Thursday, August 11, 2011

வழி தவறும் பள்ளி மாணவிகள்! அதிர்ச்சி தகவல்


பீச், பார்க்குகளில் குடைக்குள் புகுந்தபடியும், பைக்கின் பின் துப்பட்டா மறைவில் காதல் செய்யும் காதல் ஜோடிகள் நமக்கு பல ஆண்டுகளாக பழக்கம்.ஆனால், சென்னையில் கடந்த சில வருடங்களாக இவ்வாறு மறைந்து இருக்கும் பெண்களில் பலர் பள்ளிக் குழந்தைகள் என்பது தான் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம்.
முன்பெல்லாம் பார்க், பீச்சுகளில் விளையாட மட்டுமே வந்த இந்த பள்ளிக் குழந்தைகள் இப்போது காதல், செக்ஸ் என்ற மாயவலையில் சிக்கி வருகிறார்கள். அதோடு மட்டும் இல்லாமல் அதை விட ஒரு படி மேலே கருக்கலைப்புக்கு வந்து நிற்கிறார்கள் இந்த யூனிபார்ம் அம்மாக்கள். சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மெட்ரோ சிட்டியில் ஒருநாளில் 2 லட்சம் கருத்தடை மாத்திரைகள் விற்பனையாகி வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கும் அதே நேரத்தில் இந்த விற்பனையில் ‘சிங்காரச் சென்னை‘ நம் பர் 1 இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மாணவச் சமுதாயமே என்பது கவலை தரும் அம்சம்.

இது பற்றி மனநல ஆலோசகர் டாக்டர் செலின் பேட்டி: ‘‘இந்த பருவ நிலை காதலுக்கு ஹார்மோன் கோளாறு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டி... சுற்றுப்புற சூழல், குடும்ப நிலை மற்றும் பெற்றோர் களின் வளர்ப்பு முறை என எல்லாவற்றையும் சார்ந்தது. அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போகும் சூழலில் தான் இப்போது உள்ள குழந்தைகள் வளர்கிறார்கள். வேலையில் உடன் பணியாற்றும் சக ஆண் நண்பருடன் வெளியே செல்வது, போனில் பேசுவதை பார்த்து வளரும் குழந்தைகள் தடம் மாறிப்போக ஒரு காரணமாகிறது.

இப்போது பெரியவர்கள் முதல் டீன் ஏஜ் குழந்தைகள் வரை எல்லாரையும் கட்டிப் போட்டுள்ளது செல்போன். கேமரா, மெமரி கார்டு, ஈமெயில், படங்களை டவுண்லோட் செய்வது என பல வசதிகள் கொண்ட செல்போன் மார்க்கெட்டில் உள்ளது. இதன் பயன்பாட்டுக்கு பிறகு, குழந்தையின் குழந்தைத்தன்மை தூக்கி எறியப்படுகிறது. மேலும் அவர்களின் உணர்வு வெளிப்பாடுகள் மற்றும் அசாத்திய மனநிலை மாற்றங்கள் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன.

குழந்தைகள் ஒரு களிமண். அதை நாம் அழகான ஒரு பொம்மையாக மாற்றி அமைக்கலாம். அதன் முழு பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமே உள்ளது.

மனரீதியில் பாதிப்பு...

சரஸ்வதி (அரசு பள்ளி ஆசிரியர்) பொதுவாக தனியார் பள்ளியில் இம்மாதிரி பிரச்னை அதிக அளவில் இருப்பதில்லை. அரசு பள்ளியில் மட்டுமே இந்த நிலை அதிகம் இருக்கிறது. கடந்த வாரம் எனது பள்ளி மாணவ மாணவி ஜோடி அதி காலையில் சீருடையுடன் பீச் சென்றுள்ளனர். அவர்கள் 4வது முறையாக போலீஸ் வசம் பிடிபட்டுள்ளனர். கடந்த 3 முறை பெற்றோர் இடத்தில் சொல்லி பயனில்லை என்பதால் பள்ளிக்கு தகவல் அனுப்பினர். அவர்களை பள்ளிக்கு வரச் செய்து இருவரையும் தனித்தனியாக விசாரித்தேன். அப்போது மாணவி கூறியது கேட்டு திடுக்கிட்டேன். மாணவி கூறியதாவது:

‘‘பிழைப்பை தேடி கிராமத்திலிருந்து நாங்கள் சென்னை வந்துள்ளோம். தாய், தந்தை இருவரும் மரம் வெட்டும் வேலை செய்கின்றனர். காலை 7 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 8 மணிக்குதான் வீடு திரும்புவார்கள். நான்தான் சமையல் செய்வேன். காலையில் செய்யும் சாப்பாட்டை இரவிலும் சாப்பிடுவேன்.

மதியம் பள்ளியில் சாப்பிடுவேன். தனிமையாக இருப்பதால் ஆதரவின்றி இருப்பதாக உணருகிறேன். உடல் நிலை சரியாக இல்லாத நேரத்திலும் பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் மனரீதியாக பாதிப்படைகிறேன். சக மாணவர் என்மீது அதிக அக்கறை செலுத்துவதால் அவன் மீது பாசம் வைத்துள்ளேன். பீச் செல்வது தவறு என்று தெரிந்தும் என்னால் அவனுடன் செல்வதை தவிர்க்க முடியவில்லை” என்றாள்.

எனவே, இந்த பிரச்னைக்கு காரணம் பெற்றோர்களே. தனியார் பள்ளிகளில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. பெற்றோர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்களது பிள்ளைகள் குறி த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் அப்படி இல்லை. மதிய உணவுக்காக பிள்ளைகளை படிக்க வைப்பவர்கள் இன்னும் இருக்கத்தான செய்கின்றனர். அந்த நிலை மாறினால் மட்டுமே இது போன்ற பிரச்னை முடிவுக்கு வரும்.
Source: dinakaran.com

1 comment:

  1. miguntha akkarayudan kavanathilkolla vendiya vishayam. Petroregale sinthippeer!
    madurai nanban

    ReplyDelete