Friday, October 7, 2011

செல்ஃபோன் இரகசியங்கள்! (Secrets of Cell phones)


இன்று பெரும் தொழிலதிபர்கள் முதல் பூக்காரப் பெண்மணி வரை அனைவர் கையிலும் செல்போன் புழங்குகிறது. எல்லோருமே அதில் டாக்டர் பட்டம் பெறுமளவுக்கு எந்நேரமும் குடைந்துகொண்டே இருக்கிறார்கள் தொலைத்தொடர்பு மட்டுமின்றி, மியூசிக் பிளேயர், காமிரா, டார்ச், காலண்டர் என்று ஒரு கையடக்கத் தோழனாக செல்போன் உதவுகிறது. 

செல்போன் இன்றி இனி எவராலும் இயங்க முடியாது. அதன் பல்வேறு அம்சங்கள், பயன்பாடுகள் பற்றி அனைவரும் அறிந்தும் இருக்கிறார்கள். ஆனால் அறிய வேண்டிய அத்தியாவசிய அம்சங்களை அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி.  அவை பற்றி...

உயிர்காப்பான்

முதலாவதாக, அவசரநிலைகளில் செல்போன் ஓர் உயிர்காப்பானாகப் பயன்படும் என்பது பலருக்குத் தெரியாது. அதாவது, செல்போன்களுக்கு என்று உலகளாவிய ஒரு அவசரநிலை எண் இருக்கிறது. அது, 112.

இக்கட்டான நிலையில், உங்களுக்குச் சேவையை வழங்கும் நிறுவனத்தின் `நெட் ஒர்க்' கிடைக்காத இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களால் வெளியிடங்களுக்குத் தொடர்புகொள்ள முடியாது. ஆனால் இந்த அவசரநிலை எண்களை அழுத்தும்போது, வேறு ஏதாவது செல்போன் சேவை நிறுவத்தின் `நெட் ஒர்க்' இருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபிடிக்கும். அதன்மூலம் வெளியே `எமர்ஜென்சி' தகவலை அனுப்பும். `கீ பேட்' லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த எண்ணை அழுத்த முடியும் என்பது ஆச்சரியமான விஷயம்.

`ரிசர்வ் சார்ஜ்'

இன்று பெரும்பாலானவர்கள், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட `ஸ்மார்ட் போன்களை' பயன்படுத்துகிறார்கள். கூடுதல் வசதிகளைப் பயன்படுத்துவதன் காரணமாகவே இத்தகைய செல்போன்களில் சீக்கிரமே `சார்ஜ்' தீர்ந்துவிடுகிறது. செல்போன்களில் `ரிசர்வ் சார்ஜ்' என்ற ஒன்று இருப்பது நிறையப் பேருக்குத் தெரியாது. அது, பேட்டரியின் உண்மையான மின் சேமிப்புத் திறனில் 50 சதவீதமாகும்.

இந்த `ரிசர்வ் சார்ஜை' பயன்படுத்துவதற்கு நாம், *3370# என்ற `கீ'க்களை அழுத்த வேண்டும். இந்த வகையில் அழுத்தியவுடனே, `சார்ஜ்' இன்றி முடங்கிய செல்போன் உயிர்ப்பெறும். 50 சதவீத பேட்டரி சார்ஜை காட்டும். அடுத்த முறை நீங்கள் செல்போனை `சார்ஜ்' செய்யும்போது இந்த `ரிசர்வ்' இருப்பு, சார்ஜ் ஆகிக்கொள்ளும்.

தொலைந்துபோனால்...

செல்போன் தொலைந்துபோனாலோ, திருட்டுப் போனாலோ அதை முறைப்படி `பிளாக்' செய்யவோ, மீட்கவோ வழியிருக்கிறது. இது பற்றிச் சிலர் அறிந்திருப்பார்கள் என்றாலும், முழுமையாகப் பார்க்கலாம்-

ஒவ்வொரு செல்போனுக்கு ஒரு வரிசை எண் உள்ளது. ஐ.எம்.ஈ.ஐ. எண் என்ற அது, ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தன்மையானது ஆகும்.

உங்கள் செல்போனின் ஐ.எம்.ஈ.ஐ. எண்ணை அறிய, *#06# என்ற `கீ'க்களை அழுத்துங்கள். உடனே செல்போன் திரையில் ஒரு 15 இலக்க எண் தோன்றும். இந்த ஐ.எம்.ஈ.ஐ. எண், ஒவ்வொரு செல்போனுக்கும் வேறுபடும். இந்த எண்ணைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் செல்போன் தொலைந்துபோனாலோ, திருட்டுப்போனாலோ உங்களுக்கு செல்போன் சேவையை அளிக்கும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு இந்த எண்ணைக் கொடுங்கள். அவர்கள் உடனே குறிப்பிட்ட செல்போனை `பிளாக்' செய்வார்கள். செல்போனை யாராவது திருடி அதன் `சிம்கார்டை' மாற்றி னாலும் அவர்களால் முற்றிலுமாக செல்போனை பயன்படுத்த முடியாமல் போகும்.

நன்றி: உங்களுக்காக

No comments:

Post a Comment