
Home
- Home
- மாஸலாமா
- ஒளரங்கசீப்
- மாவீரன் ஹைதர் அலி
- மாவீரன் திப்புசுல்தான்
- கர்னல் சவுகத் ஹயாத்
- பழனிபாபா பதில்
- அப்சல் குரு .....
- அப்சல் குரு - நேர்காணல்
- இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad).
- காந்திஜி vs கோட்சே
- மோடியை பற்றி கட்ஜூ
- மாவீரன் ஹேமந்த் கார்கரே
- காவி (தரித்த) பயங்கரவாதம்
- இந்தியாவின் மனசாட்சி கட்ஜூ!
- அப்துல் ஹபீப் யூசப் மர்பாணி
- மாவீரன் (மருத நாயகம்) யூசுப்கான் சாஹிப்
- குஜராத் படுகொலை - நிஜங்கள்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- சிராஜ்-உத்-தௌலா
Friday, December 30, 2011
இந்திய ராணுவம் காஷ்மீரில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள விவகாரம்! விக்கிலீக்ஸ்

புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் எப்போது எங்கு தொடங்கியது ?
கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆஸ்திரேலியா நாட்டவர்கள்தான் முதன் முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர். 1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியது. இதையடுத்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.
Thursday, December 29, 2011
புதுவருட(2012) கொண்டாட்டங்கள் தேவையா?
இந்திய கலாச்சாரம் உலகத்திற்கே முன்னோடி கலாச்சாரம் என்ற பெயர் பெற்றது. தனி மனித ஒழுக்கங்களை வழியுறுத்தும் தத்துவங்கள் மதங்கள் சார்ந்த கொள்கைகள் போன்றவை அப்படிப்பட்ட தோற்றத்தை இந்த உலகிற்கு நமது கலாச்சாரப் பெருமையை எடுத்துச் சென்றது எனலாம். ஆனால் சில வருடங்காக இந்தியா மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. அரசியல், பொருளாதாரம், தொழிற்நுட்பம் போன்றவற்றைத் தாண்டி பல்வேறு சமுக மாற்றங்களைப் பெறத் துவங்கிவிட்டது. மேற்கத்திய நாடுகள் மீது நம் மக்களுக்கு உள்ள மோகம் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை எல்லாம் மறந்து மேலை நாட்டுக் கலாச்சரத்தை நோக்கி பயணித்து அதில் பல சாதனைகளையும்(?) பெற்றுள்ளது. அதில் முக்கியமானதொரு சாதனை(!)யாக சுமார் 24 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகளைப் பெற்று, எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது நாடு என்ற பெருமையை(?) இந்தியா பெற்றுள்ளது.
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து! இதயம், மூளையை தாக்கும் கிருமிகள்..
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 45 வயது வெள்ளைக்கண்ணு, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ரியாத்தில் ஏழு ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊருக்கு வந்த அன்று ஆரம்பித்த காய்ச்சல், தொடர்ந்து ஒன்பது மாதங்களாக விடவில்லை. காய்ச்சலுக்காக அருகிலிருந்த டாக்டர்களிடம் மாற்றி மாற்றி மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் விட்டபாடில்லை.
Friday, December 23, 2011
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் உள்ள 567 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் (புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம்) உள்ள 567 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் கீழ் 400இளநிலை எழுத்தர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
புதுச்சேரி அரசின் கணக்குகள் மற்றும் கருவூலத்துறையின் கீழ் 115 பண்டகக் காப்பாளர்கள் - கிரேடு 3 நிலையில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
புதுச்சேரி அரசின் கணக்குகள் மற்றும் கருவூலத்துறையின் கீழ் 115 பண்டகக் காப்பாளர்கள் - கிரேடு 3 நிலையில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
நீதித்துறையில் இளநிலை எழுத்தர் 28 பணியிடங்களும், 24 தட்டச்சர் பணியிடங்களும் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் பொது போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படஉள்ளன.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :
வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ் [Christmas] ஒரு பார்வை…
கிறிஸ்மஸின் தோற்றம் ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the Encyclopedia Americana – கூறுகின்றது.
குங்குமப்பூவின் (Saffron) அதிசயமிக்க மருத்துவ குணங்கள்....!
ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே. இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.
மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்தும் மீடியாக்கள்! நீதிபதி கட்ஜூ ஆவேசம்
கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டீவி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?
மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.
= உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?
நிச்சயமாக இல்லை.
= உண்மையாகவா சொல்கிறீர்கள்?
மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.
= உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?
நிச்சயமாக இல்லை.
= உண்மையாகவா சொல்கிறீர்கள்?
பத்திரிகைத்துறையை விமர்சித்து நீதிபதி கட்ஜு கூறியதில் என்ன தவறு?
ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு இந்திய ஊடகத் துறையை அதிலும் குறிப்பாக பத்திரிகைத்துறையை குறித்து வெளியிட்ட கருத்துக்கள் ஊடகத்துறையின் ஒரு சாராரை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்ஜு அரசு ஏஜண்டு என்று கூட விமர்சிக்கும் சில மூத்த பத்திரிகை விமர்சகர்கள் அவர் கூறிய முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை புறக்கணிக்கவோ அல்லது உண்மை தெளிவாக தெரிந்த பிறகும் அதனை கண்டும் காணாதது போல் நடிக்கவோ செய்கின்றனர்.
Thursday, December 22, 2011
புதுவை (அமலோற்பவம்) பள்ளியில் "படம் பார்த்துப் பாடம் படி" !
''ஹோம் வொர்க் செய்யலைனு சார் அடிப்பாரும்மா!''
''கணக்குப் போடலைன்னா மிஸ் திட்டுவாங்கம்மா!''
''நான் இன்னிக்கு ஸ்கூல் போகலைம்மா!''
''கணக்குப் போடலைன்னா மிஸ் திட்டுவாங்கம்மா!''
''நான் இன்னிக்கு ஸ்கூல் போகலைம்மா!''
காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்குக் அனுப்பும்போது, பெரும்பாலான வீடுகளில் இப்படியான குரல்களைக் கேட்கலாம். ஆனால், புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்களிடம் இருந்து இப்படியான வார்த்தைகள் வராது. காரணம், பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு என்று பிரத்யேகமாக ஒளிபரப்பாகும் 'அமல் விஷன்’ கேபிள் நெட்வொர்க்தான்!
ஆன்லைனில் - WINDOWS SKY DRIVE - 25GB சேமிப்பகம் இலவசம்!
கணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற Cloud Computing முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும்.
How to learn? எளிமையாக படிக்கும் முறை!!

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!...
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது
நிடாகத் விழிப்புணர்வு முகாம் (Nitaqat Awareness Program)
சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் அந்நாட்டின் மைந்தர்களை குறிப்பிட்ட சதவிகிதம் வேலைக்கு அமர்த்த கட்டாயப்படுத்தும் சட்டமே "நிடாகத் திட்டம்" சவூதிஅரேபியாவின் தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டம் கடந்த 26-11-2011 முதல் கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெருகி வரும் தனது நாட்டு மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழிலாளர் மற்றும் சமூக நல விவகார அமைச்சர் ஆதில் ஃபக்கிஹ் அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.
மருந்து மாத்திரை வாங்குகிறீர்களா... எச்சரிக்கை!
மருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.
1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!
1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!
தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன... கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!
Note book...... Net book...... வரிசையில் Ultra book computers....
இந்த ஆண்டின் இறுதிவரை டேப்ளட் பிசிக்கள் குறித்து அதிகம் பேசப்பட்டாலும், வரும் 2012 ஆம் ஆண்டு அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்கள் தான் பிரபலமாகும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அல்ட்ராபுக் என்பது என்ன? முன்பே ஒருமுறை இது குறித்து நாம் தகவல்களைத் தந்திருந்தோம். இன்டெல் நிறுவனம் இந்த பெயரைத் தந்து இதற்கு அதிக விளம்பரம் அளித்தது. இது ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர்; ஆனால் அதன் அம்சங்கள் கீழே தந்துள்ளபடி இருக்கும்.
Wednesday, December 21, 2011
ஒரு பெண்... ஓராயிரம் பொய்கள்! அனுஷ்கா என்ற அபிநயா பிடிபட்ட கதை
மதிய நேரத்தில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பலரையும் ஸ்தம்பிக்கவைத்தது, ஓர் இளம் பெண்ணின் அபயக் குரல். 'என்னைக் காப்பாத்துங்க... பணக்காரப் பையன் ஒருத்தன் என்னை ஏமாத்திக் கர்ப்பமாக்கிட்டு கல்யாணம் பண்ணிக்காம ஏமாத்திட்டான். போலீஸ்ல புகார் செஞ்சேன். ஆனா, போலீஸ் என் மேல பொய் கேஸ் போட்டிருச்சு... எனக்கு யாராச்சும் உதவி பண்ணுங்க...' என்று உச்சஸ்தாதியில் கத்தி அழுது புரண்டார்.உடனே நீதிமன்றத்தில் இருந்த வழக்கறி ஞர்கள் ஓன்று கூடி அந்தப் பெண்ணை மீட்கும் முயற்சியில் இறங்க, 'இந்தப் பெண் சொல்றது எல்லாமே பொய்... நம்பாதீங்க’ என்று பெண் போலீஸார் எடுத்துச் சொல்லி விரட்டினார்கள். கடந்த 16-ம் தேதி நடந்த சம்பவம் இது! யார் அந்தப் பெண்? அவருக்கு என்ன சிக்கல்?
வீட்டுக்குள்ளே பரவும் விஷக் கலாசாரம்!
சென்னை: எப்போதும் வெறிச்சோடிக்கிடக்கும் வெங்கடா சலம் நகர். 141-ம் வீட்டுக் கதவைத் தட்டுகிறார் கள் கட்டுமஸ்தான வாலிபர்கள் இருவர். கதவைத் திறந்த யாஸ்மின் முகத்தில் 1,000 வாட்ஸ் மகிழ்ச்சி. சிரித்த முகத்துடன் அந்த வாலிபர்களை உள்ளே அழைத்து கதவைச் சாத்துகிறார். அடுத்த கணமே அந்த வாலிபர்கள், யாஸ்மினை முரட்டுத்தனமாகத் தாக்கி, திடுமெனக் கத்தியால் குத்திச் சாய்க்க... அதிர்ச்சி விலகாமலே உயிர் விடுகிறார் யாஸ்மின். வீட்டில் இருந்த நகை, பணம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, பின் வாசல் வழியே சாவகாசமாக இருவரும் தப்பிச் செல்கிறார்கள்.
20 வருடமாக அதிமுக வை ஆட்டிப்படைத்த "அந்த" 14 பேர் ..
எம்என் எனப்படும் நடராஜன்: இந்த குருப்பின் தலைவராக முதலில் இருந்தவர் எம்.நடராஜன். இவருக்கு அதிமுக வட்டாரத்தில் முன்பு எம்என் என்றுதான் செல்லப் பெயர். பலர் எமன் என்றும் கூட மகா செல்லமாக அழைப்பதுண்டு. அந்த அளவுக்கு அதிமுகவை ஆட்டிப் படைத்தவர் நடராஜன் ஒரு காலத்தில். இவர் ஆரம்பத்தில் மாவட்ட செய்தித் தொடர்பு அலுவலராக இருந்தார். அப்போதுதான் கலெக்டராக இருந்த சந்திரலேகாவுடன் நட்பு ஏற்பட்டு அவர் மூலம் தனது மனைவி சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் நடராஜன்.
டென்ஷன்........ Tension..... டென்ஷன்...!!
- குறிப்பிட்ட காலத்திற்குள் நினைத்த வேலை முடியாவிட்டால் டென்ஷன்.
- போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் டென்ஷன்.
- காலையில் விழித்ததும் வீட்டு வேலைக்கு வேலைக்காரி வரவில்லை என்றல் டென்ஷன்.
- சீரியல் பார்க்கும் நேரம் மின்சாரம் தடைபட்டால் டென்ஷன்.
- தனக்கு பின்னால் வந்தவனுக்கு பதவி உயர்வு கிடைத்துவிட்டால் டென்ஷன்.
