Friday, June 17, 2011

பழங்களும் நோய்களும்....!


என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறதுஇன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.

                                                                                                                       
ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.
                                                                                                                       
திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.
                                                                                                                       
ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.
                                                                                                                       
மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.
                                                                                                                       
வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி
                                                                                                                       
பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.
                                                                                                                       
நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.
                                                                                                                                                           
நன்றி: "உங்களுக்காக"

No comments:

Post a Comment