Saturday, March 30, 2013

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா கண்டுபிடிப்பது எப்படி?

நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும். சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லவா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும். இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

Wednesday, March 27, 2013

வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள்...

டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன்கள் என வீடு முழுக்க நிறைந்துகிடக்கும் பொருட்கள் அதிகம். ஆனால், உயிர் காக்கும் முதல் உதவிப் பொருட்கள் ஏதேனும் நம் வீட்டில் இருக்கிறதா? இதோ அத்தியாவசியமாக வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள். வீட்டில் மட்டும் அல்ல, வாகனங்களிலும் இதை வைத்திருக்கலாம்.

கிருமிநாசினி (Antiseptic liquid): தினசரி வாழ்க்கையில் உடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, கை கழுவும்போது கிருமிநாசினி பயன்படுத்தலாம். உடலில் காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கிருமிநாசினி பயன்படுத்திக் காயத்தைச் சுத்தப்படுத்துவது பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றுகள் வராமல் தடுக்கும். இதேபோல் டிங்சர் வைத்திருப்பதும் முக்கியம்.

Tuesday, March 26, 2013

மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா...?

இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது.  ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.

இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின்கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது . அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களை ப் பயன்படுத்துகிறது

நடைப் பயிற்சியின் அவசியம்.... (walking...)

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிக சிறிய வயதில் உடல் பருமண், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது நடைப்பயிற்சி செய்யுங்கள். நடைப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகிவிட்டது.

நான் சென்னையில் இருக்கும் போது காலை வேலையில் கடற்கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப் போல் இருக்கும் அங்கு எல்லோரும் கையை வீசிக்கொண்டு வேகமாக நடக்கின்றனர். அங்கு மட்டுமா? எல்லா இடங்களிலும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்று வரும் புதுப்புது நோய்களால் 20 வயதிற்குட்பட்ட நிறைய பேர் நடைபயிற்சியல் ஈடுபடுகின்றனர். நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசியமான ஒன்றாகிவிட்டது இன்று.

Monday, March 25, 2013

கேட்டமைன் ((KETAMINE) என்னும் போதை எமன்!

எப்போதாவது செய்தித்தாள்களில், விமான நிலையங்களில் கேட்டமைன் பிடிபடும் செய்திகளைப் படிக்கிறோம். அது என்ன கேட்டமைன்?

கேட்டமைன் - ஹெராயின், அபின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் எமன். ஹெராயின், அபின், கஞ்சா, மது ஆகிய போதைப் பொருட்களுக்கு மூலப் பொருள் இயற்கையான விளைபொருட்களே. ஆனால், கேட்டமைன் முழுக்க, முழுக்க ரசாயனப் பொருள். உண்மையில் இது கால்நடைகளுக்கு ஏற்படும் உயிர்க்கொல்லி நோயான ஆந்தராக்ஸ் முற்றிய நிலையில் கடைசி யாக உயிர் காக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் கால் நடை மருந்து. தவிர, ஆபத்தான வலி நிவாரணி மருந்தும்கூட. பார்க்க சர்க்கரை போலவே பளபளப்பாக வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் உண்மையான வேதியியல் பெயர் க்ளோரோபைனல் மெத்லோமினா சைக்ளோஹெக்ஸானோன். பெயரை உச்சரிக்கவே வாய் தடுமாறுகிறதா? உள்ளே சென்றால் சகலமும் தடுமாறும்.

Sunday, March 10, 2013

வாஞ்சிநாதன் ஆஷ் துரையை கொன்றது ஏன்... ? மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்......

(Robert W. D. E. Ashe)

அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை ...விலக்கி வருகிறது, 

ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்? இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ” அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” – அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

அதிரடி தண்ணீர் கொள்கை..... ‘தண்ணி’ காட்டப்போகும் தண்ணீர்'


கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி டெல்லியில் தேசிய நீர் வளத்துறை கவுன்சிலின் 6வது கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய நீர்க கொள்கை 2012 ஏற்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை வகித்தார். கடந்த 2002ம் ஆண்டில் துவங்கி 10 ஆண்டுகளில் ஒரு வடிவத்தை பெற்றுள்ளது தேசிய நீர் கொள்கை. இதை சற்று ஆழ்ந்து பார்த்தால் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் மாநிலங்களின் மீது அதிகாரத்தை செலுத்தும் போக்கை காணலாம். எப்படி மேலே படியுங்கள்: 

Friday, March 1, 2013

இணையமும் குழந்தைகளும்....

புத்தாண்டில், வளர்ந்த உங்கள் செல்வத்திற்கு கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி, ஐ பேட், லேப்டாப் என ஏதேனும் டிஜிட்டல் சாதனம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளீர்களா? பாரட்டுக்கள். அத்துடன் அவர்களுக்கு, அவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மை தீமைகளை எடுத்துக் கூறி, என்ன என்ன செய்யக் கூடாது என அறிவுரை என்றில்லாமல், டிப்ஸ் எனப்படும் பயன்குறிப்புகளைத் தரவும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாமா!

1.நேர எல்லைகள்:

டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர், விரைவில் அதற்கு அடிமையாகும் பண்பு சிறுவர்களுக்கு வந்துவிடுகிறது. எனவே, பக்குவமாக, ஒரு நாளில், எந்த எந்த வேலைகளுக்கு அவற்றை, எவ்வளவு நேரம் அதிக பட்சம் பயன்படுத்த வேண்டும் என்பதை, விளக்கமாக எடுத்துரையுங்கள்.

பொதுஅறிவு பகுதி....Genaral Knowledge...


* சீனா தலைநகர் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் "சீங்பாவோ' என்ற பத்திரிகை 103 ஆண்டுகளாக வெளிவருகிறது. அச்சு இயந்திரம் வருவதற்கு முன் இதைக் கையால் எழுதி நகல் எடுத்தார்களாம். 

* உலகிலேயே முதன்முதலில் தலைப்புடன் செய்தி வந்தது 1777-ம் ஆண்டில் "நியூயார்க் கெஜட்' என்ற பத்திரிகையில். 

*உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் முதல் கோலைப் போட்டவர் என்ற பெருமை பிரான்ஸ் நாட்டு அணியைச் சேர்ந்த லூசியனண்ட் லூரான் என்ற வீரர் பெற்றார். 1930-ம் ஆண்டு முதல் கோலை மெக்ஸிகோவிற்கு எதிராகப் போட்டார்.