- ஏன் கூப்பிட்ட குரலுக்கு நாய்க்குட்டி வரவில்லையானால் கூட டென்ஷன்.
எங்கும், எப்போதும், எதற்கும் பதற்றம் என்பதால் இப்போது சிறுவர்- சிறுமியர்கள்கூட டென்ஷன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
- போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் டென்ஷன்.
- காலையில் விழித்ததும் வீட்டு வேலைக்கு வேலைக்காரி வரவில்லை என்றல் டென்ஷன்.
- சீரியல் பார்க்கும் நேரம் மின்சாரம் தடைபட்டால் டென்ஷன்.
- தனக்கு பின்னால் வந்தவனுக்கு பதவி உயர்வு கிடைத்துவிட்டால் டென்ஷன்.
- ஏன் கூப்பிட்ட குரலுக்கு நாய்க்குட்டி வரவில்லையானால் கூட டென்ஷன்.
எங்கும், எப்போதும், எதற்கும் பதற்றம் என்பதால் இப்போது சிறுவர்- சிறுமியர்கள்கூட டென்ஷன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
சசிகலா வெளியேற்றப்பட்ட பின்னணியின் பரபரப்பு தகவல்கள்!
"அதிகார வர்க்கமாக' செயல்பட்ட சசிகலா குடும்பத்தாரின் தடைகளை மீறி, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாத நிலையை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலம், தமிழக உளவுத் துறையினர் தகர்த்து, சசிகலா குடும்பத்தார் கூண்டோடு வெளியேற நடவடிக்கை எடுத்துள்ளனர். அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவையும் மீறி, சசிகலா குடும்பத்தார் ஆதிக்கம் அதிகமானது. அவர்களது ஆதரவாளர்கள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மட்டுமே அதிகாரிகள், அமைச்சர்கள், பொறுப்புகளில் செயல்பட முடியும் என்ற நிலை இருந்தது. உளவுத்துறை தகவல்கள் கூட சசிகலா குடும்பத்தார் நேரடி பார்வைக்குப் பின், "வடிகட்டப்பட்டு' ஜெயலலிதாவை சென்றடையும். அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் செல்லும் தபால், பதிவுத்தபால், போயஸ் கார்டனில் நேரில் பலர் கூட்டமாக சென்று கொடுக்கப்பட்ட மனுக்கள் கூட, ஜெயலலிதா பார்வைக்கு செல்லாது. ஆனால், ஜெயலலிதாவின் கார் வரும் வழியில், வழிமறித்து யார், எந்த மனுக்கொடுத்தாலும், சில மணி நேரத்தில் பலனை வழங்கியது அனைவரும் அறிந்தது.
Tuesday, December 20, 2011
ஃபேஸ்புக் (facebook) மூலம் காதல்மோசடி: ஏமாந்த டாக்டர்களும் என்ஜினீயரும் ...
பேஸ்புக் மூலம் காதலிப்பதாக கூறி திருச்சி தொழில் அதிபரை மிரட்டிய அபிநயா இதேபோல் மேலும் 3 டாக்டர்கள், ஒரு என்ஜினீயரை ஏமாற்றியதும், அதில் என்ஜினீயருடன் அவருக்கு நடந்த திருமணம் பற்றியும் தகவல்கள் அம்பலம் ஆகி உள்ளன. திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது30). இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழில்அதிபர். இவர் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அபிநயா என்கிற அனுஷ்கா (வயது23) என்ற பெண்ணுடன் பேஸ்புக்' மூலம் தனக்கு அறிமுகம் கிடைத்ததாகவும்….
Monday, December 19, 2011
குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், அவ்வினப்படுகொலையின் பொழுது தமது உறவினர்களைப் பறிகொடுத்த வேறு சில முசுலீம்களும் இணைந்து, இவ்வினப்படுகொலை தொடர்பாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது அரசின் சில உயர் அதிகாரிகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வினப்படுகொலையில் மோடி மற்றும் சில உயர் போலீசு அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தது.
Sunday, December 18, 2011
இணைய இணைப்பு (Internet connection) எப்படி இயங்குகிறது?
எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.
Thursday, December 15, 2011
கர்ப்பப்பை புற்றுநோய்! பெண்கள் கவனத்திற்கு....
உடலில் உள்ள அபரிமிதமான செல்கள் தமக்குள் கட்டுப்பாடின்றி பிரிந்து, மீண்டும் வளர்ந்து அருகில் உள்ள திசுக்களில் பரவி, மீண்டும் பிரிந்து வளரும். இச் செயல் புற்று வளருவது போல இருப்பதால், இதை புற்றுநோய் என்பர். இதில் பல வகை உள்ளன. தோல் மற்றும் திசுக்களில் ஏற்படுவது “கார்சினோமா’ கேன்சர். எலும்பு, அதன் மஜ்ஜை, கொழுப்பு, தசை, ரத்தக் குழாய்களில் ஏற்படுவது, “சர்கோமா’. ரத்த அணுக்களை உற்பத்தி செய்து பரப்புவது “லூகேமியா’. நோய் எதிர்ப்பு சக்தி பகுதி செல்களில் ஏற்படுவது “லிம்போன் அன்ட் மையலோமா’ மூளை, முதுகு தண்டில் உள்ள திசுக்களில் ஏற்படும் செல் மாறுதல்கள் நடுநரம்பு மண்டலம், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படுவது “மெலிக்னன்சி’ கேன்சர்.
Wednesday, December 14, 2011
மாரடைப்பு (Heart attack) யாருக்கெல்லாம் வரும்....?
வயது அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. நம் நாட்டில் பிறந்ததினாலேயே ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு, மரபு முறை, மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி போன்ற உணவு மற்றும் தேவையான உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை காரணங்களாக இருக்கலாம். ஆனால் இன்னமும் இவை ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
மாரடைப்பு ஏற்படுவதை எவ்வாறு கண்டறிவது?
மூன்று இரத்தக் குழாய்கள் வழியாக இதயத்திற்கு இரத்தம் செல்கிறது. வயது ஆக ஆக இரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன. அக்குழாய்களுள் கொழுப்பு சேர்வதால் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
Tuesday, December 13, 2011
முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது
ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை (11.04.2011) முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக *"ஃபிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு அரசு தடை விதித்துவிட்டது"* என உண்மை நிலவரம் புரியாமல் செய்திகளைப் பரப்புகின்றனர். அதை நம்பி இஸ்லாமிய மக்களும் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பிக்கக்கூடாது என்பதால் இந்த இடுகை!
Monday, December 12, 2011
கூடங்குளத்தில் பேராபத்து ஏற்பட வாய்ப்பு- விஞ்ஞானி தகவல்!
கூடங்குளத்தில் அணு உலைகளுக்குத் தேவையான தண்ணீர் இல்லை. எனவே, எப்போது வேண்டுமானாலும் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானி வி.டி. பத்மநாபன் கூறினார் அணு உலைகளினால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் மற்றும் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து அணு எதிர்ப்பாளர்கள் களம் சென்னையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஞ்ஞானி பத்மநாபன் கூறியது:
Saturday, December 10, 2011
முல்லைபெரியாறு அணையும் அற்பத்தனமான அரசியலும்
சிவகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் முல்லை ஆறும், சதுரகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் பெரியாறும் ஓர் இடத்தில் கலக்கும் இடத்தில் அணை கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டது. அதுதான், முல்லைப் பெரியாறு அணை. இதற்கு முன்னிலை வகித்தவர் ஆங்கிலப் பொறியாளர் ஜான் பென்னி குக். 1886-ல் சென்னை ராஜதானி கவர்னர் ஹாமில்டன் முன்னிலையில் தமிழகம் மற்றும் கேரளமும் இணைந்து 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
Friday, December 9, 2011
நெல்லையில் கொல்லப்பட்ட ப்ளஸ் டூ மாணவி மைமூன் ஷர்மிளா.
