Tuesday, January 29, 2013

பொது அறிவு (General Knowledge) பகுதி - 9

*1581-ம் ஆண்டு லண்டன் டவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தாமஸ் ஓவர் பரி என்பவருக்கு கொடுக்கப்பட்ட உணவு என்ன தெரியுமா?... 

நைட்ரிக் அமிலம், விஷச்செடிகள், அரைக்கப்பட்ட வைரம். இந்த மூன்றில் எந்த ஒன்றைச் சாப்பிட்டாலும் மனிதன் இறந்து விடுவான். ஆனால் இந்தக் கைதியோ இதையெல்லாம் சாப்பிட்டு 100 நாட்கள் வரை உயிர் வாழ்ந்திருக்கிறார். 

****இங்கிலாந்தில் ஆடுகளை மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே ஆடு மேய்க்க நாய்களை பயன்படுத்துகின்றனர். நாய்களுக்கு பயிற்சி அளித்து மேய்ப்பனாக அனுப்புகின்றனர். இவை காலையில் ஆடுகளை ஓட்டிச் சென்று மாலையில் பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கின்றன. இப்படி ஒரு நாய், இரண்டு நாய் அல்ல 2 லட்சம் நாய்கள் மேய்ப்பனாக வேலை செய்கின்றன. ஒரு நாய் 12 ஆட்களின் வேலையைச் செய்கின்றன என ஆட்டு மந்தையின் எஜமானர்கள் கூறுகிறார்கள்.


****பேப்பர் கிளிப்பை மூன்று பேர் கண்டு பிடித்தனர். 1899-ம் ஆண்டு வில்லியம் மிடில்புரூக்கும் 1900-ம் ஆண்டு பிராஸ்னனும் 1901-ம் ஆண்டு ஜோகன் வாலெரும் கண்டுபிடித்தனர். மூவருமே தங்களது தயாரிப்பிற்கு காப்புரிமை பெற்றனர். இதனால் பேப்பர் கிளிப்பை யார் கண்டுபிடித்தது என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது. 

ஆனால் மூன்றாவதாக கண்டுபிடித்த ஜோகன் வாலெர்தான் பேப்பர் கிளிப்பைக் கண்டுபிடித்தவர் என்று அங்கீகாரம் தரப்பட்டது. காரணம்,1899-ம் ஆண்டே ஜோகன் வாலெர் பேப்பர் கிளிப்பைக் கண்டுபிடித்து விட்டார். ஆனால் அவர் பிறந்த நாடான நார்வேயில் அப்போது காப்புரிமைச் சட்டம் கிடையாது. இதனால் அவர் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் தனது கண்டு பிடிப்பிற்கு காப்புரிமை கோரினார். இது தவிர மற்ற இருவரையும் விட வயதில் ஜோகன் இளையவராக இருந்தார். அவர் பிறந்த ஆண்டு 1866. இதனால் ஜோகன் வாலெரே பேப்பர் கிளிப்பின் கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டார். 

****ஒவ்வொரு ஆண்டும் உலகில் 19 மிகப் பெரிய பூகம்பங்கள் ஏற்படுகின்றன. 6.5 ரிக்டர் ஸ்கேல் அள விற்கு அதிகமாக ஏற்படும் பூகம்பங்கள் மனிதர்களின் உயிருக்கும் கட்டிடங்களுக்கும் பெரும் ஆபத்தை உருவாக்கக் கூடியவை. 1999-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 7.4 ரிக்டர் ஸ்கேல் ஆகும். இதில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள். இதே ஆண்டு தைவான்,மெக்சிகோ ஆகிய நாடுகளில் 7.6 ரிக்டர் ஸ்கேல் அளவு பூகம்பம் தாக் கியது. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற் பட்ட பூகம்பம் 8.7 ரிக்டர் ஆகும். 

ஆனால் இதையெல்லாம் விட மிகப்பெரிய பூகம்பம் 1960-ம் ஆண்டு சிலி நாட்டில் ஏற்பட்டது. இது 9.5 ரிக்டர் அளவாக பதிவானது. 

*** 

*பறவை என்றால் அது `கீச் கீச்'என்று சத்தம் போடும். அல்லது கத்தும். ஆனால் நாய் மாதிரி குரைக்குமா?... அப்படியொரு பறவையும் இருக்கிறது. அந்தப் பறவையின் பெயர் ஆன்ட்பிட்டா. வாத்து இனத்தைச் சேர்ந்த இந்தப் பறவை நாய் மாதிரி குரைக்கிறது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 1998-ம் ஆண்டுதான் இந்தப் பறவை இருப்பதே கண்டுபிடிக்கப்பட்டது. 

