இதயம் எப்படி இயங்குகிறது?
இந்தக் கேள்விக்கான பதிலைச் சொன்னால் எளிமையாக இருப்பதுபோல்தான் தோன்றும். ஆனால் அதன் நடைமுறை மிகவும் நுட்பமானது,நுண்ணியமானது. பயன்படுத்தப்பட்ட அசுத்தமான ரத்தம், நமது உடலின் பல பகுதிகளில் இருந்து பலவகையான சிறிய சிரைகளின் (Veins) வழியாக இதயத்தின் வலப்பக்க மேல் அறைக்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வலப்பக்க கீழ் அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு இந்த ரத்தமானது நுரையீரல் தமனியின் வழியாக நுரையீரல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.