ஈவ் டீசிங்கில் கொல்லப்பட்ட சென்னை மாணவி சரிகாஷாவை மக்கள் யாரும் மறக்க முடியாது. அதே பாணியில் நெல்லையில் கொல்லப்பட்டிருக்கிறார் ப்ளஸ் டூ மாணவி மைமூன் ஷர்மிளா.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையைச் சேர்ந்த செய்யது முகம்மதுவின் மகள் மைமூன் ஷர்மிளா. பதினேழு வயதான இவர், பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார். வகுப்பில் முதல் மாணவியான ஷர்மிளா, கடந்த 5-ம் தேதி மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார்.
அயோத்தி ராமன் அழுகிறான் -கவிப் பேரரசு வைரமுத்து
Thursday, December 8, 2011
முல்லைப் பெரியாறு - உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல்
முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர் மீடியாக்களில், டெல்லியில், அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !
“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும்
எவ்வளவு நாள் தாங்கும் ? தங்கள் இடத்திலேயே தங்கள் செலவிலேயே புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?
இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”
Wednesday, December 7, 2011
பூண்டின் மகத்துவமிக்க மருத்துவ குணங்கள்..!
மனித இனம், நாகரீகம் வளர வளர தன் சுவை தேவைக்காக உணவை பல வகையில் தயாரித்து உண்ண ஆரம்பித்தது. பச்சையாக தின்ற மனிதர்கள், பின் வேகவைத்து உண்டு வந்தனர். இப்படி ஆரம்பித்த உணவு வளர்ச்சி ஒரு கட்டத்தில் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளையே உண்ண ஆரம்பித்தனர். பின் வரும் காலங்களில் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற நிலை வந்தது. இது சித்தர்கள், ஞானிகளின் காலமாகும். இக்காலத்தில் மனிதர்கள் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நம் முன்னோர்களும் மேற்கண்ட நிலையையே கடைப்பிடித்து வந்தனர். ஆனால் நாம் ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்த முறைகளை கைவிட்டு நாவின் சுவையைத் தேட ஆரம்பித்தோம். அதன் பயன் இன்று நோய்கள் பலவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி மருந்து, மாத்திரை என தினமும் பொழுதைக் கழிக்கிறோம்.
Tuesday, December 6, 2011
பாபர் மசூதி இடித்த நாளன்று நிமிடத்துக்கு நிமிடம் நடந்த சம்பவங்கள்
டிசம்பர் 5, 6, 7, 8, (1992) ஆகிய தேதிகளில் அயோத்தியில் நடந்த சம்பவங்கள் குறித்து 'பிரண்ட்லைன்' ஆங்கில இதழில் வெளிவந்த தகவல்களின் தொகுப்பை . இங்கே வழங்குகிறோம்.
டிசம்பர் 5, 1992
காலை 11 மணி: சாமியார்களையும், மகந்த்துகளையும் கொண்ட 'மார்க்தர்ஷத் மண்டில்' எனும் அமைப்பு, திட்டமிட்டபடி 'கரசேவை'யை நடத்த முடிவு செய்தது. கரசேவையில் என்ன செய்யப் போகி றார்கள் என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை.
டிசம்பர் 5, 1992
காலை 11 மணி: சாமியார்களையும், மகந்த்துகளையும் கொண்ட 'மார்க்தர்ஷத் மண்டில்' எனும் அமைப்பு, திட்டமிட்டபடி 'கரசேவை'யை நடத்த முடிவு செய்தது. கரசேவையில் என்ன செய்யப் போகி றார்கள் என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை.
தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிதான்........!
பாபர் மசூதி இடிப்பு அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
சென்னை, டிச. 6- மும்பையில் அண்மையில் 60 மணி நேரத்திற்கு மேல் போராடி தீவிரவாதிகளை அழித்துள்ளனர். இந்த செயலுக்கு உளவுத் துறையின் செயல்பாடு தோல்வி அடைந்து விட்டது என்பதைத்தான் காட்டுகிறது. அதற்காக உள்துறை சார்பில் வருத்தத்தை மன்னிப்பைக் கோருகிறேன் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தீவிரவாதத்தினுடைய ஆணிவேர் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அது வரவேற்கக்கூடிய செய்தியாகும். மத்திய அரசிற்கு ஒரு வேண்டுகோளை இந்த நேரத்திலே வைக்கிறேன்.
சென்னை, டிச. 6- மும்பையில் அண்மையில் 60 மணி நேரத்திற்கு மேல் போராடி தீவிரவாதிகளை அழித்துள்ளனர். இந்த செயலுக்கு உளவுத் துறையின் செயல்பாடு தோல்வி அடைந்து விட்டது என்பதைத்தான் காட்டுகிறது. அதற்காக உள்துறை சார்பில் வருத்தத்தை மன்னிப்பைக் கோருகிறேன் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தீவிரவாதத்தினுடைய ஆணிவேர் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அது வரவேற்கக்கூடிய செய்தியாகும். மத்திய அரசிற்கு ஒரு வேண்டுகோளை இந்த நேரத்திலே வைக்கிறேன்.
Monday, December 5, 2011
மனித மூளை.....பல ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II
வியப்பான தகவல்களுக்கு உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள். சில நாட்களுக்கு முன்பு ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் மருத்துவ பிரிவை (Stanford University School of Medicine) சார்ந்த ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை தெளிவாக ஆராய உபயோகப்படும் ஒரு யுக்தியை பற்றிய ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளனர். இந்த யுக்தியின் மூலம் தெரியவரும் தகவல்கள் படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்து செல்கின்றன. பதிவிற்குள் செல்லும் முன் மூளை சம்பந்தப்பட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகின்றேன்.
Sunday, December 4, 2011
ஆதார் அடையாள அட்டைப் பதிவு - மிக முக்கியம்
அன்புடன் சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரின் கவனத்திற்காக.
இந்திய அரசின், தேசிய தனிச்சிறப்பு அடையாள ஆணையம் சார்பாக ஆதார் என்ற தேசிய அளவிலான அடையாள அட்டைக்கான விபரங்கள் திரட்டும் பணி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியராகிய நாம் ஒவ்வொருவரும் இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது என்பது மிக முக்கியமானதும், தேவையானதுமாகும். வரும் காலங்களில் இந்த ஆதார் அட்டையின் முக்கியத்துவம் மிகவும் தவிர்க்கமுடியாத ஒனறாக இருக்கப்போகிறது என்பது உண்மை. மேற்படி, ஆதார் அட்டைக்கான பதிவுகள் தற்போது நமது மாவட்டத்தில் ஒரே ஒரு அலுவலகத்தில் வைத்து தான் நடைபெற்றுவருகிறது.
இந்திய அரசின், தேசிய தனிச்சிறப்பு அடையாள ஆணையம் சார்பாக ஆதார் என்ற தேசிய அளவிலான அடையாள அட்டைக்கான விபரங்கள் திரட்டும் பணி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியராகிய நாம் ஒவ்வொருவரும் இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது என்பது மிக முக்கியமானதும், தேவையானதுமாகும். வரும் காலங்களில் இந்த ஆதார் அட்டையின் முக்கியத்துவம் மிகவும் தவிர்க்கமுடியாத ஒனறாக இருக்கப்போகிறது என்பது உண்மை. மேற்படி, ஆதார் அட்டைக்கான பதிவுகள் தற்போது நமது மாவட்டத்தில் ஒரே ஒரு அலுவலகத்தில் வைத்து தான் நடைபெற்றுவருகிறது.
Saturday, December 3, 2011
இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸன் - Idly Dosa - Slow Poison
என்ன தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது பெரிய உண்மை. பரோட்டா மைதாவினால் செய்த பன்டம் அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் ஷேர் செய்யபட்ட ஒரு ஆர்டிக்கள். பரோட்டாவது நமது பாரம்பரய உண்வு அல்ல, மற்றும் அதை இளைஞ்ர்கள் தான் உண்ணுவார்கள், ஆனால் இப்பொழுது நமது ஒரு வயது குழந்தை முதல் 80 வயது வயாதனவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு. இது போக பேஷன்ட்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு பேஷன்டுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு இட்லி எனப்படும் வேகவைத்த "ரைஸ் பேன்கேக்".
Subscribe to:
Posts (Atom)