நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம். தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு படைப்பாளிகளால் தவறாகவும் மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப் பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம் வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும் எழுதிவரும் தொடர்கதை. இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
Home
- Home
- மாஸலாமா
- ஒளரங்கசீப்
- மாவீரன் ஹைதர் அலி
- மாவீரன் திப்புசுல்தான்
- கர்னல் சவுகத் ஹயாத்
- பழனிபாபா பதில்
- அப்சல் குரு .....
- அப்சல் குரு - நேர்காணல்
- இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad).
- காந்திஜி vs கோட்சே
- மோடியை பற்றி கட்ஜூ
- மாவீரன் ஹேமந்த் கார்கரே
- காவி (தரித்த) பயங்கரவாதம்
- இந்தியாவின் மனசாட்சி கட்ஜூ!
- அப்துல் ஹபீப் யூசப் மர்பாணி
- மாவீரன் (மருத நாயகம்) யூசுப்கான் சாஹிப்
- குஜராத் படுகொலை - நிஜங்கள்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- சிராஜ்-உத்-தௌலா
Friday, January 20, 2012
Thursday, January 19, 2012
முஸ்லீம் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்ட ஆந்திர முதல்வர்....
ஹைதராபாத் : 2007ல் நடந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் காவல்துறையில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்ட 70 முஸ்லீம் இளைஞர்கள் பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுதலைசெய்யப்பட்டனர். இது போன்று பல வழக்குகளில் குற்றவாளிகள் என கைது செய்யப்படுபவர்கள் பின் அப்பாவி என விடுதலை செய்யப்பட்டாலும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை.
புயல் நிவாரணம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... நிதி இல்லாமல் நடக்கும் கண் துடைப்பு நாடகம்!
விவசாய நிலங்களை புயல் சூறையாடிச் சென்று 15 தினங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னமும் முழுமையான அடிப் படை வசதிகள் கிடைக்கவே இல்லை. தமிழகத்தில் 5,250 கோடி சேதம் என்றும் புதுவையில் 2,475 கோடி சேதம் என்று கணக்கிட்டு, மத்திய அரசிடம் நிதிஉதவி கேட்கப்பட்டது. பாதிப்புகளைப் பார்வையிட்ட மத்தியக் குழுவும், 'பாதிப்பு அதிகம்தான்...’ என்று ஒப்புக்கொண்டு முதல் கட்ட மாக தமிழகத்துக்கு 500 கோடியும் புதுவைக்கு 125 கோடியும் இடைக்கால நிவாரணம் ஒதுக்கி உள்ளது. அடுத்து ஒதுக்கப்படுவதும் சில நூறு கோடி களைத் தாண்டாது என்பதுதான் நிச்சயமான உண்மை!
Tuesday, January 17, 2012
ஊடகம், அரசு.மற்றும் நீதித்துறையால் தொடர்ந்து வஞ்சிக்கபடும் முஸ்லி ம் சமுதாயம்...!
உரலுக்கு ஒருபக்கம் அடி, மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்றால் இந்தியாவில் வாழும் மிகப்பெரும் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு எல்லா பக்கமும் அடிதான் விழுந்துக் கொண்டிருக்கிறது. பாசிச பயங்கரவாதம், அரசு பயங்கரவாதம், ஊடக பயங்கரவாதம் என பல தரப்பட்ட தாக்குதல்களை சந்திக்கும் துயரமான நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது கேரளாவை உலுக்கிய லவ் ஜிஹாத் அவதூறுப் பிரச்சாரம் ஊடகங்களால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது. முஸ்லிம்களின் சகிப்புத் தன்மையை குறித்து கேள்வி எழுப்பிய இச்சம்பவம் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைங்கர்யம் தான் என்பது அண்மையில் வெட்ட வெளிச்சமானது.
Friday, January 13, 2012
தானே புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய புதுவை ,கடலூர் மாவட்டத்தின் நிலை..
புதுச்சேரி-கடலூர் இடையிலான ‘ரெட்டிச்சாவடி’ என்கிற ஊரில் கரையை கடந்த, ‘தானே’ புயல் ஓர் ஊழித் தாண்டவத்தை நடத்தி ஓய்ந்திருக்கிறது. சுனாமியைவிட பயங்கரம் இது என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். கடலூர் மக்களுக்கும் புதுச்சேரி மக்களுக்கும் 2011ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகி விட்டது. ‘புயல் என்றால் அது நானே’ என காட்டிவிட்டுச் சென்றுள்ளது, ‘தானே’ புயல். 2004ம் ஆண்டு சுனாமியைவிட இந்தப்ப புயலின் கோரத் தாண்டவம் அதிகம் என்கிறார்கள் மக்கள்.
"எனக்கு வயது 52 ஆகிறது. கடலூர்தான் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம். எனக்குத் தெரிந்து இதுவரை 5 தடவைக்குமேல் கடலூரை புயல் தாக்கியுள்ளது. ‘தானே’வுக்குகப் பிறகுதான் புரிகிறது... இதற்குமுன் வந்ததெல்லாம் புயல் இல்லை, பலத்த சூறைக்காற்று என்று.
