கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி டெல்லியில் தேசிய நீர் வளத்துறை கவுன்சிலின் 6வது கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய நீர்க கொள்கை 2012 ஏற்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை வகித்தார். கடந்த 2002ம் ஆண்டில் துவங்கி 10 ஆண்டுகளில் ஒரு வடிவத்தை பெற்றுள்ளது தேசிய நீர் கொள்கை. இதை சற்று ஆழ்ந்து பார்த்தால் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் மாநிலங்களின் மீது அதிகாரத்தை செலுத்தும் போக்கை காணலாம். எப்படி மேலே படியுங்கள்:
1. அரசோ அல்லது அரசின் உள்ளாட்சி அமைப்புகளோ இனிமேல் குடிநீர், பாசன நீரை வழங்காது. இதை செய்யப்போவது தனியார் அல்லது பன்னாட்டு வர்த்தக நிறுவனம்தான்.
2. மளிகை போல் தண்ணீரும் ஒரு வணிகப் பொருள். இது ஆறு நீர், நிலத்தடி நீர், பாசன நீர் என்று எதுவாக இருந்தாலும் விலை உண்டு.
3. வீட்டு பயன்பாடு, விவசாயம், தொழில் என்று தண்ணீர் பயன்பாட்டை நிர்வாகம் செய்ய தண்ணீர் ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படும்.
4. தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கங்கள் அமைத்து அவரவர்கள் தங்களுக்கு என்று ஒதுககீடு செய்யப்பட்ட தண்ணீரை நிர்வகித்து கொள்ள வேண்டும்.
5. மின் கட்டணத்தை உயர்த்துவது, இலவச மின்சாரத்தை ரத்து செய்வது விவசாயத்துக¢கு பயன்படுத்தும் தண்ணீரை முறைப்படுத்துவதும் இதில் அடங்கும்.
6. இவற்றை எல்லாம் விட முக்கியமானது தண்ணீர் வினியோகத்தில் அரசு சேவை வழங்குபவர் என்ற நிலையிலிருந்து சேவையை ஒழுங்குபடுத்துபவர், தண்ணீர் மேலாண்மை நிறுவனங்களுககு தேவையான வசதிகளை வழங்குபவர் என்ற நிலைககு மாறும். இதன் மூலம் சொல்வது என்னவென்றால், தண்ணீர் வினியோக சேவை என்பது சங்கங்களுககோ அல்லது அரசு , தனியார் பங்கேற்பு நிறுவனங்களின் பொறுப்புக¢கு மாற்றப்படும்.
7. நிலச் சொந்தககாரர்கள் வீட்டுமனை உரிமையாளர்கள் தங்களது நிலப் பகுதியில் கிணறு தோண்டவோ, ஆழ்துளை குழாய் கிணறு தோண்டி நிலத்தடி நீரை எடுககவோ அவருக்கு உரிமை இல்லை.
8. தேசிய அளவிலும் மாநிலங்களுக¢கு இடையிலும் ஏற்படும் தண்ணீர் தொடர்பான பிரச்னைகளை விசாரித்து தீர்வு காண மத்திய அரசு நிலையான தண்ணீர் வழக்கு நடுவர் மன்றத்தை உருவாக்கும்.
9. நீர்க் கொள்கை பற்றிய மக்களின் கருத்துக்களை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வரை மத்திய அரசு இணையதளம் மூலம் பெற்றுள்ளது. இவற்றை பரிசீலித்த பின்னர் நீர்க்கொள்கை பற்றிய மசோதா தயாரிக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
உரிமையை பறிக்கலாமா: சமூக ஆர்வலர் பேராசிரியர் எம்.சுப்பிரமணியம் கூறுகையில், அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமையை பறிப்பதாக தேசிய நீர்க்கொள்கை உள்ளது. மாநிலங்களின் மீது அதிகாரம் செலுத்தும் நடவடிக்கைதான் இது. இது அமலுக்கு வந்தால், மாநிலங்களில் விவசாயம், தண்ணீர் பயன்பாடு ஆகியவற்றை மத்திய அரசு கட்டுப்படுத்தும். அதன்படியே செயல்பட வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஆழ்துளை கிணறுகள் உள்பட எல்லா நீர் ஆதாரங்களையும் அதன் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக் கொள்ளும்.
பல்வேறு மாநிலங்கள் அடங்கிய கூட்டாட்சி தத்துவத்தில் நமது நாடு ஜனநாயக முறையில் செயல்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்ப்பதற்கும் அரசியலமைப்பு சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் கொள்கை என்ற பெயரில் தண்ணீரை விலை வைத்து விற்கவும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கவும் முயற்சிப்பதை தடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் சமூக கடமையாகும்.
தண்ணீருக்கு விலையா: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் தலைவர் அ.வீரப்பன் கூறுவதென்ன:
தண்ணீரை எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் விற்பனை பொருளாக மாற்றி தனியாருக்கு தாரை வார்க்க அனுமதிக்கக் கூடாது. இது மக்களுக்கு செய்யும் அநீதி. அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமைகளை பறிக்காமல் வழிநடத்திச் செல்லலாம். அதைவிடுத்து தண்ணீருக்கு விலை நிர்ணயத்து பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் தாரை வார்த்துக் கொடுக்கும் முயற்சியை எந்த காலத்திலும் யாரும் அனுமதிக்கக் கூடாது.
நமது நாடு, கிராமங்கள் நிறைந்த ஒரு விவசாய நாடு. தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்தால், அது, விவசாயிகளின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும். தாகம் தீர்க்கும் தண்ணீருக்கு விலை நிர்யணம் செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும்.
நன்றி- தினகரன்
No comments:
Post a Comment