லேப்டாப் வாங்குவதற்குப் பதிலாக, டேப்ளட் பிசி ஒன்று வாங்கலாமா என்றும், லேப்டாப் வாங்குவதாக இருந்தால், என்ன என்ன அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும் “என்ன வாங்குவது?” என்ற கேள்வியைக் கேட்பதற்குப் பதிலாக, “என் தேவை என்ன?” என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுப் பதிலை எழுதிப் பாருங்கள். உங்களுடைய தேவை இணையபக்கங்களைக் காண்பதும், மின்னஞ்சல்களைப் படித்து, பதில் அளிப்பது மட்டுமே எனில், உங்களுக்கு டேப்ளட் பிசி மட்டும் போதும். இவை மட்டுமின்றி, வேறு சில முக்கிய பணிகளுக்கும், பள்ளிக் கல்வி, கல்லூரிப் பணி மற்றும் அன்றாட வாழ்க்கை மற்றும் அலுவலக வேலைகளுக்குக் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதாக இருந்தால், இன்றைய நிலையில் டேப்ளட் பிசிக்கள் நம் தேவையை முழுமையாக நிறைவேற்றாது.
இந்த நிலையில், நமக்கு ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் மட்டுமே உதவும். டேப்ளட் பிசியைக் காட்டிலும் பெரிய திரை, கீ போர்ட், அதிக அளவில் பைல்களைச் சேமிக்கும் வசதி, உங்களுடைய அனைத்து சாப்ட்வேர் தொகுப்புகளையும் அரவணைத்து இயக்கும் தன்மை ஆகியவை ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரில் மட்டுமே கிடைக்கும் வசதிகளாகும்.
சரி, லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், அதில் நாம் எதிர்பார்க்க வேண்டிய, அதில் இருக்க வேண்டிய வசதிகள் என்ன என்ன என்று பார்க்கலாம்.
1. குறைந்தது 4 ஜிபி ராம் நினைவகம்: பல லேப்டாப் கம்ப்யூட்டர்கள், 2 ஜிபி ராம் மெமரி மட்டுமே கொண்டு வெளியாகின்றன. இன்றைய பயன்பாட்டில் உள்ள பல புரோகிராம்களுக்கு இது போதாது.
2. முடிந்தால் ஒரு எஸ்.எஸ்.டி.: சாலிட் ஸ்டேட் ட்ரைவ் (“solidstate drive”): உங்களிடம் அதிகம் செலவழிக்க பண வசதி இருந்தால், எஸ்.எஸ்.டி. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ் பொருத்தப்பட்ட லேப்டாப் வாங்கவும். இதில் நகரும் பகுதிகள் இல்லாததால், இது கூடுதல் வேகத்தில் இயங்கும்.
வழக்கமான ஹார்ட் ட்ரைவினைக் காட்டிலும், குறைவான மின் சக்தியில் இயங்கும். எனவே இதன் இயக்கத்தினால், வெப்பம் உண்டாவது குறைகிறது. இது ஹார்ட் ட்ரைவிற்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கிறது. ஆனால், இதில் ஒரு குறை உள்ளது. அதிக காசு கொடுத்து வாங்கும் எஸ்.எஸ்.டி.க்களின் கொள்ளளவு குறைவாகவே உள்ளது.
குறைந்தது 500 ஜிபி கொண்ட லேப்டாப்கள் கிடைக்கையில், அந்த அளவில் எஸ்.எஸ்.டி.க்கள் கொண்ட லேப் டாப் கிடைப்பது அரிது. ஆனால், எண்ணிப் பாருங்கள். நம்மில் எத்தனை பேர் 100 ஜிபிக்கு மேல் டேட்டா பதிக்கிறோம்.
3. இயக்கிப் பாருங்கள்: லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கப் போனால், அதன் கூறுகள், சிறப்பம்சங்கள் என்று ஒரு பட்டியலைக் காட்டி, அதற்கான மாடல் எண்ணையும் கொடுத்து, எது வேண்டும் எனக் கேட்டு, அட்டைப் பெட்டி பார்சலைத் தருவது நம் விற்பனை மையங்களின் வழக்கமாக உள்ளது.
ஆனால், சில நிறுவனங்களின் விற்பனை மையங்களில், சில மாடல் லேப்டாப் கம்ப்யூட்டர்களையாவது, இயக்கிப் பார்க்க வைத்திருப்பார்கள். நீங்கள் வாங்கத் திட்டமிடும் லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். அதன் இயக்கத்தினை ஒருமுறையேனும் அனுபவித்துப் பார்த்து, பின்னர் வாங்குவது குறித்து முடிவு செய்திடவும்.
4. ப்ராசசர்: எந்தக் கம்ப்யூட்டரிலும் ப்ராசசர் வேகம், தன்மை மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால், இதுவே அடிப்படையான ஒரு தேவையாக நம்மில் பலருக்கு இருப்பதில்லை.
நீங்கள் அதிக கிராபிக்ஸ், வீடியோ எடிட்டிங் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டால், கூடுதல் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்கள் தேவை. இல்லை எனில், வழக்கமாக லேப்டாப்களில் பொருத்தப்படும் நடுநிலை வேக ப்ராசசர்கள் போதுமானது.
Thanks: senthilvayal.blogspot.com
No comments:
Post a Comment