ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், தன் மகளை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேர்த்ததால், கல்வி, உள்ளாட்சி, சுகாதாரம் என, அனைத்து துறை அதிகாரிகளையும் அங்கு முற்றுகையிட வைத்து, ஒரே நாளில் அப்பள்ளி மிகப்பெரிய மாற்றம் கண்டுள்ளது. தற்போது, அப்பள்ளி வளாகம், வகுப்பறைகள் என, எல்லாமும் வழக்கத்தைவிட அதிக சுத்தமாக உள்ளன
.
மேலும், அங்கு சத்துணவு சமைக்கும் முன், காய்கறிகளை சுத்தம் செய்யவும், பரிமாறும் முன் பணியாளர் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவை, அரசின் கண்காணிப்பு இருந்தால், எல்லாம் சரியாகவே இருக்கும் என்பதையே காட்டுகிறது. அரசு அதிகாரியின் குழந்தையை சேர்த்தால் தான், அரசுப் பள்ளி இத்தனை கவனத்துடன் செயல்படும் எனில், அரசின் அனைத்துப் பள்ளிகளிலும், அரசின் உயர் பதவி வகிப்பவர்களின் குழந்தைகளை சேர்ப்பது நடக்கிற காரியமா?
அரசுப் பள்ளி ஆசிரியர்களே கூட, தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்க்க தயங்கும்போது, எங்கு சேர்த்தாலும் குழந்தைகள் புத்திசாலிகளாக வருவர் என்பதை உணர்ந்து, தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்து, மற்ற பெற்றோருக்கு முன் மாதிரியாக விளங்கும், ஈரோடு மாவட்ட கலெக்டரை பாராட்டவே வேண்டும். வேண்டிய வசதிகள் அனைத்தும், அரசுப் பள்ளிகளிலேயே கிடைக்குமாறு அரசு செய்தால், பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகளை, கொள்ளைக் கட்டணத்தை செலுத்தி, தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படப் போகிறது?
ஆகவே, தொடர் கண்காணிப்பிற்கு அதிகாரிகளை முடுக்கிவிட்டு, அனைத்து பள்ளிகளின் மீதும், அதிக கவனத்தை செலுத்த வேண்டும் அரசு.
Hello from France
ReplyDeleteJust a quick note to accompany my visit to your website.
Congratulations.
Maybe would have the opportunity to welcome you on mine!
I wish you a very good day
Sincerely
★ ·.·'¯`·.· ★ Chris ★ ♫ ♪ ♫ ♪ ♫ ♪ ♫
http://sweetmelody87.blogspot.com/