Saturday, June 25, 2011

மாணவர்களின் கல்விக் கடன்களுக்கு வட்டி ரத்து-



தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கல்விக் கடன்களின் வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது,2009-10ம் கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, இந்திய வங்கிகள் சங்கத்தின் கீழ் உள்ள வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெற்றோரின் ஆண்டு மொத்த வருமானம் 41/2 லட்சத்துக்குள் உள்ள, பொருளாதார நிலையில் நலிவுற்ற மணவர்களுக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற மாணவர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெற்றிருந்தால் அதற்கான வட்டியை மத்திய அரசே செலுத்தும்.

இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த வங்கிக் கிளைகளில் அளிக்க கடைசி தேதி ஜுலை மாதம் 20 ஆகும். இதற்கு மாநில அரசின் உரிய அதிகாரிகளிடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வட்டி ரத்து சலுகையைப் பெற கல்விக் கடன் பெற்ற வங்கிக் கிளையின் அதிகாரிகளை மாணவர்கள் அணுகி விண்ணப்பம் அளிக்கலாம்.

No comments:

Post a Comment