லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர், ஏகாதிபத்திய எண்ணெய் முதலாளிகளின் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்ட போர் என்பதையும், ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் எண்ணெய் முதலாளிகளின் பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்பதையும் போருக்கு முன்பாக நடந்துள்ள நிகழ்ச்சிகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.
Home
- Home
- மாஸலாமா
- ஒளரங்கசீப்
- மாவீரன் ஹைதர் அலி
- மாவீரன் திப்புசுல்தான்
- கர்னல் சவுகத் ஹயாத்
- பழனிபாபா பதில்
- அப்சல் குரு .....
- அப்சல் குரு - நேர்காணல்
- இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad).
- காந்திஜி vs கோட்சே
- மோடியை பற்றி கட்ஜூ
- மாவீரன் ஹேமந்த் கார்கரே
- காவி (தரித்த) பயங்கரவாதம்
- இந்தியாவின் மனசாட்சி கட்ஜூ!
- அப்துல் ஹபீப் யூசப் மர்பாணி
- மாவீரன் (மருத நாயகம்) யூசுப்கான் சாஹிப்
- குஜராத் படுகொலை - நிஜங்கள்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- சிராஜ்-உத்-தௌலா
Monday, October 31, 2011
Wednesday, October 26, 2011
இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்
இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது. எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.
Sunday, October 23, 2011
சொந்த வீடு Vs வாடகை வீடு
'இக்கரைக்கு அக்கரை பச்சை’ கதைதான் சொந்த வீடும், வாடகை வீடும்! வாடகை வீட்டில் இருப்பவர்கள், 'பேசாமல் கடனை வாங்கிச் சொந்தமாக வீடு கட்டிவிட்டால் எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாமே’ என்று நினைக்கிறார்கள். அதுவே, சொந்த வீட்டில் குடியிருப்பவராக இருந்தால், 'வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி மாளவில்லையே; பேசாமல் வாடகை வீட்டிலேயே இருந்திருக்கலாம்’ என்று நினைக்கிறார்கள்!
பணம் பாதாளம் பாய்ந்த பஞ்சாயத் எலெக்சன் !
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததும் மகாத்மா காந்தி, 'அரசியல் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, மாறாக பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும்' என்றார். அவர் கனவு கண்டது சிலர் சொல்வதுபோல ராம ராஜ்யமில்லை, மாறாக கிராம ராஜ்யம் பெற வேண்டும் என்றார். அதாவது கிராமம் தன்னிலை அடைய வேண்டும் என்றார். செல்வம் ஒரு சிலரிடமே பிரமீடு போன்று குவியாது, கடல் போன்று பறந்து அனைவரும் பலன் பெற வேண்டும். இஸ்லாத்திலும் வறியவர் மேன்மைப்பட சொத்து வரி என்ற சக்காத், சதகா, பித்ரா போன்ற பொருளாதார உதவிகள் செல்வந்தர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. மகாத்மா கூட கலிபா ஓமர் போல ஜனநாயக நல்லாட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததும் மகாத்மா காந்தி, 'அரசியல் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, மாறாக பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும்' என்றார். அவர் கனவு கண்டது சிலர் சொல்வதுபோல ராம ராஜ்யமில்லை, மாறாக கிராம ராஜ்யம் பெற வேண்டும் என்றார். அதாவது கிராமம் தன்னிலை அடைய வேண்டும் என்றார். செல்வம் ஒரு சிலரிடமே பிரமீடு போன்று குவியாது, கடல் போன்று பறந்து அனைவரும் பலன் பெற வேண்டும். இஸ்லாத்திலும் வறியவர் மேன்மைப்பட சொத்து வரி என்ற சக்காத், சதகா, பித்ரா போன்ற பொருளாதார உதவிகள் செல்வந்தர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. மகாத்மா கூட கலிபா ஓமர் போல ஜனநாயக நல்லாட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
Monday, October 17, 2011
குழந்தைகளுக்கு ஒரே ஊசியில் 5 தடுப்பு மருந்துகள்:தமிழகத்தில் அறிமுகம்
ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகளை கொண்ட, "பெண்டாவேலன்ட் வேக்சின்' குழந்தைகளுக்கான தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த, 5 மருந்துகளைக் கொண்ட தடுப்பூசி வரும் நவம்பர் முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.இந்த பெண்டா தடுப்பூசியில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, ஹெப்படைட்டீஸ் பி மஞ்சள் காமாலை மற்றும் "ஹிப்' (Haemophilus influenzea&)- மூளைக் காய்ச்சல், நிமோனியாவுக்கான தடுப்பு மருந்து) ஆகிய, 5 தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அடங்கியிருக்கும்.
சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: பட்டா அவசியம்.
பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
சமீப கால செய்திகளில் அதிகமாக அடிபடுவது காதல் மற்றும் காமம் பற்றிய செய்திகள் தான். ஆண் , பெண் பழகும் இடங்களான கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள், குடும்பத்தினைப் பிரிந்து வாழும் விடுதிகள் இளம் சிட்டுகள், தங்களுக்குக் கிடைக்கும் இனக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு, வரட்டுத் துணிச்சலுடன் திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்குப் பின்போ கற்பினை இழக்கும் சோகக் கதையினை நாள் தோறும் வந்த வண்ணம் இருகின்றது. ஆரம்பத்தில் காதலில் ஊஞ்சலாடும் உள்ளம் காதல் தடம் புரண்டு மானம் கப்பலேறுவது அவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக அவர்கள் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது என்று அவர்கள் ஆரம்பத்தில் உணருவதில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போனபின்பு தான் கண்ணை மறைத்திருந்த காதல் பித்து தெளிவடைகிறது.
Friday, October 14, 2011
வைட்டமின் "டி" யின் அவசியம்!
நோய்கள் அதிகரிக்க அதிகரிக்க மருத்துவ உலகமும் உலகின் பல்வேறு பாகங்களில் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளைச் செய்து புதுப்புது நோய்களையும் புதுப்புது மருந்துகளையும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. எல்.கே.ஜி. வகுப்பில் குழந்தைகளுக்கு ஏ.பி.சி.டி.இ என்று வரிசையாக சொல்லிக் கொடுப்பதைப்போல உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகளுக்கும் ஏ.பி.சி.டி.இ. என்று வரிசையாக பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன.
முதுமையை வெல்லும் ஸ்டெம் செல் (Stem cell) சிகிச்சை!
என்றும் பதினாறாக இருக்க எல்லாருக்கும் ஆசைதான். ஆனால் வயதாக வயதாக உடலின் ஒவ்வோர் உறுப்புகளும் நலிவடைகின்றன. எலும்புகள் தேய்ந்து போகின்றன. கண் பார்வை குறைந்து கொண்டே போகிறது. காது கேட்காமல் போகிறது. சர்க்கரை வியாதி, இதய நோய், புற்றுநோய் என்று நிறைய நோய்கள் வந்து உடலைப் படாதபாடு படுத்துகின்றன. இவற்றிலிருந்து மனிதன் மீள முடியுமா? முதுமையை வெல்ல முடியுமா? என்று கேட்டவுடனேயே, "முடியாது' என்பதுதான் எல்லாருடைய பதிலாகவும் இருக்கிறது.
வலையில் தொடங்கி கொலையில் முடிந்த காதல்......!
தன் காதல் மனைவி கலாச்சார சீரழிவில் சிக்கி தனக்குத் துரோகம் செய்த விவரங்களை, மனைவியைக் கொன்ற வாலிபர் மகேஷ்குமார் தற்கொலை செய்யும் முன்னர் காவல்துறைக்கு விவரமாக எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கேரளாவிலுள்ள மூணாறு விடுதி ஒன்றில் சமீபத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அவ்விடுதியில் அறை எடுத்திருந்த அவளுடைய கணவனே கொலை செய்து விட்டுத் தலைமறைவானதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
Friday, October 7, 2011
உருளைக்கிழங்கை (potato) பற்றிய உண்மைகள்!
உருளைக்கிழங்கு என்று சொன்னாலே நம்மில் பலருக்கு ஞாபகம் வருவது மொறுமொறு சிப்ஸ். நொறுக்குத்தீனிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள், இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. அதேநேரத்தில் உருளைக்கிழங்கு என்றாலே, `ஐயோ' என்று அலறுபவர்களும் உண்டு. கேஸ் டிரபிள், உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சனைகளை நினைத்து உருளைக்கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.
தாம்பத்திய வாழ்க்கையை குலைக்கும் தைராய்டு! (Thyroid)
மனித உடலில் நாளமில்லா சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஹார்மோன்களை உற்பத்தி செய்து அதை உடலில் உள்ள செல்களுக்கு செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொண்டை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி. இது சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும்.
செல்ஃபோன் இரகசியங்கள்! (Secrets of Cell phones)
"வாழைத்தண்டு" சிறுநீரக கல்லுக்கு சிறந்த மருந்து!
பாஸ்ட் புட்' கலாசாரத்திற்கு மாறிவிட்ட இன்றைய மனிதர்கள் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதன்விளைவு... சிறுநீரக சம்பந்தப்பட்ட பல நோய்களின் வருகை அதிகரித்து விட்டது. பொதுவாக சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. அதில் ஒன்று... சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது.
Subscribe to:
Posts (Atom)