AIPMT (All India Pre Medical- Pre dental) எப்படி விண்ணப்பிப்பது?
ஆந்திரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் நீங்கலாக நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 15 சதவீத இடங்கள், மத்திய செகண்டரி கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படும் ஏ.ஐ.பி.எம்.டி. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் தேதியை அறிவித்துள்ளது, மத்திய செகண்டரி கல்வி வாரியம். தேர்வுக்கான விதிமுறைகள்,தேர்வு அட்டவணைகள் தேர்வு நடைபெறும் முறை, நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் ஆகிய முக்கியத் தகவல்களை கடந்த கல்வி இதழில் (02-01-2012) வெளியிட்டுள்ளோம்.
பிளஸ் டூ மாணவர்கள் (IIT) ஐ.ஐ.டி யில் எம்.ஏ (M.A )படிக்கலாம்!
பிளஸ் டூ படித்த மாணவர்கள் சென்னை ஐஐடியில் ஒருங்கிணைந்த எம்ஏ படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இந்தப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற பொறியியல் கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் பொறியியல் படிப்புகளை மட்டுமல்ல, கலைப் படிப்புகளையும் படிக்க தற்போது வாய்ப்புகள் உள்ளன. டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். கலைப்புலம் மற்றும் சமூக அறிவியலில் சிறந்த பயிற்சி பெற்றவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் படிப்புகளில், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்களை உருவாக்கும் வகையில் இந்தப் படிப்பு இருக்கும்.
செல்ஃபோன் (Cell phone radiation) கதிர்வீச்சு அபாயங்கள்! எச்சரிக்கை...
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன் Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.
Thursday, January 12, 2012
பயம், பயம், என்று மறையுமோ இந்த கூடங்குளம் பயம்! முஹம்மத் அலி ஐ பீ எஸ் (ஓ)
கிராமங்களில் மின்சாரம் வரும் முன்பு பெரியவர்களும், பெற்றோர்களும் குழந்தைகளை இருட்டு நேரத்தில் வெளியே செல்ல விடக் கூடாது என்பதற்காக பேய் கதைகளைச் சொல்லி இரவானதும் வீட்டிலேயே அடைய வைத்து விடுவார்கள். ஆனால் மின்சார உலகில் அந்த பேய் கதைகளெல்லாம் புதை குழிக்கு போய் பதுங்கிக் கொண்டன. கண்மாய், குளத்தில் குளிக்கச் சென்றால் தண்ணீர் ஆழமாக இருக்கும், ஆகவே கரையில் நின்று குளித்து விட்டு வரச் சொல்லுவார்கள் பெற்றோர். ஆனால் இன்று ஆங்கிலக் கால்வாயினை நீந்தும் திறன் குற்றாலீஸ்வரன் போன்ற சிறுவர்களுக்கு உண்டு. ஏன் ஆறு மாத குழந்தைக்கு கூட நீச்சல் கற்று கொடுக்கும் காலமாக மாறி விட்டது
Friday, January 6, 2012
4 ஆப்பிள் = 1 வாழைப்பழம்..! ஆய்வில் கண்டுபிடிப்பு
புதுடெல்லி : ‘தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்’ என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:
ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தபடும் (Frozen foods) இறைச்சியின் கேடுகள்!
உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ்.நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், சமைத்த உணவு என்று சகலதையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்து விடுவார்கள்.
Thursday, January 5, 2012
தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - Right To Information..
1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ?
2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ?
Wednesday, January 4, 2012
கேன்சருக்கு வழிவகுக்கும் ரீஃபைன்டு (Refined Oil) ஆயில்!
இப்போது எல்லாருடைய வீடுகளிலும் பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்துவது ரீஃபைன்டு ஆயில் என அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள்தான். ஒருமுறை அல்ல, இரண்டு முறை சுத்திகரிக்கப்பட்ட ஆயில்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன. எண்ணெய்களைச் சுத்திகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்கள் உடல்நலத்திற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துபவை. இன்றைய காலத்தில் பரவலாக இருக்கும் புற்றுநோய், மூட்டுவலி போன்றவற்றிற்கு இந்தச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துவதும் ஒரு காரணம்" என்கிறார் ஈரோடு சத்தியம் ஏஜென்சி மற்றும் என்விரோ ஈகோ சிஸ்டஸ்டம்ஸைச் சேர்ந்த எஸ்.மூர்த்தி சத்யராஜ். டெக்ஸ்டைல் டெக்னாலஜி கற்ற அவர் மூலிகை ஆராய்ச்சியிலும் நிபுணர். மூலிகைகளைக் கொண்டு சமையல் எண்ணெய்களைச் சுத்திகரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ள அவரிடம் பேசினோம்.
Tuesday, January 3, 2012
அஜினோமோட்டோ தருவது டேஸ்ட் மட்டுமல்ல... அதையும் தாண்டி.....

Subscribe to:
Posts (Atom)