தரும் பிளேவர், டேஸ்ட் பெயர் தான் "யுமாமி" என்று அமெரிக்கர்களும், ஜப்பானியர்களும் கூறுகின்றனர். சீனாவிலும், இது கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், அமெரிக்காவில் கடந்த பத்தாண்டுக்கு முன்பே பெரும்பாலும் குறைக்கப்பட்டுவிட்டது. எம்.எஸ்.ஜி., இல்லாத உணவு என்றே சில ஓட்டல்களில் தனி அயிட்டங்கள் உண்டு. ஜப்பானிலும் குறைந்து விட்டது.
அமெரிக்கா உட்பட பல பணக்கார நாடுகளும், உடல் ஆரோக்கியத்துக்கு எதெல்லாம் கெடுதல் என்று அறிந்து, அதை குறைத்து விட்டனர். ஆனால், நம் தலையில் கட்டி வருகின்றனர். அஜினோமோட்டோ பற்றி மத்திய சுகாதாரத்துறை இன்னமும் உறுதியான விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை. குறிப்பிட்ட சதவீதம் வரை பயன்படுத்தினால், உடலுக்கு கேடில்லை என்று மற்ற ரசாயன பொருட்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கும் கொள்கையே கடைப்பிடித்து வருகிறது.
மொத்தத்தில் அஜினோமோட்டோ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அதை பயன்படுத்தும்போதும் தவிர்ப்பது நில்லது. ஏனென்றால், நிம் இயற்கையான தானியங்களில், மூலிகைகளில் இல்லாத பிளேவரா அதில் இருக்கப்போகிறது?
ஆனால், இதை நாம் உணர வேண்டுமானால், அதையும் அமெரிக்க நிபுணர்கள் தான் சொல்ல வேண்டும். அதுவரை நாம் அவர்கள் ஒதுக்க விரும்பும் "கேடுகெட்ட" ரசாயன உணவுகளை தான் சாப்பிடுவோம். அவர்கள் குறைக்க விரும்பிய கொழுப்பை நாம் ஏற்றத்தான் செய்வோம். முப்பது வயதில் வாக்கிங் போகும் நிலை இப்போது இருப்பது போய், குழந்தைப் பருவத்திலேயே வாக்கிங் போக வேண்டிய நிலை வரும்.
அஜினோமோட்டோ கண்டுபிடித்தது யார்?: பலருக்கும் அஜினோமோட்டோ என்றால், அதை சீனர்கள் தான் கண்டுபிடித்தனர் என்று தெரியும். சீனர்களின் பாரம்பரிய உணவுப்பொருள் என்று நினைக்கின்றனர். உண்மை என்னவென்றால், இதை கண்டுபிடித்தது சீனர் அல்ல, ஒரு ஜப்பானிய மருத்துவ நிபுணர் கண்டுபிடித்தார்.
அவர் பெயர் கிகுனே இகடே. கடந்த 1908ம் ஆண்டு இதை கண்டுபிடித்தார். டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளராக இருந்தார். ஜப்பானிய சூப்பில் இருந்து பல உணவுகளிலும் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்டது. அங்கெல்லாம் இதன் பெயர் எம்.எஸ்.ஜி., தான்.
இதுவரை நான்கு சுவை; இத்தோடு ஐந்தாவது சுவை: பல நு‘று ஆண்டுகளாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது நான்கு சுவைகள் தான். அவை, இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு. ஆனால், ஜப்பானிய நிபுணர், கண்டுபிடித்த சுவைதான் "யுமாமி" ஜப்பானிய மொழியில் இப்படி அழைக்கப்படுகிறது. நாம் பிளேவர், கமகம என்ற பெயர்களால் அழைத்துக் கொள்கிறோம்.
அஜினோமோட்டோ, இப்போதெல்லாம் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. உடலுக்கு எதுவும் பண்ணாது தான். எப்படி குட்காவோ, அதுபோல, உடலில் போனால், விர்ர்ர்...என்று சுவை கூட்டும். நாக்கில் வைத்தாலே டொமேட்டோ கெச்சப், சப்பு கொட்ட வைக்கிறதே, அந்த டேஸ்ட் தருவது எம்.எஸ்.ஜி., என்ற அஜினோமோட்டோ தான்.
காலப்போக்கில் இது நரம்பு மண்டலங்களை தாக்கும் ஆபத்து உள்ளது. அதனால், அதிக அளவில் சேர்க்கக் கூடாது என்று சர்ச்சை எழுந்தது. இருபதாண்டு அமெரிக்க சர்ச்சை, இன்னும் உலக முழுக்க தொடர்கிறது.
அவசியமா? ஆபத்தா? அரசு சொல்ல வேண்டும்: மும்பையில் பல பெரிய ஓட்டல்களில் அஜினோமோட்டோ பயன்படுத்தி, பிளேவர் தந்தனர். அது கொடிகட்டிப் பறந்தது. அதனால் சர்ச்சைக்குரிய இந்த அஜினோமோட்டோ விஷயத்தில் அரசு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தால் நல்லது. அரசு செய்யாவிட்டாலும், நாம் முடிவெடுப்பது நல்லது. ருசி தேவைப்பட்டால், நமக்கு இயற்கையாக கிடைக்கும் லவங்கம் பட்டை, சோம்பு என்பதை விட்டு, இப்படி ரசாயன கலவையை உடலில் ஏற்றிக்கொள்ள வேண்டுமா? சிந்தியுங்கள்.
நன்றி: கூடல்.காம்
No comments:
Post a Comment