பறவையின ஆராய்ச்சியாளர் ராபர்ட் எஸ்.ரிக்லே, ஈகுவடார் நாட்டின் ஆன்டிஸ் மலைத் தொடரில் இந்தப் பறவை இருப்பதைக் கண்டறிந்தார். இப்போது இந்த இனப் பறவைகள் மொத்தம் 30 இருக்கின்றன. 

குரைப்பது என்கிற போது இன்னொரு விஷயமும் உண்டு. நாய் கள் குரைக்கும் எனபது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் குரைக்காத நாய்களும் இருக்கின்றன. பாசென்ஜி,ஸ்மாலிஷ் இன நாய்கள் குரைப்பதில்லை. இதோ போல் ஆப்பிரிக்கா கண்டத்தில் காணப்படும் காட்டு நாய்களும் குரைப்பதில்லை. 


*** 

*ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்படு கின்றன. இது வரை 10 ஆயிரம் கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட் டுள்ளன. கார்பன் மற்றும் எண்ணை யிலிருந்து கிரேயான் தயாரிக்கப்படு கிறது. எட்வின் பின்னி மற்றும் ஹரால்ட் ஸ்மித் என்னும் இருவர் நச்சுத் தன்மையில்லாத கிரேயானை 1900-ம் ஆண்டு வாக்கில் உருவாக்கினர். பின்னியின் மனைவி ஆலிஸ்தான் இந்தக் கலர் பென்சிலுக்கு கிரேயான் என்று பெயர் சூட்டியவர். சாக்பீஸ் போன்று இதன் வடிவம் இருப்பதால் இதற்கு அதனையொட்டி பெயர் சூட்டப்பட்டது. கிரேயான் என்பது பிரெஞ்சு சொல் ஆகும். சாக்பீசிற்கு பிரெஞ்சு மொழியில் கிரை என்று பெயர். ஓலா என்றால் எண்ணை. இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்துதான் ஆலிஸ் கிரேயான் என்ற பெயரை உருவாக்கி அதற்குச் சூட்டி விட்டார். 

1957-ம் ஆண்டு ஒரு பெட்டியில் 8 கிரேயான் பென்சில்தான் வைக்கப்பட்டன. அப்போது மொத்தம் 40 வண்ண கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது 120 வண்ணங்களில் கிரேயான்கள் தயாரிக்கப்படுகின்றன. 

*** 

*ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நீர் வாழ் உயிரி கள் அருங்காட்சியகம் ஒன்றில் முதல் முறையாக எறும்புத் தின்னி குட்டி போட்டுள்ளது. அந்தக் குட்டிக்கு இப்போது 5 மாதங்கள் ஆகிறது. காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் இதைப் பார்ப்பதற்கு முதன்முறையாக அனுமதிக்கப்பட்டனர். அந்தக் குட்டிதான் தனது இரண்டு கால்களால் இப்படி நடந்து வருகிறது. 

ஜப்பானிய மொழியில் எறும்புத் தின்னிகளுக்கு `தமாண்டுவா' என்று பெயர். ஜப்பானிய நீர்வாழ் உயிரிகள் அருங்காட்சியகம் அல்லது விலங்கியல் பூங்கா ஒன்றில் எறும்புத் தின்னி குட்டி போட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். 

*** 

*ஆர்டிக், அலாஸ்கா (அமெரிக்கா), கனடா, ரஷியா, இங்கிலாந்து, நார்வே, கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் துருவக் கரடிகள் அதிகம் காணப்படுகின்றன. ஆண் துருவக் கரடி 10 அடி உயரம் வரை வளரும். எடை 650 கிலோ இருக்கும். பெண் துருவக் கரடி 7 அடி உயரம் வரை வளரும். எடை 300 கிலோ வரையே இருக்கும். 

25 வருடங்கள் வரை இவை வாழும். நீண்ட தூர நீச்சலில் துருவக் கரடிகள்தான் சாம்பியன் என்று சொல்லலாம். ஏனெனில் ஓய்வெடுக்காமல் ஒரே வீச்சில் 161 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தும். கடல் நீருக்குள் வாழாத ஒரு விலங்கு இவ்வளவு தூரம் நீந்துவது ஆச்சர்யமானது. தற்போது 40 ஆயிரம் துருவக் கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை வேட்டையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

*** 

*சுறா மீன்களுக்கு அதன் ஆயுட்காலம் முழுவதற்கும் பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. 

ஒரு சுறா மீனுக்கு அதன் ஆயுட்காலத்தில் 20 ஆயிரம் பற் கள் முளைத்து விடுகின்றன. 

ஒரு பல் விழுந்தால் அந்த இடத்தில் இன்னொரு பல் உட னடியாக முளைத்துவிடுவதே இதற்குக் காரணமாகும். 

இரையைக் கைப்பற்றும் சுறாமீன்கள் முதல் கீழ்தாடை பற்களைக் கொண்டே இரையைக் கடிக்க ஆரம்பிக்கும். பின்னர் அப்படியே மேல் தாடைக்கு அந்த இரையை தூக்கி வீசும். இப்படியே மேலும் கீழும் தூக்கி வீசித்தான் இரையை அது தின்னுகிறது. எத்தனை பெரிய இரையாக இருந்தாலும் அதை 10 நிமிடத்திற்குள் மென்று விழுங்கி விடும். அத்தனை கூர்மையானது அதன் பற்கள். 


*கழுதைப் புலி ஒரு வேடிக்கையான விலங்கு. இறந்து போன விலங்குகளின் இறைச்சியைத்தான் இது விரும்பித் தின்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள࠯?. உண்மையில் கழுதைப் புலிகள் 95 சதவீதம் தனது இரையைத் தானே வேட்டையாடி வயிற்றை நிரப்பிக் கொள்கிறது. பெரும்பாலும் இது இரவு நேரத்தில்தான் வேட்டைக்குச் செல்லும். பெரிய விலங்குகளை அடித்துச் சாப்பிடவேண்டும் என்றால் தனது கூட்டத்தினரோடு செல்லும். மான்,வரிக்குதிரை, காட்டெருமை ஆகியவை இதன் விருப்பமான இரைகளாகும். 

உடல் முழுக்க பெரும் திட்டுக்களைக் கொண்ட கழுதைப் புலியும் உண்டு. இவை ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. காடுகளில் வாழும்போது இவை 40 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால் மிருககாட்சி சாலைகளில் வளர்த்தால் 20 வருடங்கள் வரையே வாழும். கழுதை என்ற பெயருடன் இருப்பதால் இது கழுதையின் உறவு இனமும் அல்ல. புலி என்ற பெயர் இருப்பதால் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்ததும் கிடையாது. இது எலி பாரம்பரியத்தைச் சேர்ந்தது. 

*** 

*நீர்யானைகள் ஆப்பிரிக்கா கண்டத்தில்தான் பெரிதும் காணப்படுகின்றன. நிலத்தில் வாழும் விலங்கு களில் யானைக்கு அடுத்து இதுதான் மிகப்பெரிய விலங்கு. பெரும்பாலும் ஏரிகளில்தான் இவற்றைப் பார்க்க முடியும். ஆனால் நதி, நீரோடைகளில் வாழ்கிற நீர்யானைகளும் உண்டு. இந்த நீர் யானைகளை குள்ள நீர்யானைகள் என்பார்கள். இவை 1.5 மீட்டர் நீளமும் 0.8 மீட்டர் உயரமும் கொண்டவை. இவற்றின் மொத்த எடை 300 கிலோவுக்குள் இருக்கும். இவை லைபீரியா நாட்டில்தான் அதிகம் காணப்படுகிறது. பெரிய நீர் யானைகள் 4 மீட்டர் நீளம் கொண்டவை. தோள் பட்டை வரை 1,4 மீட்டர் உயரம் கொண்டது. அதிக பட்சம் வளரும் நீர்யானை 4 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்கும். 

நீர் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை. ஒரு கூட்டத்தில் 20 முதல் 100 வரையிலான நீர் யானைகள் இருக்கும். இவை கொட்டாவி விட்டால் அது டேஞ்சர் என்று அர்த்தம். அது எதிரியைத் எந்த நேரத்திலும் தாக்கலாம். 

*** 

*சராசரி மனிதர்களைப் போல் 3 மடங்கு உயரம் வளரும் ஒட்டகச்சிவிங்களால் தண்ணீர் குடிக்காமல் இரண்டு வாரம் வரை உயிர் வாழ முடியும். ஆழ்ந்த தூக்கம் என்றால் அது ஒட்டகச் சிவிங்கிகளுக்கு மிகக் குறைவுதான். நின்று கொண்டே அவற்றால் தூங்க முடியாது. இதனால் அவ்வப்போது தூங்கி எழுந்து கொள்ளும். தரையில் நான்கு கால்களையும் பரப்பி வைத்து தலையைக் கீழே வைத்த நிலையில்தான் ஒட்டகச் சிவிங்கிகள் தூங்க முடியும். அந்தத் தூக்கமும் கூட சில நிமிடங்கள்தான். குட்டி பிறந்த ஒரு சில மணி நேரங்களில் எழுந்து நிற்க முடியும். தாயுடன் குட்டி 15 மாதங்கள் வரைசேர்ந்தே வாழும். 

சிங்கமும், சிறுத்தையும்தான் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு கிலி தருபவை. தனியாக இருந்தால் இந்த இரண்டு மிருகங்களும் தங்களை வேட்டையாடித் தின்று விடும் என்பதால் புத்திசாலித் தனமாக வரிக்குதிரை மான் போன்ற பிராணிகளின் கூட்டத்தினருடன் சேர்ந்தே காணப்படும். 

*** 

*பூச்சிகளின் உடலிலிருந்து `பெரமோன்' என்னும் மணம் தரும் பொருள் தோன்றுகிறது. இப்பொருள் தரும் மணத்தின் மூலம் அவை ஒன்றோடு ஒன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. பெரமோன் ரசாயனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ள. இந்த மணத்தின் மூலம் வரும் ஆணைகளை பூச்சிகள் மீறுவதே கிடையாது. 

வண்ணத்துப் பூச்சிகள், விட்டில்கள்,சிலந்திகள், தட்டான் பூச்சிகள், சில வகை வண்டுகள்,கொசுக்கள், முதுகெலும்பற்ற சில விலங்கினங்கள் ஆகியவை பெரமோன் மணத்தின் மூலம்தொடர்பு கொள்கின்றன. இத்தகைய ரசாயன சமிக்ஞைகள் பல மீட்டர் தூரத்திற்குக் கூட பரவும் சக்தி கொண்டது. 

*** 

*தாமஸ் ஆல்வர் எடிசன் மாதத்திற்கு இரண்டு கண்டுபிடிப்புகள் வீதம் 40 ஆண்டுகள் தொடர்ந்து ஆயிரத்து 39 புதிய பொருள்களைக் கண்டுபிடித்து அவற்றிற்கான கண்டுபிடிப்பு உரிமையையும் பெற்றார். உலகில் வேறு எந்தக் கண்டுபிடிப்பாளருக்கும் இத்தகைய பெருமை இல்லை. மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளி சென்ற இவரின் 12-ஆவது வயது முதல் எடிசனுக்கு காதும் கேட்காமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது. 

*** 

* எல்லா வகைப் பறவைளுக்கும் இறக்கை இருந்தாலும் சில வகைகள் பறக்க முடிவதில்லை. கோழிகள் பறக்க முடியாத பறவை இனத்தைச் சேர்ந்தவை. பறக்க முடியாத பறவைகளில் மிகப்பெரியது நெருப்புக்கோழி. இரண்டாவது மிகப் பெரிய பறவை எமு. நிïசிலாந்தில் காணப்படும் கிவி பறவையாலும் பறக்க முடியாது. 

*எறும்பில் பல இனம் உண்டு. ஒவ்வொரு வகையிலும் மூன்று சந்ததிகள். பார்த்தால் எறும்பு மாதிரி இருக்காது. நீண்ட பெரிய வயிறு இருக்கும். இதுதான் எறும்பு. ஒரு புற்றில் ஒரு ராணிதான் இருக்கும். இரண்டாவதாக வீரர்கள். இதன் வேலை புற்றைக் காப்பாற்றுவது. இவைதான் நம்மை நறுக்கென்று கடிப்பது. இதன் வாயில் பார்மிக் அமிலம் இருப்பதால், தோலில் பட்டதும் அரிப்பு எடுக்கும். மூன்றாவது வேலைக்கார எறும்புகள். இதுதான் எண்ணிக்கையில் அதிகம். 

இரை தேடுவது, முட்டைகளை எடுத்துச் செல்வது, புற்றை விரிவாக்கம் செய்வது என்று சகல வேலைகளையும் யார் கட்டளையும் இல்லாமல் செய்யும். இவை மனிதர்களை கடிப்பதில்லை. பாவம் வாயில்லா பூச்சிகள். 

*1960-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து கடல் பொறியியல் வல்லுனர்கள் பிக்கார்ட்,லெப்டினன்ட் வெல்ஸ், ஆகிய இரண்டு பேரும் கடலில் 35 ஆயிரத்து 800 அடி ஆழத்தில் வாளைமீன்கள் போன்ற உயிரினங்கள் இருப்பதை படம் பிடித்து வந்துள்ளனர். அது நாள்வரை பெரும்பாலான கடல் ஆய்வாளர்கள் ஆயிரத்து 800 அடி வரை மட்டுமே உயிரினங்கள் வாழ முடியும் என்று நம்பி இருந்தனர்.

No comments:

Post a Comment