Friday, August 5, 2011

செல்போன் அபாயம்! அதிகரிக்கும் மலட்டுத்தன்மை ..


உலக சுகாதார நிறுவனம், அளவுக்கதிகமாக கைபேசி உபயோகிப்பவர்களுக்கு மூளையில் கட்டி ஏற்படக்கூடும் என்று சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2000- லிருந்து 2004 வரை 5 வருடங்களில் 13 நாடுகளில் கைபேசி உபயோகிக்கும் 12 ஆயிரத்து 800 நபர்களிடம் 8 வித ஆய்வுகள் மேற்கொண்டதில் 6 ஆய்வுகள் அளவுக் கதிகமாக அலைபேசி உபயோகிப்பதற்கும் மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவிக்கிறது. 

அளவுக்கு அதிகமாக அலைபேசியை உப யோகிப்பவர்களில் நூற்றுக்கு 39 பேர் `கிலி யோமா' என்கிற மூளைக்கட்டி நோயால் அவதிப் படுவதாகக் கண்டு பிடித்துள்ளனர் ஆய்வாளர்கள். 10 வருடங்களுக்கு மேல் அலைபேசி உபயோ கிப்பவர்களின் மூளைக்கும் காதிற்கும் இடையி லான மிருதுவான `அகோஸ்டிக் நியூரினோமா' எனப்படும் காதொலி நரம்பு அதிகஅளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று மற்று மோர் ஆய்வு குறிப்பிடுகிறது.

அலைபேசி வெளிவிடும் மின்காந்த கதிர்வீச்சினால் புத்தி பேதலிக்கும் மூளைக்காய்ச்சல், காது செவிடா கும் தன்மை, உமிழ்நீர் சுரப்பிகளில் கட்டி, விந்து உற்பத்தி குறைதல், இயல்பிற்கு மாறான இருதயத்துடிப்பு, புற்றுநோய் போன்றவை ஏற் படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதையும் இந்த ஆய்வு வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

டில்லியிலுள்ள மூல்சந்த் மருத்துவ நிறுவனத்தின் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் விக்ரம் சிங் இதுபற்றி கூறும்போது, `நமது மூளையில் மின்சார ஓட்டம் உள்ளது. அலைபேசியில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு மூளையின் மின்னோட்டத்தைப் பாதிக்கிறது'' தொடர்ந்து 20 நிமிடம் செல்போனில் பேசினாலே நமது உடம்பின் வெப்பநிலை 1 டிகிரி அதிகரிக்கும் அபாயம் உள்ளது!'' என்கிறார்,

"2003-ல் தான் அலைபேசி சாம்ராஜ்யம் உருவானது. தற்போது என்னிடம் வரும் குழந்தையில்லா மலட்டுத்தன்மையுள்ள தம்பதியர்களை ஆய்வுசெய்ததில் நூற்றுக்கு 40 பேர்ஆண்களே மலட்டுத்தன்மையுடன் காணப்படுகின்றனர். இதற்கு அலைபேசி வெளி விடும் மின்காந்த கதிர்வீச்சும் முக்கியக் காரணியாக அமைந்துள்ளது..!'' என்கிறார் டில்லியிலுள்ள குழந்தையின்மை மற்றும் கருத்தரிப்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் வானி சச்தேவ் கவுர்.

2004-ல் அலைபேசி உபயோகிக்கும் ஆண்களை ஆய்வு செய்தபோது அடிக்கடி அலைபேசியை உபயோகிக்கும் ஆண்களுக்கு 30 சதவீதம் விந்தணு உற்பத்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

அதுமாதிரி அலைபேசி கோபுரங்கள் வெளியிடும் மின்காந்த கதிர்வீச்சினால் புற்றுநோய் பாதிப்பு, தூக்கமின்மை, கை-கால்கள் மரத்துப்போதல், மறதி, எரிந்து விழுதல், எரிச்ச லடைதல், ஒற்றைத்தலைவலி போன்ற நோய்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பாதிக்கின்றன என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment