நோய்கள் அதிகரிக்க அதிகரிக்க மருத்துவ உலகமும் உலகின் பல்வேறு பாகங்களில் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளைச் செய்து புதுப்புது நோய்களையும் புதுப்புது மருந்துகளையும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. எல்.கே.ஜி. வகுப்பில் குழந்தைகளுக்கு ஏ.பி.சி.டி.இ என்று வரிசையாக சொல்லிக் கொடுப்பதைப்போல உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகளுக்கும் ஏ.பி.சி.டி.இ. என்று வரிசையாக பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதில் நான்காவதாக உள்ள வைட்டமின் `டி'யைப் பற்றிய விழிப்புணர்வு மருத்துவ உலகில் சமீப காலமாக அதிகமாகி வருகிறது. உடலின் பல்வேறு இடங்களில் ஏற்படும் பல்வேறு விதமான புற்று நோய்களிலிருந்து உடலைக் காப்பதிலும், சர்க்கரை வியாதி, இதயநோய், மல்டிபிள் ஸ்கிலிரோஸிஸ் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களின் மூலமாக ஏற்படவிருக்கும் ஆபத்துகளைக் குறைப்பதிலும் வைட்டமின் `டி` மிக மிக முக்கியமானதாக இருப்பதாக சமீப கால ஆய்வுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மனிதன் ஆரோக்கியமாக வாழ அளவான உணவு, போதுமான வைட்டமின்கள் சத்து மற்றும் தேகப்பயிற்சி ஆகியவை மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பால், மீன் எண்ணெய், முட்டை, ஈரல், இறைச்சி, கொழுப்பு, தானியங்கள் ஆகியவற்றில் இயற்கையாகவே வைட்டமின் `டி' சத்து மிகக்குறைவான அளவில் உள்ளது. நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுப் பொருட்களில் வைட்டமின் `டி' சேர்க்கப்படுகிறது.
உணவுப் பொருட்களில் வைட்டமின் `டி'யைச் சேர்ப்பது வெளிநாடுகளில் ரொம்ப அதிகம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் சுமார் 250 மில்லி லிட்டர் பாலில் சுமார் 100 யூனிட் வைட்டமின் `டி' ஏற்கனவே இயற்கையாக இருக்கிறது. இதுபோக ஒரு குறிப்பிட்ட அளவு வைட்டமின் `டி' யும் சேர்க்கப்படுகிறது. 100 கிராம் சால்மன் மீனில் சுமார் 600 யூனிட் வைட்டமின் `டி' இருக்கும்.
சுமார் 1000 யூனிட் முதல் சுமார் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு வைட்டமின் `டி' தேவை என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். மல்டி வைட்டமின் மாத்திரையை உட்கொண்டால் சுமார் 400 யூனிட் வைட்டமின் `டி' கிடைக்கும். நமது உடலிலுள்ள பற்களும், எலும்புகளும் உறுதியாக இருக்க வைட்டமின் `டி' முக்கியத் தேவை.
வைட்டமின் உடலில் இருக்க வேண்டிய அளவை விட மிகமிகக் குறைவாக இருந்தால் `ரிக்கெட்ஸ்' என்று சொல்லக்கூடிய வியாதியும், ஆஸ்டியோ மலேசியா என்னும் வியாதியும் ஏற்படும். மேற்கூறிய இந்த இரண்டு நோயிலும் நம் உடலிலுள்ள எலும்புகள் மிக ஸ்டிராங்காக, மிக சக்தியாக, மிகப் பலமாக இரும்பு போல் இருப்பதற்குப் பதிலாக மிகமிக மென்மையாக, மிக மிக மிருதுவாக, லேசாக அடிபட்டால் கூட ரொம்ப ஈசியாக உடைந்து போகக்கூடிய தன்மையில் இருக்கும்.
எனவே மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வைட்டமின் `டி' நம் உடலில் இருக்க வேண்டிய அளவை விட குறைவாக இருந்தால் என்னென்ன பாதிப்புகளை உண்டு பண்ணுகிறது என்று பார்ப்போம். வைட்டமின் `டி' குறைவாக இருந்தால் சர்க்கரை வியாதி அதிகமாகி கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது.
ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஒரு மடங்கு என்றால் மிகவும் குண்டாக இருப்பவர்களுக்கு வைட்டமின் `டி' இரண்டு மடங்கு தேவைப்படுகிறது. சோரியாசிஸ் என்று சொல்லக்கூடிய சரும நோய்க்கு சிறந்த மருந்தாக வைட்டமின் `டி' உலகம் முழுவதும் உபயோகப்படுத்தப்படுகிறது. உடல் முழுக்க தசைவலி, தசைகள் தளர்வாக இருத்தல், உடம்பு வலி இவை எல்லாமே நாள்பட்ட வைட்டமின் `டி' சத்துக் குறைவினால் ஏற்படுகிறது.
வைட்டமின் `டி' உடலில் குறைவாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. வைட்டமின் `டி' உடலில் போதுமான அளவு இருந்தால் முக்கால்வாசி நோய் வராமல் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை மேலே கூறியதை படிக்கும்போதே நீங்கள் உணரலாம். ஆனால் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் வைட்டமின் `டி' மிகக்குறைவான அளவுதான் இருப்பதாகச் சொல்கிறீர்கள்.
ஒரு டம்ளர் (250 மில்லி) பாலில் 100 யூனிட்தான் வைட்டமின் `டி' இருக்கிறது என்கிறீர்கள். பத்து பெரிய டம்ளரில் பால் குடித்தால் கூட ஒரு நாளைக்கு மனிதனுக்குத் தேவையான வைட்டமின் `டி' கிடைக்காது போல் தெரிகிறது. பின் எப்படித்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் `டி' கிடைக்கும் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.
ஒரு காசு கூட செலவழிக்காமல் உலகிலேயே மிகவும் மலிவாகக் கிடைக்கக்கூடிய ஒரே ஒரு வைட்டமின் `டி' மட்டும் தான். உங்கள் உடம்பில் சூரிய ஒளி அதாவது வெயில் பட்டாலே உங்கள் உடம்பு வைட்டமின் `டி'யை உருவாக்க ஆரம்பித்து விடுகிறது. வைட்டமின் `டி' சூரிய ஒளி மூலமாக உடலில் உருவாகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் வைட்டமின் `டி' உருவாக தேவையான சூரிய ஒளியை டப்பாவில் பிடித்து விற்க முடியாது.
அதனால் வைட்டமின் `டி'யைப் பற்றிய விளம்பரங்கள் கிடையாது. அதனால் தான் மக்களுக்கும் வைட்டமின் `டி'யைப் பற்றித் தெரியவில்லை. வைட்டமின் `டி' இயற்கையாகக் கிடைக்க மிகச்சிறந்த வழி `சூரியஒளி' மட்டுமே. உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் மூலாதாரமே சூரிய ஒளிதான்.
இயற்கையான, மிக சக்தி வாய்ந்த, மிகவும் பயனுள்ள சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதே நாம் தட்டிக் கழிக்கும் வைட்டமின் `டி' நமது உடலுக்கு கிடைப்பதற்காகவே! மாலை நேரத்தில் ஒருமுறை டெல்லியிலிருந்து என்னோடு விமானத்தில் வந்த நண்பரொருவர் விமானத்தின் ஜன்னல் வழியாக வரும் வெயிலில் தனது கைகள் இரண்டையும் காண்பித்துக் கொண்டே வந்தார்.
என்ன செய்கிறீர்கள்? என்று நான் கேட்டேன். `மாலை வெயில் உடலுக்கு நல்லது. அதனால் தான் ஜன்னல் வழியாக வரும் வெயிலில் எனது கைகளைக் காண்பித்து கொண்டு இருக்கிறேன்' என்றார். "மாலை வெயில் மென்மையானது, மிதமானது. அதிலும் கண்ணாடி வழியாக வரும் வெயில் மிக மிக மிதமானது.
இதனால் உடலுக்கு எந்தவித பயனும் இல்லை. நேரடியாக வெயிலில் நின்றால்தான் உடலில் வைட்டமின் `டி' சத்து சேரும்'' என்று நான் சொன்னேன். அவரும் "அப்படியா?'' என்று ஆச்சரியத்தோடு கேட்டதோடு "இனி நேரடியாக மாலை வெயிலில் உலவி உடலுக்கு பலம் சேர்க்கிறேன்'' என்று சொன்னார். நீங்களும் சிறிது நேரம் இளம் வெயிலில் உலவி `வைட்டமின் டி'யை இலவசமாக உடலில் ஏற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி: மாலைமலர்
No comments:
Post a Comment